அவள்தான் மனைவி........
வாலிப வயது வந்தவுடன்
வாழ்கையை முடிவு செய்து
வளர்த்த வீட்டை மறந்து-இன்பமாய்
வாழ்ந்திட துடித்திடுவாள்
பெற்றோரின் முன்னிலையில்
பேரின்பம் காண வேண்டி
பொறுமையாய் இருந்திடுவாள்-ஆதலால்
பெண்மையை காத்திடுவாள்
திருமணம் முடிந்ததும்
திரும்பியே கையசைத்து
விரும்பிய வாழ்க்கைக்கு-கணவருடன்
விருப்பமுடன் சென்றிடுவாள்
எண்ணியதை தந்திடுவாள்
எண்ணமதை அறிந்திடுவாள்
கண்குளிர அமர்ந்து கொஞ்சி-அவனின்
கண்மூடி விளையாடி டுவாள்
பொன்னே மணியே என்று
போதையை ஏற்றிடுவாள்
பெண்மையை தருவதற்கு-நித்தம்
பொறுமையை வென்றிடுவாள்.
அன்புடன் தந்திடுவாள்
ஆசையாய் உணவளிப்பாள்
அத்தனையும் பகிர்ந்துவிட்டு
அருகிலேயே துணையிருப்பாள்
அவள்தான் மனைவி ! ஆயுட்காலத் துணைவி !!
வாழ்கையை முடிவு செய்து
வளர்த்த வீட்டை மறந்து-இன்பமாய்
வாழ்ந்திட துடித்திடுவாள்
பெற்றோரின் முன்னிலையில்
பேரின்பம் காண வேண்டி
பொறுமையாய் இருந்திடுவாள்-ஆதலால்
பெண்மையை காத்திடுவாள்
திருமணம் முடிந்ததும்
திரும்பியே கையசைத்து
விரும்பிய வாழ்க்கைக்கு-கணவருடன்
விருப்பமுடன் சென்றிடுவாள்
எண்ணியதை தந்திடுவாள்
எண்ணமதை அறிந்திடுவாள்
கண்குளிர அமர்ந்து கொஞ்சி-அவனின்
கண்மூடி விளையாடி டுவாள்
பொன்னே மணியே என்று
போதையை ஏற்றிடுவாள்
பெண்மையை தருவதற்கு-நித்தம்
பொறுமையை வென்றிடுவாள்.
அன்புடன் தந்திடுவாள்
ஆசையாய் உணவளிப்பாள்
அத்தனையும் பகிர்ந்துவிட்டு
அருகிலேயே துணையிருப்பாள்
அவள்தான் மனைவி ! ஆயுட்காலத் துணைவி !!
மனைவியை பெருமைபடுத்திய கவிதை நன்று.வாழ்த்துக்கள்
ReplyDeleteஎல்லோரும் இந்த நேரத்தில் முதலில் மரியாதை செய்ய வேண்டியது அம்மாவும் அம்மாவிர்க்குமேல் நம்மை கவனித்துக் கொள்ளும் மனைவிக்கும் மரியாதை செய்ய வேண்டும்
Deleteமனைவியைப் போற்றிய மகிழ்வு தந்த கவிதை. அருமை!
ReplyDeleteநன்றிங்க நண்பரே.இப்போதைக்கு முதல் மரியாதை அவளுக்குத்தான்
Deleteமகளிர் தின நல்வாழ்த்துக்கள்...
ReplyDelete...
...
...
எல்லா நாளும்....
உண்மை உண்மை உண்மையைத் தவிர வேறொன்றுமில்லை
Deleteவாழ்வின் ஆயுட்கால தோழியாம் மனைவி பற்றிய
ReplyDeleteஅழகிய கவிதை ஐயா...
நன்றிங்க மகேந்திரன்,உண்மைதான் ஆயுட்கால தோழிதான்
Deleteமனைவியை அழகாய் பெருமை படுத்திவிட்டீர்கள். நன்றி!
ReplyDeleteமனைவிக்கு மரியாதை மனிதம் உள்ளவர்களால் எப்போதுமே போற்றப்படும்
Deleteஎன் சக்கரைக்குட்டி கவிஞர் நீங்க தான்
Deleteமனைவியின் அருமையை சொல்லும் கவிதை அருமை.
ReplyDeleteஉண்மைதான்.அடுத்ததை பாருங்கள் அப்புறமாய் கேளுங்கள்
Deleteசாமீ....எனக்கொரு உம்மை தெரிஞ்சாவனும்...சா...மீய்
Deleteஎப்படியோ உங்கள் மனைவி இப்படித்தான் இருக்க வேண்டும் எனத் தெரிவித்து விட்டீர்கள்.... ஒரு கணவன் எப்படி இருக்க வேண்டுமென்றும் சொன்னால் நன்றாக இருக்கும்.. கவியாழி கண்ணதாசன் சார்
ReplyDeleteஇப்படித்தான் இன்னும் இருக்கிறாள்.அவளுக்கேற்ற கணவனாய் இருப்பதால்தான் எல்லாமே முடிகிறது?
Deleteநல்ல புரிதல் இதுதான் பெண்ணுக்கு வேண்டும் நன்றி உங்கள் துணைவியாருக்கு வாழ்த்துக்கள்
ReplyDeleteநன்றிங்க ,உங்களுக்கும் மகளீர் தின வாழ்த்துக்கள்.
Deleteமனைவிக்கு மகுடம் சூட்டும் கவிதை அருமை.
ReplyDeleteஆம்அம்மா முதல் மரியாதை.நண்பனாய் மனைவியாய் அம்மாவாய் இருப்பது அவள்தானே
Deleteபெண்மையை இன்றுமட்டுமல்ல என்றும் இப்படி எல்லோரும் நினைத்தால் அருமை. உங்கள் கவிதை மிக அழகு. வாழ்த்துக்கள் சகோதரரே!
ReplyDeleteபெண்மையின் அருமைபேசி
மென்மையாய் அகமகிழ்ந்து
மனைவியைப்போற்றிட்ட கவியே
இணையில்லையே எவருமுமக்கு...
நன்றிங்க சகோதரி.எல்லோருமே நினைப்பார்கள் சில சமயம் நடப்பதில்லை .உங்கள் வாழ்த்துக் கவிதைக்கு நன்றி.
Deleteஉலக மகளிர் தினம்” ( INTERNATIONAL WOMEN’S DAY - முன்னிட்டு ஒரு சிறப்பு கவிதை! அவள்தான் மனைவி ! ஆயுட்காலத் துணைவி !சிறப்பாகவே உள்ளது.!
ReplyDeleteநன்றிங்க இளங்கோ சார். இப்போதைக்கு அவங்கதானே எல்லாமுமாய் இருப்பவர்கள் அதனால் அவர்களை போற்றுவதுதானே சரியாய் இருக்கும்
Deleteசகாப்,கித்னா அச்சா பீலீங்ஸ் !! பஹூத் அச்சா ஹே!! வெரிகுட் ஹே! பஹூத் சூப்பர் ஹே!
Deleteகாலையில் எழுந்ததும் பம்பரமாய்
ReplyDeleteசுற்றிச் சூழல்ன்றிடுவாள் மத்தியாணம்
நான் உன்னும் சாம்பாருக்கு இப்போது
அவள் ஆடிஓடி அழைந்திருப்பாள்
அலுவலகத்தில் அவள் செய்ய இருக்கும்
வேலைகளை நினைத்தபடியே என்
சட்டை துணியெல்லாம் தேய்த்திருப்பாள்
வட்ட வட்ட நிலவை போல
தேய்ந்து தேய்ந்து வளர்ந்திடுவாள்
கண்ட கருமத்தை நான் எழுதினாலும்’
கவிதை அருமை என்றிடுவாள் அந்தப்
பொய்க்காக மனதில் அழுதிடுவாள்
சிமோன்.
ஆயுட் கால துணைவி அழகிய வரிகள்.
ReplyDeleteஉண்மைதானே .உங்களுக்கும் எனது மனமார்ந்த மகளீர்த்தின வாழ்த்துக்கள்
Deleteபெண்ணை போற்றும் கவிதை அருமை.
ReplyDeleteஉண்மைதான் மாதேவி.மகளீர் தினத்தை முன்னிட்டு எழுதியது.
Deleteகவிதை மிக அழகு...பரஸ்பரப்புரிதல் இருந்தால் வாழ்க்கை இன்பமயமாக இருக்கும்....
ReplyDeleteஉண்மைதான் அன்பு மட்டுமே அளவில்லா ஆனந்தத்தை தரும் ரெவரி
Delete//ஆயுட்காலத் துணைவி //
ReplyDeleteஎல்லாவற்றையும் இதுவே சொல்லி விட்டது.
நன்று
ஆம் .நண்பரே உங்கள் வாழ்த்துக்கும் நீங்கள் வந்தமைக்கும் நன்றி
Deleteஅருமையாய் மனைவியை சிறப்பித்து விட்டீர்கள்! வாழ்த்துக்கள்!
ReplyDeleteஉண்மைதான் நண்பரே.எல்லோருமே மனைவியை மகிழ்ச்சியாய் வைத்துகொள்ள வேண்டும்
Deleteஅருமை... அருமை....
ReplyDeleteபெண்மையைப் போற்றுதல்
உண்மையில் அழகென்றால்
தன்னவளைப் போற்றுதலோ
முன்னிலும் அழகானதே!
வாழ்த்துக்கள் கவியாழி ஐயா.
உண்மைதான்.முதலில் அம்மா இப்போது மனைவி அதுதானே முறை.
Deleteஅழகிய சிந்தனை மகளீர்த்தினத்தை சிறப்பிக்கும்
ReplyDeleteமற்றுமொரு சிறந்த கவிதை .தொடர வாழ்த்துக்கள் ஐயா .
மிக்க நன்றி பகிர்வுக்கு .
உங்களின் வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றி.
Deleteமனைவி பெருமை அருமை !
ReplyDeleteதொடர வாழ்த்துகள்...
நன்றிங்க நிஜாம்.உங்களின் வருகையும் வாழ்த்தும் என்னை நிச்சயம் ஊக்கப்படுத்தும்
Deleteஅருமை!
ReplyDeleteநன்றிங்க அய்யா
Deleteமனைவிக்கு, ஒரு பெண்ணிற்கு அவள் வலியறிந்து, பெருமை புரிந்து, அழகிய மகுடம் சூட்டிய அருமையான கவிதை!
ReplyDeleteஅன்னைக்குப் பின் மனைவிதானே எல்லாமுமாய் இருக்கிறாள்
Deleteஅருமை!
ReplyDeleteநன்றிங்க நீங்க வந்ததுக்கு மகிழ்ச்சி ஜனா
Deleteமகளிர் தினத்தில் மனைவியை கவிதை என்னும் அழகிய சிம்மாசனத்தில் உட்கார வைத்து சிறப்பித்திருக்கிறீர்கள்.
ReplyDeleteபாராட்டுக்கள்!
அம்மாவுக்கு அடுத்தடுத்து எல்லா பணிவிடையும் செய்பவள் மனைவிதானே.
Deleteநீங்க ஓல்ட் ஸ்கூல் ஆப் தாட்ஸ்-ல இன்னும் இருக்கீங்களே . மனைவி என்ன பணிவிடை செய்யவேண்டுமா ?
Deleteமாசிலாமணி
செங்கல்வராயன்புதூர்