தெய்வங்கள்

தெய்வங்கள்

ஆத்திரக்காரனுக்குப் புத்தி மட்டு

ஆத்திரக் காரனுக்கு புத்திமட்டு  என்ற பழமொழி  பெரும்பாலானவர்களுக்கு தெரிந்ததே  இருப்பினும் இன்றைய தலைமுறையினரில் பலருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை அதனால் எனக்கு தெரிந்த சிலவற்றை உதாரணங்களுடன்  இங்கு கூற உள்ளேன்.

 அவசரக்காரனும் ஆத்திரக்காரனும் ஒண்ணுதான் .அதனால்தான் புத்தி மட்டு என்று சொல்கிறார்கள் மட்டு என்றால் குறைவு அதாவது அறிவு குறைவு என்று அர்த்தம். அவசரத்திலும் ஆத்திரத்திலும் செய்யும்  செயல்கள் சரியான முடிவைத்தராது. திட்டமிடல் இல்லாததனால் எல்லாமே நிகழ்வுகளும் நிச்சயமான வெற்றியைத் தராது.அதனால் யோசித்து செய்யும் செயல்கள் சரியாய் இருக்கும்.

தொழில் ,படிப்பு ,பயணம்,ஆராய்ச்சி,படிப்பில் ஆர்வமுள்ள அனைவருமே திட்டமிட்டு  நல்ல வெற்றியை பெறுகிறார்கள் அதனால் அவர்கள் செய்த உழைப்பு எல்லோருக்குமே பயனுள்ளதாய் இருக்கும்.இதில் ஆத்திரமோ அவசரமோ இல்லாததினால் எல்லாமே வெற்றியை முடிகிறது ,இங்கு அவசரமாய் எந்த முடிவும் எடுப்பதில்லை ஆழ்ந்து  சிந்தித்து செய்கிறார்கள்

 பெரும்பாலான அசம்பாவிதங்கள் கொலை.கொள்ளை , கற்பழிப்பு ,திருட்டு போன்றவைகள் இங்கு நான் குறிப்பிட்டபழமொழிக்குப்பொருந்தும்.
குறிப்பிட்ட எல்லாமே ஆத்திரத்திலும் அவசரத்திலும் செய்வன ஆகும். பெரும்பாலும் அந்த நேரங்களில் மனச் சிதைவு ஏற்பட்டே நடைபெறுகிறது.
ஏதேனும் ஒரு சிறு நிகழ்வே  இவ்வாறானவர்களை செய்ய தூண்டுகிறது.

இதில் கொள்ளை திருட்டு இரண்டும் தனி ரகம் இதில் திட்டமிடல் இருந்தாலும்
அவசரத்தில் செய்யும் காரியத்தினால் ஏதாவதொரு துப்பு கிடைத்து விடும். வெளியில் யாரேனும் பார்த்து விடுவார்கள் அல்லது பலபேரிடம் சில சமயம் அல்லது கூட்டத்தில் ஒருவராவது எங்கேனும் உளறி மாட்டிக்கொள்வார்கள்

கொலை,கற்பழிப்பு இரண்டுமே அவசரத்தில் அள்ளிதெளித்தக் கோலம்போல் எதிர்பாராமல் நிகழ்ந்துவிடும்.உணர்ச்சி வசப்பட்டு எதையும் யோசிக்காமல் செய்யும் செயலே இவ்வாறான நிகழ்வுக்கு அச்சாரமாய் அமைந்துவிடுகிறது இதனால் இழப்பு இருபக்கமும் இருந்தாலும் பாதிக்கப் பாடுபவரின் இழப்பு அதிகமானதாயும் வருத்தமானதாயும் இருக்கும்.

ஆதலால் எதிலும் ஆத்திரமோ அவசரமோ இல்லாமல் புத்திசாலிதனமாக ஈடுபட்டால் நல்ல விஷயம் எதிலும் வெற்றிதான் . அதே சமயம் அழிவுக்கு காரணம் அவசரமும் ,ஆத்திரப் படுதலே ஆகும் .எல்லாமே நன்றாக அமைய ஆத்திரப்படாமலும் அவசரப்படமாலும் இருந்தால் நல்லது.

இங்கு சிலவற்றைத்தான் கூற முடிந்தது  பலவற்றை தொலைகாட்சி,
வானொலி,செய்தித்தாள் மூலமாக பலரும் அறிந்திருக்க வாய்ப்புண்டு அதில் நாள் குறிப்பிட்டுள்ள பழமொழியின் அர்த்தம் புரிந்துவிடும்.

Comments

  1. கோபமும், பதட்டமும் இல்லாமல் தவிர்த்தால் நிறைவான மகிழ்ச்சி கிடைக்கும்!

    ReplyDelete
  2. நல்ல பதிவு + பகிர்வு சகோதரரே!

    பொறுமை என்பதை உயிர்மூச்சாகக் கொண்டிருந்தால் ஏனையவை எல்லாம் அடங்கிவிடும், அகன்றுவிடும் என நினைக்கிறேன்.
    அதற்காக எப்பவுமே உணர்வில்லாமல் பொறுமையை கடைப்பிடிக்கிறேன் என்றிருக்காமல் சந்தற்பம் சூழ்நிலைக்கேற்றவாறு சயோசிதமாக நடக்கும் மனப்பக்குவத்துடனும் இருந்திடல் அவசியம்தானே.

    சிந்திக்கவைக்கும் நல்லவிடயம். பகிர்விற்கு நன்றி!

    ReplyDelete
    Replies
    1. பொறுமை கடலினும் பெரிது .ஆனால் கொடுமை அதைவிடக் கொடிது

      Delete
  3. நீண்ட நாள் சந்தோசமாக, ஆரோக்கியமாக வாழ வேண்டுமானால் நிச்சயம் கோபத்தை கோபப்படாமல் குறைத்துக் கொள்ள வேண்டும்...

    சும்மாவா...? வெகுளாமை என்று அதிகாரமே நம்ம திருவள்ளுவர் எழுதி உள்ளாரே...

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான் கோவமே எல்லோரின் எதிரி.

      Delete

  4. செய்யும் செயல்களிலும் அவரவர் திறமையிலும் நம்பிக்கை குறைவாக இருக்கும்போது அவசரமும் ஆத்திரமும் முன் நிற்கும். நான் அடிக்கடிச் சொல்வதும் கடைபிடிப்பதும் “ திட்டமிட்டுச் செய்; திட்டமிட்டதைச் செய் “ என்பதாகும் நல்லதோர் பதிவுக்கும் பகிர்வுக்கும் பாராட்டுக்கள்.

    ReplyDelete
    Replies
    1. நன்றிங்க அய்யா. எல்லாமே சொல்லத்தான் முடியுது ஆனால் செய முடிவதில்லையே

      Delete
  5. நல்ல அலசல்! ஆத்திரமும் அவசரமும் என்றுமே அவதிதான்! நன்றி!

    ReplyDelete
    Replies
    1. பொறுமைதான் மருந்து

      Delete
  6. ஆத்திரக் காரனுக்கு புத்திமட்டு..//

    ஆத்திரமும் கோபமும்.
    மனிதனை தன்னிலை மறக்கசெய்யும்.
    முடிந்தவரை தவிர்ப்பதே நல்லது,
    வராமல் பார்த்துக்கொள்வது இன்னும் சிறந்தது..

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கு நன்றி. உண்மைதான் தவிர்ப்பதே சிறந்தது

      Delete
  7. ஆத்திரம் செயல் திறனை குறைத்துவிடும்.பாரதூரமான விளைவுகளையும் கொண்டுவரும்.

    நல்ல பகிர்வு.

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான் .சில சமயங்களில் முடியவில்லையே

      Delete
  8. மிக நல்ல பதிவு விளக்கம் நன்றி

    ReplyDelete
    Replies
    1. நன்றிங்க ,தவறிருந்தா திருத்திக்கிறேன்

      Delete

Post a Comment

தங்களின் கருத்துக்கள் பயனுள்ளதாய் இருக்கும்...

ரசித்தவர்கள்

பதிவுகள் இதுவரை

Show more