பருகச்சொல்லி அழைப்பாரா.....
இமை இரண்டும் சேர்ந்திருக்க
இதழிரண்டில் தேனொழுக
அமைதியான ஆற்றலுடன் -அவன்
அடியெடுத்து வைத்தவுடன்
தடைசொல்லி மறுப்பாரா
தயவினையும் வெறுப்பாரா
இடையிடையே சிணுங்கி-இன்பமதை
இறுக்கமின்றி விடுவாரா
சிரிப்புடனே செவ்விதழை
சினுங்காமல் கடிப்பாரா
சின்னச்சின்ன அசைவுகளை-வெறுத்து
சினத்துடனே இழப்பாரா
கதை தொடர காத்திருந்து
கதவை மூடி வைப்பாரா
படையெடுத்து வருபவரை-ஏற்று
பாங்குடனே வைப்பாரா
பத்துமாதம் முடியுமுன்னே
பாசமதை தடுப்பாரா
பழுத்துவிட்ட கனியதனை-குழந்தையை
பருகச்சொல்லி அழைப்பாரா
இதழிரண்டில் தேனொழுக
அமைதியான ஆற்றலுடன் -அவன்
அடியெடுத்து வைத்தவுடன்
தடைசொல்லி மறுப்பாரா
தயவினையும் வெறுப்பாரா
இடையிடையே சிணுங்கி-இன்பமதை
இறுக்கமின்றி விடுவாரா
சிரிப்புடனே செவ்விதழை
சினுங்காமல் கடிப்பாரா
சின்னச்சின்ன அசைவுகளை-வெறுத்து
சினத்துடனே இழப்பாரா
கதை தொடர காத்திருந்து
கதவை மூடி வைப்பாரா
படையெடுத்து வருபவரை-ஏற்று
பாங்குடனே வைப்பாரா
பத்துமாதம் முடியுமுன்னே
பாசமதை தடுப்பாரா
பழுத்துவிட்ட கனியதனை-குழந்தையை
பருகச்சொல்லி அழைப்பாரா
அவரின் மனநிலையைப் பொறுத்து...
ReplyDeleteஅன்பரே புரிஞ்சிகிட்டீங்க நன்றி
Deleteவெள்ளைத்தாளில் சிந்திய வண்ணமையைப்போல்
ReplyDeleteஎண்ணத்துள் சூட்சுமமாய் இயற்றிவிட்டீர் ஓர்கவிதை
வெள்ளமென அணையுடைத்து வியாபிக்கும் உம்கருத்து
திண்ணமாய் திரட்டிடுமே வாழ்த்துடன் புகழையுமே...
வாழ்த்துக்கள் சகோதரரே!
உங்களின் ஆழமான கருத்து பதிந்தமைக்கு மிக்க நன்றி
Deleteஇலக்கியத்துடன் கலந்துவிட்டீர்கள் இந்த கவிதையில்
ReplyDeleteநன்றிங்க .உங்களின் சிந்தனைக்கு நன்றி
Deleteநிலாவைக் கானாது நீண்ட நேரம் நின்றிருந்தேன்.காரிருள் கருப்பாக சூழ்ந்திருந்தது. யாரோ தோளில் தட்டியது போல் உணர்ந்து திரும்பிப் பார்த்தால் நிலா நீல நிற டி சர்டில். இங்கே என்ன செய்கிறாய் என்றேன். சும்மா வாக்கிங் வந்தேன் என்று சொல்லி விட்டு வானில் ஏறித் தேய ஆரம்பித்தது. அம்மா சொன்னாள், அம்மாவசை அன்னைக்கு வெளியே போகதேன்னு சொன்னா கேட்டியா ? என்று
ReplyDeleteகவிதை நல்லாருக்கா சார்
சிறப்பான படைப்பு! வாழ்த்துக்கள்!
ReplyDeleteநன்றி,சுரேஷ் வாழ்த்துக்கு நன்றி
Deleteஆசைகள் பலவிதம்!
ReplyDeleteஆசையிருக்கு உண்மைதான் அய்யா
Deleteஅழகான கவிதை ஐயா...
ReplyDeleteஅன்புருவாம் இச்செல்வத்துக்கு
அலையாய் அலைபவர் கோடியுண்டு
இன்னலென பழித்து
நசுக்குவோர் பலருண்டு....
சுயமும் சூழலும்
முடிவேடுக்க்றதோ...
உண்மைதான் தோழரே
Deleteஉலகமிதைச் சொல்லுதே
நல்ல சொல்லை கூறி
நயமாய் சொன்னமைக்கு
நன்றி நன்றி.
ReplyDeleteவணக்கம்!
தமிழைப் பருகிடவே தந்தகவி யாழி
அமிழ்தம் சுரக்கம் அறி!
கவிஞா் கி. பாரதிதாசன்
தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு
நயமிகுந்த வார்த்தையாலே
Deleteநாளெல்லாம் கவிப் படைக்கும்
அமுதமொழி கவிஞரே
அருமை அருமை
இருவரின் கவிதையையும்
Deleteநெஞ்சு முட்ட முட்ட
பருகினேன் ! ஆழ்கடலில் மூழ்கினேன்.
கவிஞர். ஞானசாமி
செயலர்: செங்குட்டுவன் இலக்கியபேரவை. சேத்தியாதோப்பு