தெய்வங்கள்

தெய்வங்கள்

அம்மா.....வருவாயா? (மீண்டும் )அன்பை .....தருவாயா?

http://tamilmanam.net/உயிர் பிடித்து உடல் கொடுத்து
உள்ளத்தில் நல் அன்பை விதைத்து
நல்பிள்ளையாய் நாளும் வளர்த்து-என்னை
செல்லமாய்  நன்கு  சீராட்டி வளர்த்தவளே

அப்பனை அடையாளம் காட்டி எனக்கு
அன்பையும் பண்பையும் ஊட்டி வளர்த்து
அண்ணன் தம்பி  உறவுகளும் சொல்லி-உரிமைக்கு
அக்கா தங்கை கடமைகளும் போதித்தாய்

கதைசொல்லி தூங்க வைப்பாய்
கருத்துக்களை பேசவைப்பாய் நாளும்
காண்பவர் எல்லோரின் உறவு சொல்வாய்-விழித்ததும்
கண்டவரின்  கண்படுமென பொட்டு வைப்பாய்

தான் உணவு உண்ண மறந்தாலும்
நான்  தூங்க தாலாட்டு சொன்னவளே
ஏனென்ற கேள்வி இன்றி எதிலும்-தப்பின்றி
எந்நாளும் என்னுள் அன்பை சேர்த்தவளே

கள்ளமில்லா அன்பை  கனிவுடன் தந்தவளே
கருவாக  என்னை உருவாக்கி சுமந்தவளே
பெரிதாக  அன்பும்  குடும்ப நெறியும்-குறைவின்றி
உருவாக்கி வளர்த்தவளே உலகை உணர்தியவளே
 
சொல்லோர்கள் தப்பாய் என்னை  சொன்னாலும்
எல்லோரையும் பதில்  எச்சரித்து அனுப்பிடுவாய்
செல்லமாக செய்யாதே என கண்கலங்குவாய்-யாரின்று
மெல்ல புரியவைத்து  மேனியை தட்டுவார்கள்

என்னால் எழுத முடியவில்லை உருவாய்
எதிரில் நீயே நிற்பதுபோல்எண்ணுகிறேன்
சொன்னால் வார்த்தையில் அடங்காது-இறந்த
சோகம்  என்னில் மறவாது  தீராது

பின்நாளில்  உன் அன்பை யாரும் தருவாரோ
பெறுவேனோ இல்லை பித்தனாகி விடுவேனோ
 புதுவாழ்வு கிடைக்காதோ  புரியாமல் -தவிக்கின்றேன்
தெரியாமல் இன்னும் தினமும் அழுகின்றேன்

மறுவாழ்வு கிடைக்காதோ  உனக்கு-மீண்டும்
மகனாக பிறப்பேனோ மறுபிறவியாவேனோ
என்நாளை அறிவேனா உன்னிடம் வருவதற்கு-இல்லை
எனைத்தேடி  வருவாயோ என்னுயிரை பெறுவதற்கு

கண்ணீர் என்னை கம்மச் செய்கிறது
கண்கள் சிவந்து குளமாய் மாறுவதை
 உன்னால் பார்த்துப் பொறுப்பாயா  இல்லை -என்
 உயிரை உன்னுள் எடுத்து  செல்வாயா 

Comments

 1. அருமை ஐயா..!

  தாயின் அன்பையும், அரவணைப்பையும், அவள் அருகே இல்லாத போதே உணர முடியும்.

  ஒவ்வொரு வரியையும் அனுபவித்து எழுதியிருக்கிறீர்கள்..!

  மனங்கவரந்த கவிதை இயற்றி பகிர்ந்தமைக்கு என்னுடைய நன்றி பாராட்டுதல்கள்..!

  ReplyDelete
  Replies
  1. நன்றி நண்பரே ,இதை உங்களின் நண்பர்களையும் படிக்க சொல்லுங்கள்,கருத்துக்கு நன்றி

   Delete
 2. சொல்லோர்கள் தப்பாய் என்னை சொன்னாலும்
  எல்லோரையும் பதில் எச்சரித்து அனுப்பிடுவாய்
  செல்லமாக செய்யாதே என கண்கலங்குவாய்-யாரின்று
  மெல்ல புரியவைத்து மேனியை தட்டுவார்கள்


  உண்மை தாய் போல் நம்மை தாங்கிக் கொள்பவர்கள் யாரும் இல்லை...

  அருமையான பதிவு தோழமையே

  ReplyDelete
  Replies
  1. நன்றி நட்பே,புதிதாக எழுதும் எனக்கு உங்களின் இந்த கருத்து ஊக்குவிக்குமென நம்புகிறேன்.

   Delete
  2. என்ன செய்ய எல்லோருக்கும் முதுமையும் தொடந்து மரணமும் உண்டே-கருத்துக்கு நன்றி நட்பே

   Delete
 3. அருமையான கவிதை.
  அருமையான முயற்சி.
  வாழ்த்துகள்.
  எனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
  நன்றி.

  ReplyDelete
  Replies
  1. நன்றி ஐயா ,இன்னும் கண்ணீர் தான் வருகிறது

   Delete
  2. அன்னைக்கு நிகர் அவளே, உங்கள் உணர்வு பூர்வமான
   வரிகள் எல்லோருக்கும் அவரவர் அன்னையை நினைவுபடுத்தும், அருமை.

   Delete
  3. அன்னைக்கு நிகர் அவளே, அருமையான உணர்வுகள்,அவரவர் அன்னையை நினைவு படுத்துகிறது,கண்கள் கலங்குகின்றன,

   Delete
  4. என்னை நட்பாக இணைத்து கொண்டமைக்கு நன்றி
   தொடர்ந்து படித்து கருத்து தெரிவியுங்கள்
   எனக்கு ஊக்கமாகவும்,கவிதை எழுத ஆக்கமகவும் இருக்கும்
   நன்றியுடன்
   இராம.கண்ணதாசன்
   கவியாழி

   Delete
 4. உயிருடன் இருக்கும் வரை உள்ளத்தில் கனன்று கொண்டிருக்கும் நெருப்பு அன்னையின் அன்பும் பாசமும்! இது ஒவ்வொரு ஜீவனின் உயிர்மூச்சாய் அகத்தில் இருப்பது. அருமையான கவிதையின் பகிர்வுக்கு நன்றி!

  ReplyDelete
  Replies
  1. நன்றி நட்பே தங்களின் கருத்துக்கு நன்றி
   தொடந்து பாருங்கள் கருத்துக்களை பகிருங்கள்

   Delete
 5. பாராட்டுதல்களும் தொடர வாழ்த்துக்களும்!

  ReplyDelete
 6. anbu tholarukku vanakkam
  edhu pondru melum pala kavidhaikal elutha ungalai manamara vazhdhukiren...

  ReplyDelete
 7. அம்மா என்று சொல்லாத உயிர் இல்லை அம்மாவின் புகழை சொல்வதற்கு நன்றி

  ReplyDelete
  Replies
  1. அம்மாவை புகழ்ந்தாலும் அவர்களின் அன்பை கொச்சைபடுத்தும் எனவே நினைவுகளை பகிந்துகொல்வதே சுகமென நினைக்கிறேன்

   Delete
 8. அம்மா என்று சொல்லாத உயிர் இல்லை அம்மாவின் புகழை சொல்வதற்கு நன்றி

  ReplyDelete
  Replies
  1. அம்மாவை மறுப்பவன் மனிதனல்ல
   கருத்துக்கு நன்றி

   Delete
 9. தெய்வத்தின் நடமாட்டமாய் அம்மா கண்ணெதிரில்...
  உயிர்ப்பூவை உலகுக்கு உயிர்ப்புத்து காட்டும் அற்புத தெய்வம்...
  ஊண் உறக்கம் மறுத்து நம்மை வயிற்றிலும் மனதில் தாங்கி
  பெற்றதும் அன்பையும் கல்வியையும் ஒழுக்கத்தையும் ஊட்டி...
  காண்போர் எல்லாம் பெருமிதமாய் சொல்லும்படி வளர்க்கும் ஆசான்
  நல்லவற்றை இனம் காட்டி, தீயவற்றில் இருந்து கவசமாய் காத்து
  நல்லதொரு பிள்ளையை உலகுக்கு தந்து சென்றிருக்கும் அன்னையின்
  ஆத்மா கண்டிப்பாக உங்கள் மூச்சில் கலந்திருக்கிறது... ஆசீர்வதிக்கிறது
  உங்கள் குழந்தையாக அவதரித்திருக்கிறது...உங்களிடமே அன்னை இருக்கிறார்
  மகளாய், நீங்கள் செய்யும் நல்லவைகளாய், உங்கள் நேர்மையாய், உங்கள் அன்பாய்
  உங்கள் அன்னை உங்களிடமே இருக்கிறார்....
  அன்னை இல்லை என நினைத்து கலங்காதீர் சகோ...
  தெய்வமாய் ஆன அன்னை இன்னமும் தன் ஆன்மாவை
  உங்களுடனே இருக்கவைத்திருக்கும் அன்பு தெய்வத்தை நினைத்து
  அவருக்காக எழுதிய இந்த பாமாலை கைக்கூப்பி வணங்கவைக்கிறது
  அன்னையின் அன்பு என்றும் ஆசியாக உங்களிடம் நிலைத்திருக்க என் அன்புபிரார்த்தனைகள்..

  அருமையாய் அழகாய் அன்னைக்கு சமர்ப்பித்த கவிதை வரிகள் சிறப்பு சகோ. அன்புவாழ்த்துகள்.

  ReplyDelete
  Replies
  1. கருத்துக்கு நன்றி,
   நல்லதொரு பிள்ளையை உலகுக்கு தந்து சென்றிருக்கும் அன்னையின்
   ஆத்மா கண்டிப்பாக உங்கள் மூச்சில் கலந்திருக்கிறது... ஆசீர்வதிக்கிறது

   Delete
 10. தெய்வத்தின் நடமாட்டமாய் அம்மா கண்ணெதிரில்...
  உயிர்ப்பூவை உலகுக்கு உயிர்ப்புத்து காட்டும் அற்புத தெய்வம்...
  ஊண் உறக்கம் மறுத்து நம்மை வயிற்றிலும் மனதில் தாங்கி
  பெற்றதும் அன்பையும் கல்வியையும் ஒழுக்கத்தையும் ஊட்டி...
  காண்போர் எல்லாம் பெருமிதமாய் சொல்லும்படி வளர்க்கும் ஆசான்
  நல்லவற்றை இனம் காட்டி, தீயவற்றில் இருந்து கவசமாய் காத்து
  நல்லதொரு பிள்ளையை உலகுக்கு தந்து சென்றிருக்கும் அன்னையின்
  ஆத்மா கண்டிப்பாக உங்கள் மூச்சில் கலந்திருக்கிறது... ஆசீர்வதிக்கிறது
  உங்கள் குழந்தையாக அவதரித்திருக்கிறது...உங்களிடமே அன்னை இருக்கிறார்
  மகளாய், நீங்கள் செய்யும் நல்லவைகளாய், உங்கள் நேர்மையாய், உங்கள் அன்பாய்
  உங்கள் அன்னை உங்களிடமே இருக்கிறார்....
  அன்னை இல்லை என நினைத்து கலங்காதீர் சகோ...
  தெய்வமாய் ஆன அன்னை இன்னமும் தன் ஆன்மாவை
  உங்களுடனே இருக்கவைத்திருக்கும் அன்பு தெய்வத்தை நினைத்து
  அவருக்காக எழுதிய இந்த பாமாலை கைக்கூப்பி வணங்கவைக்கிறது
  அன்னையின் அன்பு என்றும் ஆசியாக உங்களிடம் நிலைத்திருக்க என் அன்புபிரார்த்தனைகள்..

  அருமையாய் அழகாய் அன்னைக்கு சமர்ப்பித்த கவிதை வரிகள் சிறப்பு சகோ. அன்புவாழ்த்துகள்.

  ReplyDelete

 11. தாயன்பு கடலைப் போன்றது !தாயுக்கு நிகர் தாய்தான் கவிதை அருமை! வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. நன்றி ஐயா,
   தங்களின் வயதுக்கும் இன்னும் எழுதி வருகிறீர்கள் உங்களை போன்ற நல் ஆசிரியர்களின் அயராத உலப்பினால் தான் இன்னும் தமிழ் வாழ்ந்து கொண்டிருக்கிறது .இல்லையேல் ஹிந்தியும்,சமஸ்கிரதமும் நம்மைஎல்லாம் விழுங்கி விட்டிருக்கும்

   உங்களின் ஆசியோடு மரபுவழி கவிதையை தொடர விரும்புகிறேன்
   எனவே ஏதேனும் பிழைகள் இருந்தால் சுட்டி காட்டி செம்மை படுத்துங்கள்

   Delete
 12. அய்யா தாயின் அன்புக்கு ஈடு இணை ஏதும் இல்லை .தங்கள் கவிதை ஓர் காணிக்கை எல்லா அன்னைகளுக்கும் .
  நன்றியுடன் கருப்பசாமி

  ReplyDelete
  Replies
  1. This comment has been removed by the author.

   Delete
  2. ஐயா தங்களின் கருத்துக்கு நன்றி
   தொடர்ந்து கேள்வி கேளுங்கள்.

   Delete
 13. வாழ்த்துக்கள் தோழரே...
  உங்களுடைய ஆக்கங்கள் மேலும் மேலும் வளர எனது வாழ்த்துக்கள்...

  ReplyDelete
  Replies
  1. நன்றி தோழியே ,மேலும் படியுங்கள் கருத்தை பகிருங்கள்

   Delete
 14. தங்களின்இந்தப் படைப்பை வலைச்சரத்தில் பகிர்ந்துள்ளேன். வாருங்கள் ஐயா!http://blogintamil.blogspot.in/2012/12/blog-post_20.html நன்றி!-காரஞ்சன்(சேஷ்)

  ReplyDelete
  Replies
  1. நன்றி.
   நீண்ட நாட்களுக்குப் பிறகும் கருத்து தெர்ரிவிதமைக்கும் வந்தமைக்கும் நன்றி நான் சென்று பார்த்தேன் வேர்ரோண்டு பிரரசுரமாகி உள்ளது

   Delete
 15. அம்மா!...இந்த மூன்றெழுத்துக்குத்தான் எத்தனை சக்தி.
  எம் மூச்சு, உயிர், உடல், ஆன்மா, எம் வாழ்வு இப்படி அத்தனையும் அனைத்தும் அவள் தந்ததுதானே...

  அந்த அன்னையின் அன்பை அவளின் பிரிவை மிக உணர்ச்சியுடன் அருமையாக கவியாக்கமாகத் தந்திருக்கின்றீர்கள்...உங்கள் வலியை ரசிக்கவில்லை ஆனால் கவிதையை ரசித்தேன்...

  அருமையான பகிர்வுக்கு மிக்க நன்றி!

  ReplyDelete
  Replies
  1. உங்களின் வருகைக்கு நன்றிங்க

   Delete
 16. கவிதைத் தொகுப்புக்கு நல்வாழ்த்துகள்!

  ReplyDelete
  Replies
  1. நன்றிங்க ராமலக்ஷ்மி

   Delete
 17. இன்று தான் படிக்க நேர்ந்தது உருகி எழுதி இருப்பது
  உள்ளம் தொட வைக்கிறது.

  ReplyDelete
  Replies
  1. அம்மாவைப் பற்றி சும்மா சொல்லமுடியுமா?

   Delete
 18. படித்தேன் ஆனந்தத்தில் மிதந்தேன்!!!

  ReplyDelete
  Replies
  1. நன்றிங்க நண்பரே தொடர்ந்து வாங்க

   Delete

Post a Comment

தங்களின் கருத்துக்கள் பயனுள்ளதாய் இருக்கும்...

ரசித்தவர்கள்

பதிவுகள் இதுவரை

Show more