தெய்வங்கள்

தெய்வங்கள்

மின்சார இரவு



 


மின்சாரம் இல்லாததால் மின்விசிறி
தன் சுவாசம் இல்லாமல்  இருந்தது
இடியுடன் மழை இருவரையும் சேர்த்து-சுகமாய்
இன்னிசை வேண்டியது  ஏக்கத்துடன் பார்த்தது

இருவரையும் சுவைத்த இரு கொசுக்கள்
இணைந்து பாட்டு பாடியது  இன்னலாய்
 பசிதுறந்தும் பக்கமிருந்தும் வெட்கமாய் -மனதை
வேண்டியது வீழ்த்த தூண்டியது வேண்டியது

மேடான பகுதிகளில் மெல்ல மெல்ல
சூடான  மூச்சு காற்றுடன் நகர்ந்து
மேலிதழை கவ்வி கொண்டான்-மங்கையை
மீண்டும் மீண்டும் சுவைத்தான்  மகிழ்ந்தான்

தீராத மோகத்தில் தினமும் ஏங்கி
பூவாக இருந்தவளை கசக்கி பிழிந்தான்
மேலோடு மேல் மோதி மெல்லிய-வலியுடன்
மார்போடு  அணைத்தான்  மீண்டும் செய்தான்

யாரோடு தர்க்கம் எதற்காக தயக்கம்
தேனுண்ட வண்டாய் திகட்டிய வேளையிலே
இசை வருவதுபோல் இளங்காற்று வீசியது-இன்பத்தை
 இசையோடு போற்றியது இன்பத்தேர் ஒட்டியது

நன்றி சொன்ன நம் தலைவன்  நாணத்தோடு
இன்னும் வேண்டுமா  இந்நிமிடம் போதுமா
உண்ணும போதெல்லாம் உன்வாசம் -இரவு
சொன்ன  கனவிதுவே சுவைக்கூடி கண்டதுவே

Comments

  1. ம்ம்ம் ..மின்சார இரவுதான்

    ReplyDelete
  2. வெளியில் மின்தடை
    உள்ளத்தில் மின்சாரமோ ?

    ReplyDelete
  3. அதனால்தான் சம்சாரத்தின் தேவை பெரும்பாலும்அதிகரிக்கும்

    ReplyDelete

Post a Comment

தங்களின் கருத்துக்கள் பயனுள்ளதாய் இருக்கும்...

ரசித்தவர்கள்

பதிவுகள் இதுவரை

Show more