தெய்வங்கள்

தெய்வங்கள்

எப்போதும் வேண்டும் !!

நேசம் வேண்டும்
நேர்மையாக வேண்டும்
நெஞ்சுருகி  நாடவேண்டும்
 நீ நியாயமாக இருக்க வேண்டும்

கொஞ்சவும் வேண்டும்
குறைகளை  அறிய வேண்டும்
குற்றமெனில் கூற வேண்டும்
கூடவே நீ  துணையாக வேண்டும்

சுகமாக  வேண்டும்
சுற்றத்தில் நீ வேண்டும்
கற்றுதர நல்லவை வேண்டும்
கடும் சொல்லால் திட்ட வேண்டும்

நற்றமிழ் வேண்டும்
நாளும் துணை வேண்டும்
நல்லோர்கள் ஆசி வேண்டும்
நாள்தோறும்  அது கிடைக்க வேண்டும்


எப்போதும் வேண்டும்
என்னுடனே நட்பு வேண்டும்
எல்லாமுமாய் இருக்க வேண்டும்
எனக்கு,உன்னுயிரில் இணைய வேண்டும்!

Comments

 1. Nice, very nice. Like it!

  ReplyDelete
 2. எப்போதும் வேண்டும்
  என்னுடனே நட்பு வேண்டும்.

  சிறப்பு.

  ReplyDelete
 3. நேசம் வேண்டும் நேர்மையாக வேண்டும்.

  சிறப்பான வரிகள்.

  ReplyDelete
  Replies
  1. நன்றி நட்பே,நேர்மையாய் இருந்தால் நேசமுடன் இருந்தாக வேண்டுமல்லவா?

   Delete
 4. கடுஞ்சொல்லால் திட்ட வேண்டும்? இப்படியெல்லாம் கூட எதிர்பார்ப்பா என்ன... வியப்புதான். நேசம் எப்போதும் உடனிருக்க விரும்புவதை அழகாய் இயம்பிட்ட கவிதை இனித்தது.

  ReplyDelete
  Replies
  1. காதலியிடம் திட்டு வாங்க காசு கொடுத்தா வாங்க வேண்டும்?
   இதெல்லாம் இளசுகள் சமாசாரம் நண்பரே !

   Delete
 5. உங்க ‘சார்ட்டர் ஆஃப் டிமாண்ட்ஸ்’ சூப்பரா இருக்கு சார்! :-)

  //நல்லோர்கள் ஆசி வேண்டும்
  நாள்தோறும் அது கிடைக்க வேண்டும்//

  ஆம்; எல்லோருக்கும் அது வேண்டும்! அருமை!

  ReplyDelete
  Replies
  1. அப்பத்தான் காசும் கிடைக்கும்,சீக்கிரம் கல்யாணமும் செய்வாங்க?

   நன்றி சார்

   Delete
 6. ''..எப்போதும் வேண்டும்
  என்னுடனே நட்பு வேண்டும்..''
  Eniya nalvaalththu.
  Vetha.Elangathilakam.

  ReplyDelete

Post a Comment

தங்களின் கருத்துக்கள் பயனுள்ளதாய் இருக்கும்...

ரசித்தவர்கள்

பதிவுகள் இதுவரை

Show more