தெய்வங்கள்

தெய்வங்கள்

இனிமை உலகத்தை ரசிப்போம்



 
 

அவள்:மேலோட்டமாய் பார்க்காதே
             மேனியை திருடாதே-எதிர்பார்த்து
             மேலும் கீழும் பார்த்து
             மெதுவாய் தொடாதே

அவன்:மெல்லிய காற்றும்
             மிதமான சூழ்நிலையும்-தொட்டு
             துள்ளிவிளையாட  தோணுது
             தயக்கமாய்  இருக்குது
             
அவள்:அப்படி பார்க்காதே
             அருகில் வராதே -இருந்தாலும்
             அள்ளி அணைக்கத்தான்
             ஆசையை தூண்டுது

அவன்:இன்னும் ஏனோ
              இணக்கம் தானோ-இப்போது
              இனிமை  நமக்கு
              நல்ல சமயம்தானே
அவள்:சொல்லி பார்த்தேன்
             மனதை மெல்ல -மென்மையாய்
             வெள்ளமென  அதை
             உருக்கிவிட்டாய்
அவன்:துள்ளி விளையாடியபின்
             இல்லம் செல்வோம்-துவளாமல்
             இணைந்து செய்வோம்
             புனைதலில்  பேரின்பம்

இருவரும்:எண்ணத்தில் இணைந்தோம்
                    வண்ணமாய் கலந்து-வாலிப
                    விருந்தை பகிந்திட்டோம்
                    உண்மையாய் இருப்போம்
                    உணர்ச்சியை மதிப்போம்
                   உலகத்தை ரசிப்போம்

Comments

  1. உரையாடல் போல நன்றாக இருக்கிறதா கவிதை நடையிலேயே சொல்லுங்கள் நன்றாக இருக்கும் என்பது என் கருத்து.

    ReplyDelete
    Replies
    1. நன்றி,கவிதை நடையிலே நன்றாக உள்ளதா? இல்லையா?

      Delete
  2. இனிமை உலகத்தைக் காட்டிய கவிதை அருமை. புனைதல் என்று நாகரீகமாய் நீங்கள் எழுதியிருப்பதையும் ரசித்தேன்.

    ReplyDelete
    Replies
    1. கருத்துக்கு நன்றி,என்னை நாகரீகமாக கருதியதற்கு மீண்டும் நன்றி அன்பரே

      Delete
  3. திரைப்படப் படப் பாடல் போல இருக்கிறது.நன்று
    த.ம. 3

    ReplyDelete
    Replies
    1. அப்படியா? நன்றி ஐயா

      Delete

Post a Comment

தங்களின் கருத்துக்கள் பயனுள்ளதாய் இருக்கும்...

ரசித்தவர்கள்

பதிவுகள் இதுவரை

Show more