தெய்வங்கள்

தெய்வங்கள்

முதல்நாள் இரவு  இரவெல்லாம் விழித்திருந்து
இமை மூடா தவமிருந்து

ஊரெல்லாம் கூடிவந்து-இன்பமாய்
உற்றாரின் நலம் பகிர்ந்து

விளக்கு தோரணம்
விடியும்வரை  எரிந்தும்

நலுங்கு நாட்டியமும்-கச்சேரி
நாளெல்லாம்  பெரு விருந்தாய்

விடியும்முன் எழுந்து
விமரிசையான சடங்குகளுடன்

காலை கதிரவனை கைகூப்பி-வணங்கி
மாலை மாற்றி  மகிழ்ந்தேன்

தாலிகட்டி தவம் கலைத்தேன்
தைரியமாய் அருகில் அமர்ந்தேன்

நாளை குறித்து நல்பழங்களுடன்-சத்தான
நலபாகத்துடன் விருந்து படைத்து

சேலைமாற்றி சிவந்த முகத்துடன்
சொம்பில் பாலுடன் நடந்தேன்

மாலை அணிந்து  மங்கலமாய்-நாணமாய்
ஆளை பார்த்தேன்  ஆர்வமாய்

தோளை பிடித்து தொட்டதும்
துவண்டு விழுந்தேன் சரிந்தேன்

துணிகளை  இழந்தேன் மகிழ்ந்தேன்-மீண்டும்
தொடங்கி  மீண்டும் மகிழ்ந்தேன்Comments

 1. வாழ்த்துக்கள் உங்கள் வார்த்தைகளுக்கு.


  ReplyDelete
  Replies
  1. நன்றி நட்பே!
   வார்த்தைக்கும் மட்டுமா? கவிதைக்கு இல்லையா?

   Delete
 2. கவிதைக்கு வாழ்த்துகள்...

  அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் தருணங்கள்...

  ReplyDelete
  Replies
  1. நீங்களும் தான் ,எனக்கெல்லாம் முடிந்துவிட்டது அந்த நாள்

   Delete
 3. பிளாக்கர் பின்தொடர் இணைப்பைக் காணலியே???

  ReplyDelete

Post a Comment

தங்களின் கருத்துக்கள் பயனுள்ளதாய் இருக்கும்...

ரசித்தவர்கள்

பதிவுகள் இதுவரை

Show more