Monday, 28 September 2015

சீக்கிரமா வாங்க..........

        வலைப்பதிவர்களின் எழுச்சித் திருவிழாநீண்ட இடைவெளிக்குப்பிறகு என்னை எழுதத்தூண்டிய எழுச்சிமிகு திருவிழா இந்த வருட வலைபதிவர்கள் சந்திப்புத் திருவிழா -2015.  

ஆம் மிகவும் மகிழ்ச்சியான இந்த வருட சந்திப்பு கடந்த நாட்களை விடச் சிறப்பாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்குமென நம்புகிறேன்.
 காரணம் விழா ஏற்பாட்டாளர்கள் குழுவாக ஒருங்கிணைந்து திரு.முத்துநிலவன் அய்யா அவர்களின் வழிகாட்டல் விழாவை சிறப்பான பாதையில் செல்வது புரிகிறது .

மேலும் நாளொரு பதிவுகள் வெளிவந்த வண்ணம் இருப்பது ஒருங்கிணைப்பாளர்களின் கூட்டு முயற்சியிக்கு கிடைத்த முதல் வெற்றி என்றே எண்ணுகிறேன். அதோடு மட்டுமல்லாமல் போட்டிகள், அப்பப்பா சொல்ல வார்த்தைகள் இல்லை . என்னால் பங்கேற்க முடியாவிட்டாலும் வலைப்பதிவர்கள் பங்களிப்பு சிறப்பாக இருக்கிறது .
 
 வலைச்சித்தரும், கரந்தையாரும்  கொடுக்கும் ஒத்துழைப்பு  மற்றும் ஆதரவும் என்னால் பங்களிப்பு செய்ய முடியவில்லையே என்ற வருத்தம் மிகுந்த வேதனை தருகிறது .இருந்தாலும் இந்த வருடம் 300 பதிவர்கள் பங்கேற்பார்கள் என்ற செய்தி மகிழ்ச்சியுடன்  ஆர்வத்தைத் தூண்டுகிறது. 

 இன்னும்  அதிர்ச்சியும் ஆச்சரியங்களும் நிச்சயம் இருக்கும் என்ற எதிர்பார்த்து நான் எனது பயணத்தை ஒருநாள் முன்னதாகவே தொடங்கி  சனிக்கிழமை காலையில் புதுக்கோட்டை செல்கிறேன். எனக்கும் வாய்ப்புக்கிடைத்தால் நானும்  உங்களையெல்லாம் வரவேற்க காத்திருக்கிறேன்.


கவியாழி

13 comments:

 1. வாங்க வாங்க கவியாழியாரே! எங்க காணோமேன்னு தேடிக்கிட்டிருந்தோம். அப்பாடா வந்துட்டீங்க.. வந்துடுவீங்க.. வருக வருக

  ReplyDelete
 2. நன்றி...

  நம் தளத்தில் இணைத்தாகி விட்டது...

  இணைப்பு : →பதிவர்களின் பார்வையில் "பதிவர் திருவிழா-2015"

  புதுக்கோட்டை விழாக்குழுவின் சார்பாக...
  அன்புடன் திண்டுக்கல் தனபாலன்

  ReplyDelete
 3. புதுகையில் தங்களைச் சந்திக்கக் காத்திருக்கிறேன் ஐயா
  வாருங்கள்
  நன்றி
  தம +1

  ReplyDelete
 4. வணக்கம்...

  தாங்களும் விமரிசனப் போட்டியில் கலந்து கொள்ளலாம்...

  இணைப்பு : →இங்கே சொடுக்கவும்

  புதுக்கோட்டை விழாக்குழுவின் சார்பாக...
  அன்புடன் திண்டுக்கல் தனபாலன்

  ReplyDelete

 5. என்ன உங்கள் பதிவையே காணோமே
  எனப் பார்த்துக் கொண்டிருந்தேன்
  மதியம் கிளம்பி மாலை வர உத்தேசம்
  முன்னமே வந்தால் அருகில் நம் இருவரும் தங்கும்படியாக
  அறை தேர்ந்தெடுத்து வைக்கவும்
  மற்றவை நேரில்....

  ReplyDelete
 6. சென்னை விழாவில் உங்களைச் சந்தித்தேன். மற்றவர்களை இந்த விழாவில் சந்திக்கும் ஆவலுடன் இருக்கிறேன்.

  ReplyDelete
 7. சென்னையில் உங்களை சந்தித்தது நினைவுக்கு வருகிறது! விழா சிறக்கட்டும்!

  ReplyDelete
 8. விரைவாக வந்துவிடுகிறேன் நண்பரே

  ReplyDelete
 9. என்ன பதிவுகள் கருத்துகள் எழுதுவதில்லையா?
  அன்றிருந்த ஆர்வம் எங்கே...?

  ReplyDelete
 10. இத்தீபாவளி நன்நாள் - தங்களுக்கு
  நன்மை தரும் பொன்நாளாக அமைய
  வாழ்த்துகள்!

  யாழ்பாவாணன்
  http://www.ypvnpubs.com/

  ReplyDelete
 11. அன்புள்ள அய்யா
  வணக்கம்.

  "இனிய ஆங்கில புத்தாண்டு - 2016"
  நல்வாழ்த்துகள்

  நட்புடன்,
  புதுவை வேலு
  www.kuzhalinnisai.blogspot.com

  ReplyDelete
 12. இப்புத்தாண்டில் அனைவரின் நல்லெண்ணங்களும் நல்ல நிகழ்வுகளாய் ஈடேறி, மன நிம்மதியும் உடல் நலமும் நீடிக்க வேண்டுகிறேன்.

  - சாமானியன்

  எனது புத்தாண்டு பதிவு... " மனிதம் மலரட்டும் ! "
  http://saamaaniyan.blogspot.fr/2016/01/blog-post.html
  தங்களுக்கு நேரமிருப்பின் படித்து, கருத்திட வேண்டுகிறேன். நன்றி

  ReplyDelete

தங்களின் கருத்துக்கள் பயனுள்ளதாய் இருக்கும்