அரசன் அன்றே கொல்வான் தெய்வம் நின்று கொல்லும்
அரசன் அன்றே கொல்வான் தெய்வம் நின்று கொல்லும்
இந்த பழமொழி உண்மையா? தெய்வத்திற்கு பரிகாரம் செய்தால் சரியாகிவிடாதோ? அப்புறம் எப்படி இந்த பழமொழி சரியானதாகும்.அந்த காலத்தில் சொன்ன பழமொழி அனைத்துக்கும் அர்த்தம் உண்டென்றால் அருகிலுள்ள உறவுகளை அழித்தவனுக்கு என்ன தண்டனையை தெய்வம் தரப்போகிறது.
சின்னஞ்சிறுசு முதல் பெண்கள், ஊனமுற்றவர்கள், சிறப்பாக வாழ்ந்திருந்த முதியவர்கள் வரை எண்ணிலடங்கா மனித உயிர்களை அழித்தொழித்த படுபாதகனுக்கு அந்த ஆண்டவன் என்ன தண்டனையை கொடுக்கப் போகிறார்
அதற்காக பரிகாரம் செய்தால் எல்லாமே சரியாகிவிடுமே இதுதானே இந்து புராணங்களும் இதிகாசங்களும் சொல்கிறது. பெரும்பாலும் எல்லா மதங்களும் வருந்தி பாவமன்னிப்புக் கேட்டு விட்டால் சரியாகி விடுவதாகவே
சொல்கிறது. அப்புறம் எப்படி தெய்வம் தண்டனை கொடுக்கும் அவன் எப்படி அழிவான் .இறந்தவர்களின் ஆத்மா எப்படி சாந்தியடையும்.
ஒருத்தனை பத்துபேர் சேர்ந்து கொல்வதும் பச்சிளங் குழந்தையை தெருவில் வீசிவிட்டு செல்வோர்க்கும் கற்பழிப்பு குற்றம் செய்வோருக்கும் கலப்படம், கொள்ளை, பதுக்கல் இன்னும் நாட்டில் நடைபெறும் எத்தனையோ குற்றங்களுக்கும் யார் தண்டனை தரப்போகிறார்கள்
எல்லோர்மனதிலும் ஏன் இந்த கேள்வியை மறந்து விடுகிறார்கள்..காலமாற்றதிற்கேற்ப கடவுளும் மாறிவிட்டாரா? அல்லது மறந்துவிட்டாரா? எங்கெங்கு காணிலும் ஏற்றதாழ்வுகள் எப்படி வந்தது.எல்லோரும் வணங்கும் தெய்வம் ஏன் பாரபட்சணை காட்டுது.
உங்களுக்கு தெரிந்தால் சொல்லுங்கள்
உலகுக்கு உண்மையை உணர்த்துங்கள்
கடவுளின் மகிமையை காட்டுங்கள் -இலங்கையில்
கஷ்டப்படுவோருக்கு கஷ்டம் தீர்க்க
கடவுளுக்கு சிபாரிசு சொல்லுங்கள்
இந்த பழமொழியின் தாக்கம் எல்லா இடத்திலும் இருந்தாலும் இப்போதைக்கு நாம் சொந்தகளுக்கு மட்டுமே கேள்வியாய் கேட்கிறேன் .
இது உண்மையா? பொய்யா? சொல்லுங்களேன்
எல்லோர்மனதிலும் ஏன் இந்த கேள்வியை மறந்து விடுகிறார்கள்..காலமாற்றதிற்கேற்ப கடவுளும் மாறிவிட்டாரா? அல்லது மறந்துவிட்டாரா? எங்கெங்கு காணிலும் ஏற்றதாழ்வுகள் எப்படி வந்தது.எல்லோரும் வணங்கும் தெய்வம் ஏன் பாரபட்சணை காட்டுது.
உங்களுக்கு தெரிந்தால் சொல்லுங்கள்
உலகுக்கு உண்மையை உணர்த்துங்கள்
கடவுளின் மகிமையை காட்டுங்கள் -இலங்கையில்
கஷ்டப்படுவோருக்கு கஷ்டம் தீர்க்க
கடவுளுக்கு சிபாரிசு சொல்லுங்கள்
இந்த பழமொழியின் தாக்கம் எல்லா இடத்திலும் இருந்தாலும் இப்போதைக்கு நாம் சொந்தகளுக்கு மட்டுமே கேள்வியாய் கேட்கிறேன் .
இது உண்மையா? பொய்யா? சொல்லுங்களேன்
அரசன் அன்றே கொல்வான் தெய்வம் நின்று கொல்லும் - போன்ற பழமொழிகள் கடவுள் உண்டு என்ற நம்பிக்கையின் அடிப்படையில் வந்தவை.
ReplyDeleteதெய்வம் என்றால் அது தெய்வம் - வெறும்
சிலையென்றால் அது சிலைதான்
உண்டென்றால் அது உண்டு
இல்லையென்றால் அது இல்லை
- பாடல்: : கண்ணதாசன் (படம்: பார்த்தால் பசி தீரும்)
நன்றிங்கசொல்வதெல்லாம் சரி நண்பரே ,நான் கேட்ட சூழ்நிலைவேறு.கடவுள் உண்டென்றால் தண்டனை தரவில்லையே
Deleteநல்லதொரு கேள்வி கவியாழி சார் .
ReplyDeleteஎன் மனத்திலும் இக்கேள்வி வெகு நாட்கள் வரை
குடைந்து வந்துள்ளது , ஜோதிடத்தை நான்
கற்கும் வரை. இதற்கு சற்று விளக்கமாகத் தான்
பதில் கூற வேண்டும்.
முதலில் தெய்வம் நின்று கொல்லும் என்பதற்கு அர்த்தம்
பாவம் செய்தவன் தன் அடுத்த பிறவியில் அதற்கான கஷ்ட பலன்களை
அனுபவிப்பான் என்பதே . இதையே நாம் கர்மா என்கிறோம். இதை செய்யும் போதே நம் DNA
வில் பதிந்து அது 7 தலைமுறைக்கும் பரவும்.
கர்மா என்பது நாம் செய்யும் செயல்களாகும். நற்செயல்கள் புரிந்தால் நல்லவையும் தீய செயல்கள் செய்தால் தண்டனையும் கிடைக்கும். இதில் கர்மாக்களின் டிகிரியைப் [ காயத்தின் டிகிரி போல ]
பொறுத்து பரிகாரங்கள் ஏற்றுக் கொள்ளப் பட்டு நமக்குத் தீர்வு கிடைக்கும்.
பரிஹாரங்களால் கஷ்டத்தைக் குறைத்து கொள்ளலாம். முழுமையாகத்
தப்பித்தல் என்பது இயலாது. இதில் பரிஹாரங்களால் தீர்க்கவே முடியாத கர்மாக்களும்
உள்ளன. அவற்றை அனுபவித்துத் தான் தீர்க்க முடியும். இந்த பழமொழி விஞ்ஞானப் படியும் உண்மையே . ஒரு செயலுக்குத் தகுந்த விளைவுச் செயல் இருக்கும்
என்பதே அது. எனவே பெருங்குற்றங்கள் புரியாமல் இருப்பது நமக்கும் நம் தலைமுறைக்கும் நல்லது.
என்னைப் பொறுத்த வரையில் தெய்வம் என்பது ஒரு பாசிடிவ் சக்தியே.
அதாவது இருக்கலாம் .பாவம் செய்தவன் பரிகாரம் செய்தாலும் பழி அவனுக்கு உண்டு என்றுதானே சொல்கிறீர்கள்.பாவத்தின் அளவு என்ன?அறிவியலுக்கும் ஆண்டவனுக்கும் சம்பந்தம் உண்டென்றால் பாவத்தின் அளவை பொறுத்து உடனடி தீர்ப்பு கொடுக்கலாமே.உங்களின் ஜோசியம் சொல்லும் செய்தி என்ன ?
Deleteசகோதரரே...
ReplyDeleteகுறள் 207:
எனைப்பகை யுற்றாரும் உய்வர் வினைப்பகை
வீயாது பின்சென்று அடும்.
எவ்வளவு பெரிய பகையைப் பெற்றவரும் தப்பித்துக் கொள்வர்; ஆனால் தீமை செய்வதால் வரும் பகையோ, அழியாமல் நம் பின் வந்து, நம்மை அழிக்கும்.
தெய்வம் நின்று கொல்லும்.... தக்கதண்டனை அவர்களுக்குக் கிடைத்தேயாகும்.
மனதின் வலிக்கு மருந்து கிடைக்கும் நாள் வரும்...
நன்றிங்கம்மா.தீமையே தொழிலாய் செய்பவன் .இது தொழில் தர்மம் குற்றமாகாது என்று சொல்வது சரியா?
Deleteசெயலுக்கு ஏற்ற விளைவாய் இறைவன் வருவான் என்று சொல்வார்கள்.
ReplyDeleteகாலம் மாறும். உண்மை எல்லோருக்கும் தெரியும் காலம் வரும்.
வசந்தகாலம் வரும்.
உண்மை இப்போதே உலகுக்கே தெரிந்துவிட்டது.தண்டனை எப்போது அந்த ஆண்டவர் தருவார்?
Deleteகண்டிப்பாக தவறுக்கு தண்டனை உண்டு! பரிகாரங்கள் என்பது அந்த சமயத்தில் போக்கி கொள்ள உதவும் ஒரு வலி நிவாரணி போன்றதே! தெய்வம் நின்று கொல்லும் என்று சொல்லுவார்கள்! ஊழ்வினை கண்டிப்பாக உறுத்து வந்து ஊட்டும்!
ReplyDeleteநன்றிங்க சுரேஷ் நிச்சயம் தண்டனை உறுதிதான் எப்போது யார் தருவார்.பரிகாரம் செய்தாலும் தண்டனை உண்டு என்று சொல்கிறீர்கள்
Deleteஅதை மட்டும் யாருமே சொல்ல மாட்டாங்க சார்...
Deleteபிருந்தா
அரசன் அவசரப்பட்டு கொல்வது ஒருபுறம் இருக்கட்டும்...
ReplyDeleteசமுதாயம், உற்றார், உறவினர், குடும்பம் மற்றும் பல - இவர்களிடமிருந்து ஒருவன் தப்பிக்கலாம்...
அவனின் செல்வாக்கு, சாதுர்யம், சாமர்த்தியம், பண பலம், ஆள் பலம், இன்னும் பல குறுக்கு வழிகளின் மூலமும் தப்பிக்கலாம்...
ஆனால் மனச்சாட்சி (அவனின் தெய்வம்) ஒன்றே அணுஅணுவாய் அவனை கொல்லும்... மதிப்பு, மரியாதை, இன்பம், புகழ், பெருமை, மன அமைதி, நிம்மதி, உறக்கம், இன்னும் பலவற்றை கண்டிப்பாக கொல்லும்... அதற்குப் பின் அவன் நடை பிணம்...
குற்றம் புரிந்தவன் வாழ்க்கையில் நிம்மதி கொள்வதென்பதேது...?
முன்பு சிறிய அலசல் : மனிதனுக்கு மிகப் பெரிய தண்டனை எது?
நன்றி...
சரியாய் சொன்னீர்கள் நண்பரே மனசாட்சியால் அவன் தனக்குதானே தற்கொலைசெய்யும் நிலையும் வரலாம்
ReplyDeleteThis comment has been removed by a blog administrator.
ReplyDeleteசாட்டையடி கேள்விகள் சார்... நம் யாரிடமும் பதில் இல்லாத கேள்விகள்...
ReplyDeleteஉண்மைதாங்க தம்பி.உங்களைப் போன்ற இளையவர்கள்தான் தக்க பதிலை தரவேண்டும்
Deleteஅரசனே அன்று கொல்வது இல்லையே இன்று!!!?
ReplyDeleteஅப்போ அந்த ஊரில் தெய்வங்களெல்லாம் வெளிநாடு சென்று விட்டதாகவே எண்ண வேண்டுமா அய்யா ?
Deleteசூப்பர் சார்.... அருமையான கவுண்டர்
Deleteதெய்வம் நின்று கொல்லும் என்பது தப்பு செய்தவன் நிச்சயம் தண்டனை பெறுவான் என்பதைக் குறிப்பதற்காக சொன்னது. பொறுங்கள்.நினைத்தது நடக்கும்!
ReplyDeleteதங்களின் கருத்து சரியே ,எப்போது நடக்கும் எப்போது அழிவான்
Deleteதண்டனையிலிருந்து தப்பமுடியாது அல்லவா !
ReplyDeleteஅத்தனை ஆத்த்மாக்களும்சும்மா விடாது
DeleteSariyaana vilakkam vaazhththukkal
ReplyDeleteஎப்போ எங்க சார் நடக்குது பழமொழி மட்டும் தான் என்னுடையது
Deleteஉங்கள் கேள்வியிலேயே பதில் உள்ளது நண்பரே!
ReplyDeleteதெய்வம் நின்று கொல்லும்!
அதாவது நேரம் காலம் பார்த்து நிதானமா ஆனா நிச்சயமா கொல்லும்!
பரிகாரம் மன்னிப்பு எல்லாம் சமயம் சோதிட வியாபார தந்திரங்கள்!
செயலுக்கு ஏற்ப அது நல்லதோ தீமையோ விளைவு வரும்!
இது இயற்கையின் நியதி!
பாதிக்கப்பட்டவர் தண்டனை தராவிட்டாலும்...
இயற்கையயோ இறைவனோ பிரபஞ்சமோ நிச்சயம் தண்டனை தரும்!
யாரும் தப்பித்துவிட முடியாது!
யாரும் அறியாமல் செய்யும் தவறென்று
ReplyDeleteஏமாற்றும் நினைவை மாற்றுங்கள்
ஒன்றில் ஒன்றாய் எங்கும் நிறைந்த
ஒருவன் அறிவான் எல்லாம்
காலம் பார்த்து நேரம் பார்த்து-அவனே
தீர்ப்பு சொல்வான்
-காலத்தை வென்ற புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்.