தெய்வங்கள்

தெய்வங்கள்

எல்லை யில்லா எழிலாள்.......


கல்லில் வடித்த சிலையோ
கற்பனை வடிவின் கலையோ
சொல்லில் விளங்க வில்லை
சுடராய் தெரிந்தாள் அழகாய்

எல்லை யில்லா எழிலாள்
ஏக்கம் கொண்ட குயிலாள்
வெள்ளை அழகே இல்லை
விரைந்தே சிரித்து மறைந்தாள்

கொள்ளை அழகாய் இருந்தும்
குறையாய் இருந்தது வறுமை
பிள்ளை யவளைப் பெற்றோர்
பிணியில் அவளை வளர்த்தார்

இல்லை என்ற நிலையில்
ஏழ்மை சூழ்ந்த வழியில்
தொல்லை யில்லா அழகால்
தூரத்தில் பார்க்க மறைந்தால்......பருவம் பதினெட்டில்........8
..................(கவியாழி)................
Comments

Post a comment

தங்களின் கருத்துக்கள் பயனுள்ளதாய் இருக்கும்...

ரசித்தவர்கள்