இடையில் வந்த சாதியாலே
உயர்ந்த தாழ்ந்த சாதியென்றே உண்ணும் உணவில் இல்லையே உலகில் பேசும் மொழியிலேயும் உயர்ந்து தாழ்வு மில்லையே உழைக்கும் இனம் மட்டுமே உயர்வுத் தாழ்வு பார்க்கிறார்கள் பிழைக்க வழித் தெரிந்திருதும் பேதம் கொண்டு வாழ்கிறார்கள் ஒற்றுமையாய் வாழ்ந்த மக்கள் ஓலமிட்டே தினம் அழுகிறார்கள் உழைப்பதற்கே தினம் பயந்து ஓடி ஒளிந்து வாழ்கிறார்கள் மறக்க வேண்டா மென்று மக்களையும் சேர்கிறார்கள் மனிதனையும் மிருகமாக்கி மக்களாட்சி கேட்கிறார்கள் இழிந்த நிலையில் வாழ்கையில் இதையும் ஏன் வளர்க்கிறார்கள் இடையில் வந்த சாதியாலே இனம் பிரிந்து நிற்ககிறார்கள் துயரம் மிகும் வாழ்க்கையில் துணைக்குச் சாதி வேண்டுமா தூய்மையான அன்பும் நட்புடனே தூய வாழ்க்கை வேண்டுமா