மேகத்தின் சேதியது...
மேகத்தின் சேதியது
மேனியிலே பட்டவுடன்
தாகமெடுக்கிறதோ
தனிமை தவிக்கிறதோ?
பூவெல்லாம் பேசியதும்
புல்செடியும் கேட்டவுடன்
பூவைக்கு இனிக்கிறதோ
பூவைக்கத் துடிக்கிறதோ?
வழியெங்கும் பசுமரங்கள்
வாழ்த்தாக தூவியே
பூமழை பொழிகிறதோ
புதுப்பாதைத் தெரிகிறதோ
பச்சைக்கிளியும் புறாவும்
பக்கமாய் நெருங்கியே
இச்சைச் செய்வது
இம்சையாய் இருக்கிறதோ?
இளம்மனது கருகியதால்
இன்பத்தை இழந்துவிட்டு
இப்போது ஏக்கத்தையே
இனிமையாக்க மறுப்பதோ?
தவறென்ன வாழ்கையில்
தைரியமாய் செய்யுங்கள்
உறவங்கே மறுத்தாலும்
உரிமையாய் தொடருங்கள்
வாழ்கையை தீர்மானிக்க
வயதுண்டு அறிந்துகொள்
வாழ்கையே உன்கைளில்
வாழ்வுமுந்தன் உரிமையே
தவறென்ன வாழ்கையில்
தைரியமாய் செய்யுங்கள்
உறவங்கே மறுத்தாலும்
உரிமையாய் தொடருங்கள்
வாழ்கையை தீர்மானிக்க
வயதுண்டு அறிந்துகொள்
வாழ்கையே உன்கைளில்
வாழ்வுமுந்தன் உரிமையே
எப்படித்தான் உங்களால் தினமும் ஒன்றை
ReplyDeleteயோசிக்கவும் தினமும் ஒரு அருமையான
படைப்பைத் தரவும் முடிகிறதோ ?
ஆச்சரியமாகத்தான் இருக்கிறது
தொடர வாழ்த்துக்கள்
உங்கள் அன்பும் ஆசியும் என்னை எப்போதும் உற்சாகப் படுத்துவதால் தினமும் எழுத தோன்றுகிறது.நீங்கள் கொடுக்கும் ஊக்கமும் உறுதுணையாய் இருக்கிறது.வாழ்த்துக்கு நன்றிங்க
Deleteநன்றிங்க
ReplyDeleteஅருமை... வாழ்த்துக்கள்...
ReplyDeleteஉறவங்கே மறுத்தாலும்...
உரிமையாய் தொடருங்கள்...
அறிவுரைதான் அவரவர் விருப்பம் ஆனாலும் ஆதரவு உண்டு.வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிங்க
Deleteஅருமையான படைப்பு...
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க கருண்.தொடர்ந்து வாங்க
Deleteவாழ்கையை தீர்மானிக்க
ReplyDeleteவயதுண்டு அறிந்துகொள்
வாழ்கையே உன்கைளில்
வாழ்வுமுந்தன் உரிமையே
அருமையானா அறிவுரை
சிறப்பான வரிகளுடன்
வாழ்த்துக்கள் சகோதரரே
மென்மேலும் தங்கள் கவிதை அழகு பெற !!
வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க .தொடர்ந்து வாங்க
Deleteவாழ்கையை தீர்மானிக்க
ReplyDeleteவயதுண்டு அறிந்துகொள்
வாழ்கையே உன்கைளில்
வாழ்வுமுந்தன் உரிமையே
உரிமை முழக்கம் ...!
ஆமாங்க .ஒவ்வொருவரின் தனிப்பட்ட விருப்பம்
Deleteபூவெல்லாம் பேசியதும்
ReplyDeleteபுல்செடியும் கேட்டவுடன்
பூவைக்கு இனிக்கிறதோ
பூவைக்கத் துடிக்கிறதோ?........ஆங்கில இலக்கியத்தில் கூட இப்படியொரு உவமைகளை படித்ததில்லை ....அருமை
உங்களின் கருத்து எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது.என்னை மேலும் ஊக்கப் படுத்துகிறது
Deleteஉங்களது கருத்துரையை இன்றுதான் கண்டேன் .
ReplyDelete(http://seasonsnidur.com/2013/06/09/%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%86%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A8%E0%AE%BF/#comment-894
S.E.A.Mohamed Ali. "nidurali"
அன்பு நண்பர் கவியாழி கண்ணதாசன் அவர்களுக்கு
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி .உங்கள் வருகை தொடரட்டும்
அன்புடன்)
மிகவும் மகிழ்ந்து முகநூலில் உங்கள் நட்பை நாடி இங்கு வந்து உங்கள் கவிதை ஏழுதும் ஆற்றலைக் கண்டு மகிழ்ந்தேன் . நிறைவாக தருகிறீர்கள் .உங்கள் தொண்டு தொடரட்டும் .மக்கள் பயன் பெறட்டும்
வருகைக்கு நன்றி
Deleteஅருமையான கவிதை! வாழ்த்துக்கள்!
ReplyDeleteவாழ்த்துக்கு நன்றிங்க சுரேஷ்
Deleteசளைக்காமல் கவி மழை பொழிகிறீர்களே?எப்படி?
ReplyDeleteநினைக்கும்போது வருது நிம்மதியைத் தருது
Deleteகாகித்தில் மட்டுமல்ல கணினிக்குள்ளே புகுது
கேள்விக்கு நன்றிங்க நண்பரே
நன்றாக இருக்கிறது.
ReplyDeleteநன்றிங்க ஸ்ரீராம்.தொடர்ந்து வாங்க
Delete\\வாழ்க்கையை தீர்மானிக்க
ReplyDeleteவயதுண்டு அறிந்துகொள்
வாழ்க்கையே உன்கைளில்
வாழ்வுமுந்தன் உரிமையே\\
மனந்தொட்ட வரிகள். பாராட்டுகள் ஐயா.
பாராட்டுக்கும் பகிர்வுக்கும் நன்றிங்க தொடர்ந்து வாங்க
DeleteThis comment has been removed by a blog administrator.
ReplyDelete