அதிகாலைச் சூரியனே..
அதிகாலைச் சூரியனே
அன்பான வரவேற்பு
ஆண்டவனைத் தரிசிக்க
ஆர்வமுடன் வருகிறாயோ
இன்முகத்தில் நீ வந்து
இன்னல் தீர வேண்டுகிறாய்
ஈசனையும் பார்த்துவிட்டு
ஈகையோடு வாழ்த்துகிறாய்
என்ன தேடி வருகின்றாய்
எதற்காக நீ கோபமுற்றாய்
ஏனிந்த தீக் கனலை
ஏற்றிவிட்டு தாக்குகிறாய்
ஐயமில்லை உன் கோபம்
ஐவருள் நீ அடக்கம்தானே
ஒற்றுமையாய் பஞ்சபூதம்
ஒன்றி நன்மை செய்தாலே
ஓங்கி வரும் நல்லொழுக்கம்
ஒவ்வொருவரும் பேணுவார்கள்
அஃதே எல்லோருக்கும் நலமாம்
உயிரெழுத்துகளை வைத்து... அருமை ஐயா... வாழ்த்துக்கள்...
ReplyDeleteநன்றிங்க தனபாலன்.
Deleteகாலை வணக்கம் ஐயா.. சூரியனுடன் சேர்ந்து தங்களது கவிதையும் என்னை எழுப்பியது...
ReplyDeleteசீக்கிரம் பள்ளியில் (?)படிக்க கிளம்புங்க?
Deleteஅருமை
ReplyDeleteவித்தியாசமான அருமையான கவிதை
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றிங்க சார்
Deleteபஞ்ச பூதத்திற்கும் ஒற்றுமையினை போதித்த
ReplyDeleteநற்சிந்தனை அருமை
நன்றிங்க ஜெயக்குமார்
Deleteஃ என்பதை q என்று தட்டச்சலாமே!
ReplyDeleteமாற்றி விட்டேன் நன்றி
Deleteஉயிரெழுத்துகளில் துவங்கி அருமையான கவிதை..உங்கள் திறமைக்கு வணங்குகிறேன்
ReplyDeleteநன்றிங்க கிரேஸ்.தொடர்ந்து வாங்க
Deleteஉயிர் எழுத்துகளில் காலைக்கதிரவன் எனத்திகழும்
ReplyDeleteஅருமையான கவிதை ..!
நன்றிங்கம்மா .இருந்தாலும் உங்களுக்கு பின்புதான் எல்லாமே
Deleteபாடலைவிட, பின்னூட்டத்திற்கான பதிலை, மிகவும் அனுபவித்து எழுதியுள்ளீர்கள் !!!!!!
Deleteஅப்படிங்களா நன்றிங்க சார்
Deleteதிருமதி இராஜராஜேஸ்வரி அவர்களும் ஓர் சூரியனே !
Deleteஅறிவினில் பிரகாஸிக்கும் அவர்கள் ஓர் ஞான சூரியன்.
அதிகாலைச் சூரியன் நாள் தவறாமல் உலகில் உதித்து எழுவதுபோல, அதிகாலை 5 மணிக்கு இவர்களின் பதிவு ஒன்று வலையுலகில் உதித்து வருகிறது. அதனால் இவர்களும் சூரியன் போன்றவர்களே.
அநீதிகளைச் சுட்டு எரிப்பதில், இவர்கள் உச்சி வெயில் சூரியன் போன்றவர்கள்.
நல்லோர் சிலரின், நல்ல பதிவுகளுக்கு மட்டும், நியாயமாக கருத்தளிப்பதில், குளுமையான குதூகலமான மாலைச் சூரியன் போன்றவர்களும் இவர்களே.
//இருந்தாலும் உங்களுக்கு பின்புதான் எல்லாமே//
இருந்தாலும் இல்லாவிட்டாலும், சொன்னாலும் சொல்லாவிட்டாலும், அவர்களுக்குப்பின்பு தான் எல்லாமே + நாம் எல்லோருமே.
ஆயிரமாவது பதிவினை எட்ட உள்ள அவர்களுக்கு நிகர் அவர்களே தான் என்று அடித்துச்சொல்வேன்.
கோடி சூர்ய பிரகாஸத்துடன் அவர்கள் மேலும் ஜொலிக்க என் அன்பான வாழ்த்துகள்.
உண்மைதான் அம்மாவும் "அதிகாலைச் சூரியன்தான்"நானும் அவர்களை புகைப்படம் பார்த்ததில்லை ஆனாலும் வணங்குகிறேன்.
Deleteஅ, ஆ, இ, ஈ..,ன்னு புது பாடல் எழுதி ஆண் ஔவ்வையார் அவதாரமே எடுத்திட்டிங்க சகோ!
ReplyDeleteஅப்படிங்களா? நல்லாயிருக்கா இல்லையா?
Deleteஉயிரெழுத்து கவிதை மிகவும் அருமை
ReplyDeleteவந்தமைக்கு நன்றிங்க
Deleteஅழகான சூரியோதம் போன்ற அருமையான கவி தந்தீர்கள். வாழ்த்துக்கள் சகோ!...
ReplyDeleteஆதவனை வரவேற்ற கவியாழி கவிகண்டு
மாதவம் இங்கு நாம் செய்தனமென்று
பூதலமும் இணைந்த பரிவாரமும் பூரிக்க
மாதிவள் வாழ்த்தினன் மகிழ்ந்தே!
த ம. 7
வாழ்த்துக்கு நன்றிங்க இளமதி
Deleteநல்ல முயற்சி! அருமை!
கவியாழி கண்ணதாசனின் கவிதையை நெஞ்சாரத் தழுவிக் கொள்ள வந்த உதயசூரியன்!
ReplyDeleteநன்றிங்க இளங்கோ அவர்களே
Delete