உணர்வில் தமிழன் என்றிருந்தால்........
தமிழைப் போற்றி வந்தவர்கள்
தனியாய் பிரிந்தக் காரணமேன்
மொழியால் ஒன்றாய் சேர்ந்தவர்கள்
மோதிக் கொல்லும் நிலையெதனால்
உயிராய் உணர்வாய் வாழ்ந்தவர்கள்
உடனே விலகிப் போனதுமேன்
பகையைச் சேர்த்து எப்பொழுதும்
பண்பை மறந்து வாழ்வதுமேன்
சாதியும் மதமும் எப்பொழுதும்
சண்டை வந்திடக் காரணமேன்
மோதிக் கொண்டு இருப்பதற்கு
முடிவைக் காணா போவதுமேன்
தம்மை பிரித்த துரோகிகளின்
தரத்தை அறிய வேண்டாமா
உண்மை நிலையை உணராமல்
உயிரைப் போக்க வேண்டுமா
ஒற்றுமையோடு நாம் இருந்தால்
உணர்வில் தமிழன் என்றிருந்தால்
கற்றவர் சொல்லை கேட்டறிந்தால்
சுற்றமும் நட்பாய் வாழ்ந்திடலாம்
தனியாய் பிரிந்தக் காரணமேன்
மொழியால் ஒன்றாய் சேர்ந்தவர்கள்
மோதிக் கொல்லும் நிலையெதனால்
உயிராய் உணர்வாய் வாழ்ந்தவர்கள்
உடனே விலகிப் போனதுமேன்
பகையைச் சேர்த்து எப்பொழுதும்
பண்பை மறந்து வாழ்வதுமேன்
சாதியும் மதமும் எப்பொழுதும்
சண்டை வந்திடக் காரணமேன்
மோதிக் கொண்டு இருப்பதற்கு
முடிவைக் காணா போவதுமேன்
தம்மை பிரித்த துரோகிகளின்
தரத்தை அறிய வேண்டாமா
உண்மை நிலையை உணராமல்
உயிரைப் போக்க வேண்டுமா
ஒற்றுமையோடு நாம் இருந்தால்
உணர்வில் தமிழன் என்றிருந்தால்
கற்றவர் சொல்லை கேட்டறிந்தால்
சுற்றமும் நட்பாய் வாழ்ந்திடலாம்
///ஒற்றுமையோடு நாம் இருந்தால்//
ReplyDeleteஅது தமிழனிடம் இல்லாது போய்விட்ட ஒரு குணமாகிவிட்டதே
அப்போ இருந்த ஒற்றுமை இப்போ கெட்டு போனதாலே தப்பு தப்பா நடக்குது
Deletearumai viruppamim solliyavithamum manam kavarndhathu
ReplyDeleteநன்றிங்க சார் நீங்க வந்தமைக்கும் வாழ்த்தியமைக்கும்
Deleteஅவரவர் உணர வேண்டிய வரிகள்... வாழ்த்துக்கள்...
ReplyDeleteஅவர்கள் உணர்ந்தால் சண்டையே வராதே முன்பைப்போல
Deleteஒற்றுமையும் உணர்வும் ஓங்கி இருந்தால் என்றும் வெற்றியே!
ReplyDeleteஒற்றுமை நீங்கில் இருவருக்கும் தாழ்வு .உண்மைதான்
Deleteஒற்றுமை மட்டுமாவது இருந்திருந்தால்
ReplyDeleteதமிழன் இன்று உயரத்தில் இருந்திருப்பான்.....!!!
கவிதை அருமை கவியாழி ஐயா.
காட்டிக் கொடுப்பவனும் சுயநலவாதியினால் நமது ஒற்றுமையே கேட்டுப்போய்விடுகிறது திருந்தனும்
Delete//கற்றவர் சொல்லை கேட்டறிந்தால்//
ReplyDeleteமொத்தக் கவிதையும்
மெத்தக் கவியின்
சத்தச் சிந்தனை.
வாழ்க... வளர்க.. தொடர்க.. வெல்க....
நன்றிங்க நண்பரே நீங்க வந்தமைக்கும் கருத்து பகிர்ந்தமைக்கும்
Deleteஒற்றுமை மறைந்து போனதால்தான் ஒளிந்து மறைந்து வாழும் கொடுமை! அருமையான படைப்பு! நன்றி
ReplyDeleteஇதெல்லாம் வாழ்க்கையா? கொடுத்து வாழவேண்டும் கெடுத்து வாழக்கூடாது
Deleteஒற்றுமையோடு நாம் இருந்தால்
ReplyDeleteஉணர்வில் தமிழன் என்றிருந்தால்
கற்றவர் சொல்லை கேட்டறிந்தால்
சுற்றமும் நட்பாய் வாழ்ந்திடலாம..
அருமை...!
நன்றிங்கம்மா.நாலுபேருக்கு தெரிஞ்சா திருந்துவாங்களே
Deleteஒற்றுமையோடு நாம் இருந்தால்
ReplyDeleteஉணர்வில் தமிழன் என்றிருந்தால்
கற்றவர் சொல்லை கேட்டறிந்தால்
சுற்றமும் நட்பாய் வாழ்ந்திடலாம்//
உண்மை ஒற்றுமை ஒன்றே பலமாம்.
அருமையான கவிதை.
இவிங்க ஒற்றுமை இல்லாத காரணத்தால் அடுத்தவன் தூண்டிவிடுறான்
Deleteஒற்றுமையை உணரனும் ஒன்று சேரனும்
its all about dirty caste politics :-((
ReplyDeleteஆமாம் நண்பரே ,என் மனத்தாக்குதலே இந்த கவிதை எழுத காரணமாய் இருந்தது
Deleteஒன்றுபட்டு நின்றால்
ReplyDeleteதொன்றுதொட்டு வாழலாம்....
நன்று செய்தும் வாழமுடியும் என்பதை மறந்து இருக்கிறார்கள்
Deleteநன்றி!
நன்றிங்கய்யா
Deleteமொழியால் இணைந்த தமிழன் வேறு காரணங்கள் சொல்லி பிரிக்க படுகிறான்.. தமிழர்கள் அறிவுடன் செயல் பட வேண்டிய காலமிது
ReplyDeleteஉண்மைதான் இவ்வளவு நாளாய் தொப்புள்கொடி உறவென்று ஒற்றுமையாய் இருந்தவர்கள் இப்போது ஏன் சண்டையிட்டுக்கொண்டுள்ளார்கள்
Delete// ஒற்றுமையோடு நாம் இருந்தால்
ReplyDeleteஉணர்வில் தமிழன் என்றிருந்தால்
கற்றவர் சொல்லை கேட்டறிந்தால்
சுற்றமும் நட்பாய் வாழ்ந்திடலாம் //
சரியாகச் சொன்னீர்
கடந்த காலங்களில் ஒற்றுமையோடு இருந்தவர்களைப் பிரித்தவர் யார்?
Deleteபிரித்த சக்தி எது? அரசியலா? ஆணவமா?முட்டாள்தனமா?