இடையில் வந்த சாதியாலே
உயர்ந்த தாழ்ந்த சாதியென்றே
உண்ணும் உணவில் இல்லையே
உலகில் பேசும் மொழியிலேயும்
உயர்ந்து தாழ்வு மில்லையே
உழைக்கும் இனம் மட்டுமே
உயர்வுத் தாழ்வு பார்க்கிறார்கள்
பிழைக்க வழித் தெரிந்திருதும்
பேதம் கொண்டு வாழ்கிறார்கள்
ஒற்றுமையாய் வாழ்ந்த மக்கள்
ஓலமிட்டே தினம் அழுகிறார்கள்
உழைப்பதற்கே தினம் பயந்து
ஓடி ஒளிந்து வாழ்கிறார்கள்
மறக்க வேண்டா மென்று
மக்களையும் சேர்கிறார்கள்
மனிதனையும் மிருகமாக்கி
மக்களாட்சி கேட்கிறார்கள்
இழிந்த நிலையில் வாழ்கையில்
இதையும் ஏன் வளர்க்கிறார்கள்
இடையில் வந்த சாதியாலே
இனம் பிரிந்து நிற்ககிறார்கள்
துயரம் மிகும் வாழ்க்கையில்
துணைக்குச் சாதி வேண்டுமா
தூய்மையான அன்பும் நட்புடனே
தூய வாழ்க்கை வேண்டுமா
இந்த சாதீ எப்போதுதான் அணையுமோ!?
ReplyDeleteஎல்லோருமே பணக்காரராகி விட்டால் சாதியும் மறைந்துவிடும்
Deleteமுடிவில் சிந்திக்க வேண்டிய கேள்விகள்... வாழ்த்துக்கள் ஐயா...
ReplyDeleteஏழ்மை நிலையிலுள்ளவங்கதான் சதி தீ யில் வேகிறார்கள்
Deleteஇனி இந்தந்த சாதிக்கு இந்தந்த சாப்பாடுதான்னு வச்சிரணும் அப்பவாவது இந்த சா"தீ" மாறுமா பார்ப்போம்....!
ReplyDeleteசாப்பாடுக்கே கஷ்டப்படுபவன்தான் சாதியை வளர்கிறார்கள்
Deleteதூய்மையான அன்பும் நட்புடனே
ReplyDeleteதூய வாழ்க்கை வேண்டுமே..!
அப்படி இருந்தால் வம்பே வராதே
Deleteநாளை எல்லாம் மாறும் என்ற ஒரே நம்பிக்கையில்தான் ஓடுகிறது. உலகம்
ReplyDeleteநடுத்தர மக்கள்தான் உணரனும்உணரனும்
Deleteசாதிகள் அஸ்தமனமாகும் நாளில் தான் மக்களின் வாழ்வில் புது விடியல் பிறக்கும். அழகான கவிதை ஐயா...
ReplyDeleteதமிழன் என்ற உணர்வு வளர்ந்தால் சாதிகளும் மறையும்
Deleteசாதீத் தீ என்று அழியுமோ அன்று தான் முழுசுதந்திரம் உள்ளவர்களாக இருப்போம் அனைவரும்...
ReplyDeleteஉயர்ந்த நிலைக்கு வந்தவன்தான் சாதியை வளர்கிறான்
Deleteதூய்மையான அன்பும் நட்புடனே
ReplyDeleteதூய வாழ்க்கை வேண்டுமா // அருமை...
உண்மையான மனிதநேயம் இருந்தால் சாதியும் இருக்காது.சமத்துவம் மட்டுமே வாழும்
Deleteதேவையுள்ள பயனுள்ள அறிவுரை
ReplyDeleteபகிர்வுக்கு வாழ்த்துக்கள்
சண்டைபோடும் எண்ணம் வளர்க்காவிட்டால் சாதியும் வளராது சண்டையும் வராது
Deleteபடிச்சவன் சூது பண்ணினால் போவான் போவான் நாசமாய் போவாங்கிறது பாரதியின் தீர்க்க தரிசன வார்த்தைகள் ...இது சா'தீயை'வளர்க்கும் பெரிய மனிதர்களுக்கு பொருந்தும் !
ReplyDeleteஉண்மைதான் பாரதி சொன்னது உண்மைதான்
Deleteஇறுதி வரிகள் சிறப்பு! நல்ல கவிதை! வாழ்த்துக்கள்!
ReplyDeleteவாழ்த்துக்கு நன்றிங்க சுரேஷ்
Deleteஆமாம் சகோ அன்றே பாரதியார் பாடிவிட்டார். அன்றிலிருந்து இன்னும் தொடருகிறதே இக் கொடிய நோய்...
ReplyDeleteதீருவதெப்போ?
சிறந்த பொருள்! வாழ்த்துக்கள் சகோ!
கொஞ்சநாள் இல்லாமல் அமைதியாய் இருந்த தமிழகம் இப்போ சண்டை போடுகிறார்கள்
Delete// இடையில் வந்த சாதியாலே
ReplyDeleteஇனம் பிரிந்து நிற்கிறார்கள் //
நன்றாகச் சொன்னீர்கள்!
தமிழன் என்ற உணர்வும் தமிழ்மீது பற்றும் வளர்ந்தால் சாதி மறையும் சமத்துவம் வளரும்
Deleteநன்றிங்க சார்.மகிழ்ச்சி
ReplyDeleteசாதிகளை மக்கள் மறந்தாலும் அரசியல்வாதிகள் மறக்க விடமாட்டார்கள்.
ReplyDeleteஅவங்க பொழைப்பே இதுதானே,வருகைக்கு நன்றிங்க ஸ்ரீராம்
Deletevisit : http://blogintamil.blogspot.in/2013/07/2.html
ReplyDeleteவாழ்த்துக்கள்...
துயரம் மிகும் வாழ்க்கையில்
ReplyDeleteதூய்மையான அன்பும் நட்புடனே
தூய வாழ்க்கைதான் வேண்டும்!
பலரின் உள்ளக் கருத்தை உங்கள் கவிதையில் அருமையாகச் சொன்னீர்கள்.
மக்கள் மறக்கத் தயாராக இருந்தால் அரசியல்வாதிகள் ஒன்றும் செய்ய முடியாது.
அன்பின் கவியாழி கண்ணதாசன் - இடையில் வந்த சாதி - இது என்று தான் ஒழியுமோ ? கவிதை அருமை - இறுதி வரிகள் அனைவரையூம் சென்றடைய வேண்டும் - வலைச்சரம் மூலமாக வந்தேன் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
ReplyDelete