Showing posts with label கவிதை/சமூகம்/ ஆரோக்கியம். Show all posts
Showing posts with label கவிதை/சமூகம்/ ஆரோக்கியம். Show all posts

Monday, 23 September 2013

இயற்கைச் சூழலை ரசியுங்கள்

இயற்கை சூழலை ரசியுங்கள்
இனிமை கிடைப்பதை உணருங்கள்
இன்பம் தேடிச்சென்றாலே எப்போதும்
இளமை கொண்டே வாழலாம்

கண்கள் குளிர்ச்சி கொள்ளும்
கனத்த மனதும் லேசாகும்
அங்கம் முழுதும் மகிழ்ச்சியால்
அடையும் நன்றே உணர்வாலே

மலையில் மரங்களைக் காணுங்கள்
மகிழ்ச்சி கிடைத்திடும் நம்புங்கள்
இலைகள் தழைகள் பசுமையாய்
இன்பம் தந்திடும் இளமையாய்

பசுமை மாறா காட்டிலே
பாய்ந்து தாவிடும் குரங்குகள்
பறந்து பேசிடும் பறவைகள்
பார்க்கும் திசையிலே இன்பமே

மான்கள் துள்ளி ஓடிடும்
மயில்கள் தாவி களித்திடும்
முயல்கள் ஒளிந்தே ஓடிடும்
உள்ளமும் தூய்மை யாகிடும்

அடிக்கடி வெளியே செல்லுங்கள்
ஆனந்தம் மிகுவதைக் காணுங்கள்
குடும்பம் அனைவரும் சேர்ந்தாலே
குறையும் கஷ்டங்கள் தன்னாலே
Monday, 26 August 2013

இயற்கையைப் போற்றுவோம்

அடர்ந்த மரங்கள் தெரிந்து
அங்கங்கே புல்வெளிகள் படர்ந்து
தொடர்ந்த காடுகள் மறைந்து
தொலைந்தன பசுமை செடிகள்

விடிந்ததை சொல்லும் குயிலும்
வேடிக்கையாய் பேசும் கிளிகளும்
எழுந்ததும் குளித்திடும் காக்கையும்
எண்ணிக்கையும் குறைந்த குருவிகள்

வேடிக்கைக் காட்டும் குரங்குகள்
வேகமாய் செல்லும் பாம்பும்
பழங்களைத் தின்ற வௌவாலும்
பார்த்திட மகிழ்ந்தே இருந்தன

இரம்மியமான இயற்கைச் சூழல்
இரவிலும் மகிழ்ச்சியாய் இருந்ததை
தொலைத்திடநாமும் காரணமாய்
தொடர்ந்தே இருக்கிறோம் வாழ்கிறோம்

இயற்கைப் போற்றி வாழ்வதினால்
இரசாயனம் கலக்காத காய்கறிகள்
தூய்மையான காற்றுடன் மீண்டும்
தொடர நாமும் வழிசெய்வோம்


Monday, 8 July 2013

சூரியனைக் காணவில்லை......

ஆஹா சூரியனைக் காணவில்லை 
அதனால் அற்புதமாய் இருக்கிறதே
சொற்பதமாய் சொல்ல இயலவில்லை
சுகமாகத்தான் இன்று விடிகிறது

வழியெங்கும் மழைத் துளிகள்
வானமின்றும் வாழ்த்தும் ஓசைகள்
துளித்துவரும் அந்த ஆசைகள்
துவக்கம்தான் எத்தனைச் சுகம்

அடிக்கடி என்னை வருத்தாதே
அடியேன் மனதைக் கெடுக்காதே
இடிக்குது நிலைமைக் கொல்லாதே
இளமையின் துடிப்பைக் கொடுக்காதே

எப்போதோ ஏற்பட்ட இளமையுணர்வு
இந்நேரம் அவசரமாய் ஏன்வந்தது 
தப்பேதும் இல்லைதான் ஆனால்
தயக்கம் மல்லவா வருகிறது

முப்போதும் மகிழ்ந்த நாட்கள்
முடிவின்றி தவிக்கிறதே முறையா
முன்பொழுதில் வருவது சரியா
முறையான இனிமை உணர்வா

மழையே மீண்டும் வா!வா!!
மகிழ்ச்சித் தொடந்துத் தா!தா!!
இனிமை யுணர்வேப் போ!போ !!
இரவில் மட்டும் ஹி!ஹி!!...


Thursday, 27 June 2013

குண்டுத் தொல்லைக் குறையவே இல்லை

ஆணுக்கும் பெண்ணுக்கும்  ஒற்றுமை
அடிவயிற்றில் இல்லையே வேற்றுமை
ஆனாலும்  பெரிதாகத் தொல்லையில்லை
அதற்குமே யாருக்கும் கவலையில்லை

காலங் கடந்து  திண்பதும்
கறியும் கொழுப்பும் உண்பதும்
கடையில் கூடி பேசிக்கொண்டே
கண்டபடி திண்ணுவதால் ஆகுமாம்

விற்பனையில் முன்னாக வருவதற்கு
வியாபார நோக்கமாய் விற்பதுதற்கு
எத்தனையோ மருந்துகள்  உள்ளது
எதற்குமே பலனில்லை இளைப்பதற்கு

கற்பனைச்  செய்தாலும் குறையாது
கண்டபடியும் சுருக்கவும் முடியாது
கைவீசி நடப்போரை கடந்து
கனதூரம் செல்லவே  இயலாது

பட்டினிப் பசியாய் கிடந்து
பழக்குவோம் உடலைக் குறைத்து
பாட்டன் பாட்டி உடலைபோல
பாதுகாப்போம் உடல் இளைத்து

தினமும் காலையில் நடந்தே
தண்ணீர் நிறையக் குடித்தே
திண்பதில் கொஞ்சம் குறைத்தே
திடமாய் வாழலாம் செழித்தே