தெய்வங்கள்

தெய்வங்கள்

இயற்கையைப் போற்றுவோம்

அடர்ந்த மரங்கள் தெரிந்து
அங்கங்கே புல்வெளிகள் படர்ந்து
தொடர்ந்த காடுகள் மறைந்து
தொலைந்தன பசுமை செடிகள்

விடிந்ததை சொல்லும் குயிலும்
வேடிக்கையாய் பேசும் கிளிகளும்
எழுந்ததும் குளித்திடும் காக்கையும்
எண்ணிக்கையும் குறைந்த குருவிகள்

வேடிக்கைக் காட்டும் குரங்குகள்
வேகமாய் செல்லும் பாம்பும்
பழங்களைத் தின்ற வௌவாலும்
பார்த்திட மகிழ்ந்தே இருந்தன

இரம்மியமான இயற்கைச் சூழல்
இரவிலும் மகிழ்ச்சியாய் இருந்ததை
தொலைத்திடநாமும் காரணமாய்
தொடர்ந்தே இருக்கிறோம் வாழ்கிறோம்

இயற்கைப் போற்றி வாழ்வதினால்
இரசாயனம் கலக்காத காய்கறிகள்
தூய்மையான காற்றுடன் மீண்டும்
தொடர நாமும் வழிசெய்வோம்


Comments

  1. இரசாயனம் கலக்காத காய்கறிகள்
    தூய்மையான காற்றுடன் மீண்டும்
    தொடர
    >>
    எல்லோரும் கொஞ்சம் முயன்றால் இது சாத்தியமே. இந்த காலத்துல பிளாஸ்டிக்கை தவிர்க்க முடியாது. ஆனா, முறையா அதை மறு சுழற்சி பண்ணவும், அழிக்கவும் செய்யனும், தண்ணீரை சிக்கனமா பயன்படுத்தனும், ஒவ்வொருத்தரும் பொறுப்பை உணரனும்.

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான் ராஜி.விவசாயிகள் செயற்கையான ரசாயனம் கலந்து பூச்சி மருந்து தெளிப்பதை நிறுத்தி எல்லோருக்கும் உள்ள பொறுப்பை செய்யணும்

      Delete
  2. அனைவரும் உணரவேண்டிய தருணம் இது
    அருமையாக உணர்த்தியமைக்கு மனமார்ந்த
    நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்கு நன்றிங்க சார்

      Delete
  3. ''..இரசாயனம் கலக்காத காய்கறிகள்
    தூய்மையான காற்றுடன் மீண்டும்
    தொடர நாமும் வழிசெய்வோம்..''
    ஆம் வழிசெய்வோம்..
    நல்வாழ்த்து.
    நல்வாழ்த்துக்கள்
    Vetha.Elangathilakam


    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றி.நீங்க பதிவர் விழாவுக்கு வரவில்லையா?

      Delete
  4. டிராக்கை மாத்துங்க கவிஞரே அட்வைஸ் போரடிக்கிறது !

    ReplyDelete
    Replies
    1. சிரிக்க வைக்க நீங்க இருக்கும்போது நான் என் வேலையை செயய்கிறேனே நண்பா

      Delete
  5. கவிதை அருமை வாழ்த்துக்கள், இதை தடுக்க, எளிய தீர்வு என்ன என்பதையும் சேர்த்திருந்தால் இன்னும் அருமையாக இருந்திருக்கும்.

    ReplyDelete
    Replies
    1. நிச்சயம் சொல்லுவேன்.நீண்டு இருந்தால் படிக்க மாட்டார்கள் என்பதால் சுருக்கி இருந்தேன்

      Delete
  6. உண்மைதான் சார்... இயற்க்கையை விடுத்து செயற்க்கையை நாடியதால் தொலைத்தவை ஆயிரம்.. இனியாகிலும் உணர்ந்தால் இருப்பதையாகிலும் காக்கலாம் ...

    ReplyDelete
    Replies
    1. காப்பதும் இன்னும் வளர்ப்பதும் நம் கடமையே

      Delete
  7. இயற்கையை மீட்டெடுப்போம்!

    ReplyDelete
  8. இயற்கைப் போற்றி வாழ்வதினால்
    இரசாயனம் கலக்காத காய்கறிகள்
    தூய்மையான காற்றுடன் மீண்டும்
    தொடர நாமும் வழிசெய்வோம்

    இயற்கை இனிமையாய் வாழட்டும் ..!

    ReplyDelete
    Replies
    1. மரம் செடி கொடிகளை வளர்ப்போம்

      Delete
  9. எண்ணும் கலசத்தில்
    இதயத்தை நிரப்பிவிட்டால்
    மண்ணும் மணக்கும்
    மாதோட்டம் ஆகும்
    பொன்பூக்கும் தாவரத்தில்
    பொய்யற்ற காய் காய்க்க
    அன்புக்கனி ஆய்ந்திடலாம்
    ஆயுள் இனிக்க வாழ்ந்திடலாம்...!

    மாற்றங்களைத் தேடி அழகிய கவிதை வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. மண்ணும் மனிதனைப்போல மாண்புடன் போற்றினால் விண்ணைக் காத்திடலாம் வேளாண்மைப் பெருக்கிடலாம்.நன்றிங்க சீராளன்

      Delete
  10. நன்றிங்க குமார்.

    ReplyDelete
  11. இயற்கைப் போற்றி வாழ்வதினால்
    இரசாயனம் கலக்காத காய்கறிகள்
    தூய்மையான காற்றுடன் மீண்டும்
    தொடர நாமும் வழிசெய்வோம்//

    இயற்கை போற்றி வாழ்வது என்றும் நல்லது. கவிதை மிக அருமை.
    வீட்டில் காய்கறி தோட்டம் போட்டால் இராசாயன கலப்பு இல்லாமல் இருக்கும்.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. இதுவும் நல்ல யோசனை.காற்றில் பரவும் ரசாயன சேர்க்கையைத் தடுக்க கிராமம் நோக்கியும் குடிபெயரலாம்

      Delete
  12. இயற்கையுடன் இயைந்து வாழும் வாழ்க்கைதான் நம் முன்னோர்கள் வாழ்ந்தார்கள். தற்போது நாம் இயற்கையிலிருந்து ரொம்பவும் விலகி விட்டோம். இந்தச் சமயத்தில் இந்தக் கவிதை தேவையான ஒன்று.

    இந்தக் கவிதைக்கு என் பதிவில் இணைப்பு கொடுத்துள்ளேன்.
    நன்றி!
    http://wp.me/p2RUp2-3A

    ReplyDelete
    Replies
    1. இணைப்புக்கு நன்றி.எல்லோரும் சேர்ந்து முடிவெடுத்தால் நிச்சயம் இயற்கையைப் போற்றலாம்

      Delete
  13. அடர்ந்த மரங்கள் தெரிந்து
    அங்கங்கே புல்வெளிகள் படர்ந்து
    தொடர்ந்த காடுகள் மறைந்து
    தொலைந்தன பசுமை செடிகள்

    உண்மைதான் கவியாழி!

    ReplyDelete
  14. எல்லோரும் உணர்ந்து பின்பற்றவேண்டிய விஷயம்.

    ReplyDelete

Post a Comment

தங்களின் கருத்துக்கள் பயனுள்ளதாய் இருக்கும்...

ரசித்தவர்கள்

பதிவுகள் இதுவரை

Show more