சூரியனைக் காணவில்லை......
ஆஹா சூரியனைக் காணவில்லை
அதனால் அற்புதமாய் இருக்கிறதே
சொற்பதமாய் சொல்ல இயலவில்லை
சுகமாகத்தான் இன்று விடிகிறது
வழியெங்கும் மழைத் துளிகள்
வானமின்றும் வாழ்த்தும் ஓசைகள்
துளித்துவரும் அந்த ஆசைகள்
துவக்கம்தான் எத்தனைச் சுகம்
அடிக்கடி என்னை வருத்தாதே
அடியேன் மனதைக் கெடுக்காதே
இடிக்குது நிலைமைக் கொல்லாதே
இளமையின் துடிப்பைக் கொடுக்காதே
எப்போதோ ஏற்பட்ட இளமையுணர்வு
இந்நேரம் அவசரமாய் ஏன்வந்தது
தப்பேதும் இல்லைதான் ஆனால்
தயக்கம் மல்லவா வருகிறது
முப்போதும் மகிழ்ந்த நாட்கள்
முடிவின்றி தவிக்கிறதே முறையா
முன்பொழுதில் வருவது சரியா
முறையான இனிமை உணர்வா
மழையே மீண்டும் வா!வா!!
மகிழ்ச்சித் தொடந்துத் தா!தா!!
இனிமை யுணர்வேப் போ!போ !!
இரவில் மட்டும் ஹி!ஹி!!...
ஹிஹி... வாழ்த்துக்கள் ஐயா...
ReplyDeleteஉங்களுக்கும் வாழ்த்துக்கள் நண்பரே ஹிஹி...
Deleteவித்தியாசமான ஆயினும் மகிழ்வூட்டும் அருமையான படைப்பு எப்போதேனும் எவரக்கும் நேரும் இதுபோன்ற ஜாலி உணர்வு வாழ்த்துக்கள்
ReplyDeleteஉண்மைதான் உண்மையான மகிழ்ச்சியின் உணர்வே இந்தக் கவிதை
Delete.. மழையே மீண்டும் வா!வா!!
ReplyDeleteமகிழ்ச்சித் தொடந்துத் தா!தா!!
இனிமை யுணர்வேப் போ!போ !!
இரவில் மட்டும் ஹி!ஹி!!... ..
அழகான வரிகள்...
வருகைக்கு நன்றிங்க
Deletetm 3
ReplyDeleteநன்றிங்க சார்.
Deleteகதிரவன் வந்து விட்டான்!
ReplyDeleteஉண்மைதான் காலையிலேயே வந்துவிட்டான் ஆனால் கஷ்டமும் தந்துவிட்டான்
Deleteமழை வரட்டும்! மண் செழிக்கட்டும்! அருமையான படைப்பு! நன்றி!
ReplyDeleteவருகைக்கு நன்றிங்க சுரேஷ்
Deleteரசனக்காரர் அண்ணே
ReplyDeleteநன்றிங்க உங்க ரசனைக்கு.மீண்டும் மீண்டும் வாருங்கள்
Deleteமழையே மீண்டும் வா!வா!!
ReplyDeleteமகிழ்ச்சித் தொடந்துத் தா!தா!!
மழைத்துளியாய் கவிதை..!
நன்றிங்கம்மா.மழைக்கு இதுதான் தோன்றியது.
Deleteசூரியனைக் காணாமல் மகிழ்ந்து பாடும் கவிக்கூத்து ரசிக்கவைக்கிறது. பாராட்டுகள் ஐயா.
ReplyDeleteசிலநேரங்களில் இப்படியும் ஏக்கமுண்டு
Deleteமழை பொழியட்டும்... மண் குளிரட்டும்!
ReplyDeleteமனமும் இனிக்கட்டும் எனபதும் உண்மைதானே
Deleteவித்தியாசமான சிந்தனை
ReplyDeleteவருகைக்கு நன்றிங்க.தொடர்ந்து வாங்க
Deleteமழை பொழியட்டும்.
ReplyDeleteமகிழ்ச்சி பரவட்டும்
நன்றி
இயல்பான கவிதை.. வாழ்த்துக்கள்..
ReplyDeleteவருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிங்க கருண்
Delete'இளமை முழுதும் நனையும் வரையில் வா' என்று வைரமுத்து அழைத்தார் மழையை! மழை என்றுமே இனிமைதான், குறிப்பாக தற்போதைய நிலையில் தமிழ்நாட்டுக்கு! மீண்டும் உபரி நீர் ஓடிக் கடலில் கலக்கும். தடுத்து சேமிக்க முடியாத நிலையில் நாம்!
ReplyDeleteஉண்மைதான்,உபரி நீரைப் பயன்படுத்த இயலாத நிலையில் உள்ளோம்
Delete