தெய்வங்கள்

தெய்வங்கள்

இயற்கைச் சூழலை ரசியுங்கள்

இயற்கை சூழலை ரசியுங்கள்
இனிமை கிடைப்பதை உணருங்கள்
இன்பம் தேடிச்சென்றாலே எப்போதும்
இளமை கொண்டே வாழலாம்

கண்கள் குளிர்ச்சி கொள்ளும்
கனத்த மனதும் லேசாகும்
அங்கம் முழுதும் மகிழ்ச்சியால்
அடையும் நன்றே உணர்வாலே

மலையில் மரங்களைக் காணுங்கள்
மகிழ்ச்சி கிடைத்திடும் நம்புங்கள்
இலைகள் தழைகள் பசுமையாய்
இன்பம் தந்திடும் இளமையாய்

பசுமை மாறா காட்டிலே
பாய்ந்து தாவிடும் குரங்குகள்
பறந்து பேசிடும் பறவைகள்
பார்க்கும் திசையிலே இன்பமே

மான்கள் துள்ளி ஓடிடும்
மயில்கள் தாவி களித்திடும்
முயல்கள் ஒளிந்தே ஓடிடும்
உள்ளமும் தூய்மை யாகிடும்

அடிக்கடி வெளியே செல்லுங்கள்
ஆனந்தம் மிகுவதைக் காணுங்கள்
குடும்பம் அனைவரும் சேர்ந்தாலே
குறையும் கஷ்டங்கள் தன்னாலே




Comments

  1. அருமையாகச் சொன்னீர்கள்...!

    ReplyDelete
  2. இந்தப் பதிவு தளத்தின் முதல் பதிவாக வரவில்லை... தேதியும் மாறி உள்ளது...

    ReplyDelete
  3. குடும்பம் அனைவரும் சேர்ந்தாலே
    குறையும் கஷ்டங்கள் தன்னாலே


    மகிழ்ச்சிப்பகிர்வுகள்..பாராட்டுக்கள்..!

    ReplyDelete
  4. இந்தக் கவிதையில் நான் ரசித்த வரிகள்!
    //அடிக்கடி வெளியே செல்லுங்கள்
    ஆனந்தம் மிகுவதைக் காணுங்கள்
    குடும்பம் அனைவரும் சேர்ந்தாலே
    குறையும் கஷ்டங்கள் தன்னாலே //

    ReplyDelete
  5. அடிக்கடி வெளியே செல்லுங்கள்
    ஆனந்தம் மிகுவதைக் காணுங்கள்
    குடும்பம் அனைவரும் சேர்ந்தாலே
    குறையும் கஷ்டங்கள் தன்னாலே//

    மனக் கஷ்டம் குறைய எளிய இனிய
    வழியை அழகாகச் சொன்னீர்கள்
    பகிர்வுக்கும் தொடரவும் வாழ்த்துக்கள்


    ReplyDelete
  6. //மலையில் மரங்களை காணுங்கள்
    மகிழ்ச்சிக் கிடைத்திடும் நம்புங்கள்
    இலைகள் தழைகள் பசுமையாய்
    இன்பம் தந்திடும் இளமையாய்// என்றும் இளமையின் ரகசியத்திற்கு பல பேரிடம் வரும் விடையும் இது தான். இயற்கையை ரசிப்போம்!. இன்பத்தில் திளைப்போம்!.. பகிர்வுக்கு நன்றி அய்யா.

    ReplyDelete
  7. கூடி வாழ்தல் ஒன்றேதான்
    குதூகலம் தருமே நன்றேதான்...

    மனமகிழ்வைப் பெற மார்க்கம் உரைத்த கவி அருமை|
    வாழ்த்துக்கள் சகோ!

    ReplyDelete
  8. //இலைகள் தழைகள் பசுமையாய்
    இன்பம் தந்திடும் இளமையாய்//
    ரசித்த வரிகள்!

    ReplyDelete
  9. நிஜம்தான்.. இயற்கை சூழல் கிடைச்சிட்டால் எனக்கு சாப்பாடு கூட வேண்டாம் நிம்மதியா எழுத உட்கார்ந்துடுவேன்..! இது ஒரு பொன்மாலை பொழுது...ன்னு..!

    ReplyDelete
  10. வீட்டினுள்ளேயே அடைந்து கிடைக்காமல், வெளி உலகத்தைப் பார்த்தாலே ஆனந்தம்தான்.
    நல்ல கவிதைக்குப் பாராட்டுக்கள்!

    ReplyDelete
  11. சரியாக சொன்னீர்கள்...

    ReplyDelete

Post a Comment

தங்களின் கருத்துக்கள் பயனுள்ளதாய் இருக்கும்...

ரசித்தவர்கள்

பதிவுகள் இதுவரை

Show more