குண்டுத் தொல்லைக் குறையவே இல்லை
ஆணுக்கும் பெண்ணுக்கும் ஒற்றுமை
அடிவயிற்றில் இல்லையே வேற்றுமை
ஆனாலும் பெரிதாகத் தொல்லையில்லை
அதற்குமே யாருக்கும் கவலையில்லை
காலங் கடந்து திண்பதும்
கறியும் கொழுப்பும் உண்பதும்
கடையில் கூடி பேசிக்கொண்டே
கண்டபடி திண்ணுவதால் ஆகுமாம்
விற்பனையில் முன்னாக வருவதற்கு
வியாபார நோக்கமாய் விற்பதுதற்கு
எத்தனையோ மருந்துகள் உள்ளது
எதற்குமே பலனில்லை இளைப்பதற்கு
கற்பனைச் செய்தாலும் குறையாது
கண்டபடியும் சுருக்கவும் முடியாது
கைவீசி நடப்போரை கடந்து
கனதூரம் செல்லவே இயலாது
பட்டினிப் பசியாய் கிடந்து
பழக்குவோம் உடலைக் குறைத்து
பாட்டன் பாட்டி உடலைபோல
பாதுகாப்போம் உடல் இளைத்து
தினமும் காலையில் நடந்தே
தண்ணீர் நிறையக் குடித்தே
திண்பதில் கொஞ்சம் குறைத்தே
திடமாய் வாழலாம் செழித்தே
அடிவயிற்றில் இல்லையே வேற்றுமை
ஆனாலும் பெரிதாகத் தொல்லையில்லை
அதற்குமே யாருக்கும் கவலையில்லை
காலங் கடந்து திண்பதும்
கறியும் கொழுப்பும் உண்பதும்
கடையில் கூடி பேசிக்கொண்டே
கண்டபடி திண்ணுவதால் ஆகுமாம்
விற்பனையில் முன்னாக வருவதற்கு
வியாபார நோக்கமாய் விற்பதுதற்கு
எத்தனையோ மருந்துகள் உள்ளது
எதற்குமே பலனில்லை இளைப்பதற்கு
கற்பனைச் செய்தாலும் குறையாது
கண்டபடியும் சுருக்கவும் முடியாது
கைவீசி நடப்போரை கடந்து
கனதூரம் செல்லவே இயலாது
பட்டினிப் பசியாய் கிடந்து
பழக்குவோம் உடலைக் குறைத்து
பாட்டன் பாட்டி உடலைபோல
பாதுகாப்போம் உடல் இளைத்து
தண்ணீர் நிறையக் குடித்தே
திண்பதில் கொஞ்சம் குறைத்தே
திடமாய் வாழலாம் செழித்தே
அருமையாச் சொன்னீர்கள்... நடைமுறைப்படுத்த வேண்டும்...
ReplyDeleteவருக வருக வணக்கம் .உங்கள் வரவு நல்வரவாகுக
Deleteஉடல் ஆரோக்கியம் பற்றிய அருமையான கவிதை.... ஆமா நீங்க எப்போ உடம்பைக் குறைக்கப்போறீங்க சார் ?
ReplyDeleteஉங்களுக்கு அப்புறம்.
Deleteதம்பி
Deleteஎனக்கு
வரும்சூலை பதி
னொன்றாம்தேதி 52வது பிறந்தநாள்
உங்க வயது என்ன
த.ம. 3....
ReplyDeleteகுண்டுத் தொல்லை குறையத் தானில்லை.
ReplyDeleteநீங்கள் சொன்ன வழிமுறைகளை நடைமுறைப் படுத்துவோம்.
உண்மைதான் எல்லோருமே யோசிக்க வேண்டியது.வருகைக்கு நன்றிங்க
Deleteஆரோக்கிய கவிதை. பின் பற்றினால் நலமே நாளும்.
ReplyDeleteஆமாம் எல்லோருக்குமே தேவை ஆரோக்கியமே
Deleteஅருமை அருமை
ReplyDeleteஅவசியமான கருத்தை
அழகுபடச் சொல்லும் உங்கள் பாணி
அனைவரையும் கவர்வது இயற்கைதானே
தொடர வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றிங்க
Deletetha.ma 4
ReplyDeleteநன்றிங்க அய்யா
Deleteநடை பயிற்சி, உணவு கட்டுபாடு தேவைதான் நீங்கள் சொல்வது போல். அரை வயிறு உணவு, கால் வயிறு தண்ணீர், கால் வயிறு வெற்றிடம் இருந்தால் நல்லது என்கிறார்கள். அதை நாம் கடைபிடித்தால் நல்லது.
ReplyDeleteகவிதை அருமை.
எங்க முடியுது .நாக்கை கட்டுப்படுத்தினால்தான் முடியும்.வருகைக்கு நன்றி
Deleteஎன்ன பொருத்தம் நமக்குள் என்ன பொருத்தம் ...தொப்பையைப் பற்றி நான் பதிவு போட ...நீங்களும் இன்று குண்டு தொல்லைப் பற்றியே !
ReplyDeleteஅப்படிங்களா? பொதுநன்மைக்காக சேர்ந்துள்ளோம்
Deleteஉணவுக்கட்டுப்பாடு, உடற்பயிற்சி, தெளிந்த எண்ணம் இருந்தால் இளைத்தல் சாத்தியமே... உடல்நலம் பேணுதல் குறித்து நல்ல சிந்தனைகளை விதைத்த அருமையானக் கவிதைக்குப் பாராட்டுகள் ஐயா.
ReplyDeleteவருகைக்கும் பாராட்டுக்கும் நன்றிங்க கீதமஞ்சரி
Deleteஉங்களுக்கு நீங்களே சொல்லிக்கொண்டதா ?
ReplyDeleteஎல்லோருக்கும் பொருந்தக்கூடியதும்.
உங்களுக்கும் சேர்த்துதான் ,வருகைக்கு நன்றி
Delete"காலங் கடந்து திண்பதும்
ReplyDeleteகறியும் கொழுப்பும் உண்பதும்
கடையில் கூடி பேசிக்கொண்டே
கண்டபடி திண்ணுவதால் ஆகுமாம்" என்று
அழகாக அடுக்கிய அடிகளுக்கு
"குண்டுத் தொல்லை குறையவே இல்லை" என்ற
தலைப்பும் எடுப்பாக இருக்கிறதே!
நன்றிங்க அய்யா. இன்னும் வரும் இனிமை தொடரும்.வருகைக்கு நன்றி
Deleteஇளைத்திடுங்கள் உடற்பருமனையென
ReplyDeleteஇனித்திடும் கவி சொன்னீர்
உளைத்திடவேண்டும் யாவரும்
பணத்துடன் நம் நலத்துக்கும்!..
சிந்தனைச் சிற்பியின் சிறந்த நற்கருத்துக் கவிதை அற்புதம்!
நல் வாழ்த்துக்கள்!
த ம.7
வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றிங்க சகோ.
Deleteஉண்மைதான்..கடைபிடிக்க வேண்டும்..நான் குறிப்பாக நேரத்திற்கு உண்பதை.. :)
ReplyDeleteநல்ல கவிதை ஐயா
நேரத்திற்கும் பசிக்கும் உண்ண வேண்டும் ருசிக்காக அல்ல.நன்றிங்கம்மா
DeleteGood Post. Congrats.
ReplyDeleteநன்றிங்க கருண்
Deleteஉடல் நலம் பேணச்செய்யும் அருமையான விழிப்புணர்வு கவிதை! நன்றி!
ReplyDeleteவருகைக்கு நன்றிங்க சுரேஷ்
Deleteநன்றே சொன்னீர்! இன்றே செய்வீர்!
ReplyDeleteஆம் அய்யா.நன்றாய் சொன்னீர்கள் நன்றி அய்யா
Deleteபசித்தபின் புசி என்றார்கள்
ReplyDeleteகடைபிடிக்கத்தான்
இயலவில்லை.
கவிதை நன்று சொன்னீர்
இனியாவது முயல்வோம்
உண்மைதான் உணவே மருந்து.பசிக்குத்தான் உணவு ருசிக்கு அல்ல என்பதை அறிந்தாலே போதும்.வருகைக்கு நன்றிங்க
Deleteவருகைக்கு நன்றி
Delete// தினமும் காலையில் நடந்தே
ReplyDeleteதண்ணீர் நிறையக் குடித்தே
திண்பதில் கொஞ்சம் குறைத்தே
திடமாய் வாழலாம் செழித்தே //
உண்மையிலும் உண்மை... பட் நான் இப்பத்தான் இதை கடைபிடிக்க ஆரம்பித்துள்ளேன்..
//தினமும் காலையில் நடந்தே
ReplyDeleteதண்ணீர் நிறையக் குடித்தே
திண்பதில் கொஞ்சம் குறைத்தே
திடமாய் வாழலாம் செழித்தே// அருமையாய் உரைத்தீர்கள்..