Posts

Showing posts with the label கவிதை/சமூகம்/ பெண்ணினம்

தெய்வங்கள்

தெய்வங்கள்

அவரவர் வாழ்கையை வாழுங்கள்.....

அம்மா வாழ்ந்த காலத்திலும் அடிமையாக இருந்ததில்லை அப்பா தாத்தா பாட்டியிடம் அன்பாய் இருக்கத் தவறவில்லை எல்லோர் சொல்லையும் கேட்டறிந்து எந்த முடிவும் செய்திடுவார் இல்லா நிலையிலும்  உள்ளதையே இனிமையாகச் சொல்லிடுவார் வசதியான வாழ்க்கைக்கு  என்றும் வெளியில் வேலைக்கு சென்றதில்லை வருவோர் போவோர் நண்பரிடமும் வீட்டுச் சண்டையைச் சொன்னதுல்லை இப்போ நிலைமை மாறியது இனிமை வாழ்வும் மறைந்தது... தப்பாய் எண்ணும் பழக்கத்தால் தனியாய் செல்லும் நிலையானது பிரிந்தே வாழ்ந்து வந்தாலும் பொறுப்பாய் இணைந்தே உழைத்தாலும் இருந்தும் சண்டை வருகிறதே இல்லற வாழ்வும் கசக்கிறதே அமைதியான குடும்ப வாழ்க்கைக்கு அன்பாய் பரிவாய் பேசுங்கள் அடுத்தவர் பேச்சைக் கேட்காமல் அவரவர் வாழ்கையை வாழுங்கள்

பூ வை ..பூவையே

பூ வை தலையில் பூவையே மை வை நெற்றியில் தமிழே மீன் வை மின்னலாய் கண்ணையே நீ வை நினைவில் என்னையே பா வை தமிழில் கவியே கோ வை மனதில் எண்ணியே தீ வை தினமும் ஆசையில்

அவள்தான் மனைவி........

வாலிப வயது வந்தவுடன் வாழ்கையை முடிவு செய்து வளர்த்த வீட்டை மறந்து-இன்பமாய் வாழ்ந்திட துடித்திடுவாள் பெற்றோரின் முன்னிலையில் பேரின்பம் காண வேண்டி பொறுமையாய்  இருந்திடுவாள்-ஆதலால் பெண்மையை காத்திடுவாள் திருமணம் முடிந்ததும் திரும்பியே கையசைத்து விரும்பிய வாழ்க்கைக்கு-கணவருடன் விருப்பமுடன் சென்றிடுவாள் எண்ணியதை தந்திடுவாள் எண்ணமதை அறிந்திடுவாள் கண்குளிர அமர்ந்து கொஞ்சி-அவனின் கண்மூடி விளையாடி டுவாள் பொன்னே மணியே என்று போதையை ஏற்றிடுவாள் பெண்மையை தருவதற்கு-நித்தம் பொறுமையை வென்றிடுவாள். அன்புடன் தந்திடுவாள் ஆசையாய் உணவளிப்பாள் அத்தனையும் பகிர்ந்துவிட்டு அருகிலேயே துணையிருப்பாள் அவள்தான்  மனைவி ! ஆயுட்காலத் துணைவி !!

அன்னையாய் போற்றுவோம் பெண்மையை !

இன்ப இரவை இனிமையாக முடித்துவிட்டு இன்றைய வேலையென்ன என்றெழுந்து இருப்பவரைத்  தெய்வமாக வணங்கி-தினமும் இதயம் மகிழத் தொடங்குவாள் சமையலை என்பிள்ளை என்குடும்பம் என்வீடென எந்திரமாய் இல்லாமல் அறிவார்ந்து நல்லாள் செய்வாள் நல்லுணவு சமைப்பாள்-எல்லோரும் நலம்வாழ  இறைவனையும் வணங்கிடுவாள் கணவனின் துயர் நீக்கும் காசுக்காக கண்ணியமான வேலைக்கும் சேர்ந்திடுவாள் கருத்தாகங்கே களப்பணியும் செய்திட்டு-எப்போதும் கருணையே வடிவான பெண்மையும்  போற்றிடுவாள் விரைவாக வந்திடுவாள் விழுதுகளைக் கண்டவுடன் வீட்டிற்குள் ஆனந்தமாய் நுழைந்திடுவாள் விரும்பியதை  ஊட்டி மகிழ்வாள்- பிள்ளைக்கு வீட்டுப்பாடம் சொல்லியும் துணைபுரிவாள். அன்பையே போதிக்கும்  அன்னைய வளுக்கு ஆத்திரமே வந்திட்டால் அத்தனையும் நாசமாகும் அகமறிந்து செய்திட்டால் அன்பே நிரந்தரமாம்-பெண்ணிடம் அன்போடு இருப்போம் அன்னையாய்ப் போற்றுவோம்

ரசித்தவர்கள்