அவரவர் வாழ்கையை வாழுங்கள்.....
அம்மா வாழ்ந்த காலத்திலும்
அடிமையாக இருந்ததில்லை
அப்பா தாத்தா பாட்டியிடம்
அன்பாய் இருக்கத் தவறவில்லை
எல்லோர் சொல்லையும் கேட்டறிந்து
எந்த முடிவும் செய்திடுவார்
இல்லா நிலையிலும் உள்ளதையே
இனிமையாகச் சொல்லிடுவார்
வசதியான வாழ்க்கைக்கு என்றும்
வெளியில் வேலைக்கு சென்றதில்லை
வருவோர் போவோர் நண்பரிடமும்
வீட்டுச் சண்டையைச் சொன்னதுல்லை
இப்போ நிலைமை மாறியது
இனிமை வாழ்வும் மறைந்தது...
தப்பாய் எண்ணும் பழக்கத்தால்
தனியாய் செல்லும் நிலையானது
பிரிந்தே வாழ்ந்து வந்தாலும்
பொறுப்பாய் இணைந்தே உழைத்தாலும்
இருந்தும் சண்டை வருகிறதே
இல்லற வாழ்வும் கசக்கிறதே
அமைதியான குடும்ப வாழ்க்கைக்கு
அன்பாய் பரிவாய் பேசுங்கள்
அடுத்தவர் பேச்சைக் கேட்காமல்
அவரவர் வாழ்கையை வாழுங்கள்
எதுகை மோனையுடன் சிறப்பான கவிதை... த.ம. 2
ReplyDeleteநன்றிங்க தம்பி.தொடர்ந்து ஸ்கூலுக்கு வாங்க
Deleteசரியாக சொன்னீர்கள் அண்ணே...அவரவர் வாழ்கையை அவரவர் வாழ்ந்தால் சண்டையும் வராதே இல்லையா?
ReplyDeleteஆனாங்க முக்கியமா நம்ம சகோதரிங்க இதை புரிஞ்சுக்கணும்.வருகைக்கு நன்றிங்க
Deleteஉன் வாழ்க்கை உன் கையில் என்று சொல்ல வைத்த வரிகள் அனைத்தும் அருமை... வாழ்த்துக்கள்...
ReplyDeleteவாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றிங்க தனபாலன்
Deleteதலைப்பும் அதற்கு நல் விளக்கமாய் அமைந்த
ReplyDeleteபடைப்பும் மிக மிக அருமை
தொடர வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றிங்க
Deletetha.ma 4
ReplyDeleteவாழ்க்கை குறித்த புரிதல் இங்கு தவறாகவே சொல்லிக்கொடுக்கப்படுகிறது..அதனால் தான் இந்த பிரிதல்கள்... அதை விளக்கும் வண்ணம் கவிதை...
ReplyDeleteஒருவரை ஒருவர் அனுசரித்தாலே உறவு எப்போதும் மகிழ்ச்சியாய் இருக்கும்
Delete// அடுத்தவர் பேச்சைக் கேட்காமல் ; அவரவர் வாழ்கையை வாழுங்கள் //
ReplyDeleteநன்றாகச் சொன்னீர்கள்
இதுதானே வாழ்கையென எல்லோருமே புரிந்துகொண்டால் சண்டையும் வராது.தங்கள் வருகைக்கு நன்றிங்க அய்யா
Deleteநல்ல அறிவுரை! வீட்டில் கேட்க மாட்டேங்குறாங்களே! அங்கதான் ஆரம்பிக்குது சண்டை!
ReplyDeleteஅதையும் நீங்க புரிஞ்சி அமைதியா இருந்தா சண்டை ஏன் வருது?
Delete//இப்போ நிலைமை மாறியது
ReplyDeleteஇனிமை வாழ்வும் மறைந்தது...
தப்பாய் எண்ணும் பழக்கத்தால்
தனியாய் செல்லும் நிலையானது//
சரியாக சொன்னீர்கள்
சந்தேகம்தான் வாழ்கையை மாற்றும் மாய சக்தி என்பதை உணர்ந்தாலே வாழ்க்கை நிம்மதியாய் இருக்கும்
Deleteவிட்டுக் கொடுத்து வாழும் மனோபாவம் குறைந்து விட்டது. சிந்தனையைத் தூண்டிய நல்லதொரு படைப்பு.
ReplyDeleteகுடும்ப வாழ்கையில் விட்டுக் கொடுப்போர் கெட்டுப் போவதில்லை
Deleteஅனுபவக் கவிதை அழகு!
ReplyDeleteஉங்கள் வருகைக்கு நன்றிங்கயா
Deleteமற்றவரை அவரது குறையுடன் ஏற்கும் சுபாவம் இல்லை இப்போது.
ReplyDeleteஎதெற்கெடுத்தாலும் குறை சொல்வது. நானே பெரியவள்/பெரியவன் என்பதை நிரூபிக்க முயலுவது இவையே இப்போதைய அல்லல்களுக்குக் காரணம்.
அவரவர் வாழ்க்கையை வாழ்ந்தால் பிரச்னையே வராதே!
ஆமாங்க ..அவங்க குடுபத்தைப் பத்தி அவங்களே சிந்திச்சா பிரச்சனையே வராது.வேறோருதர்கிட்டே அறிவுரைக் கேட்டா பிரச்னை வரும்
Delete