அன்னையாய் போற்றுவோம் பெண்மையை !
இன்ப இரவை இனிமையாக முடித்துவிட்டு
இன்றைய வேலையென்ன என்றெழுந்து
இருப்பவரைத் தெய்வமாக வணங்கி-தினமும்
இதயம் மகிழத் தொடங்குவாள் சமையலை
என்பிள்ளை என்குடும்பம் என்வீடென
எந்திரமாய் இல்லாமல் அறிவார்ந்து
நல்லாள் செய்வாள் நல்லுணவு சமைப்பாள்-எல்லோரும்
நலம்வாழ இறைவனையும் வணங்கிடுவாள்
கணவனின் துயர் நீக்கும் காசுக்காக
கண்ணியமான வேலைக்கும் சேர்ந்திடுவாள்
கருத்தாகங்கே களப்பணியும் செய்திட்டு-எப்போதும்
கருணையே வடிவான பெண்மையும் போற்றிடுவாள்
விரைவாக வந்திடுவாள் விழுதுகளைக் கண்டவுடன்
வீட்டிற்குள் ஆனந்தமாய் நுழைந்திடுவாள்
விரும்பியதை ஊட்டி மகிழ்வாள்- பிள்ளைக்கு
வீட்டுப்பாடம் சொல்லியும் துணைபுரிவாள்.
அன்பையே போதிக்கும் அன்னைய வளுக்கு
ஆத்திரமே வந்திட்டால் அத்தனையும் நாசமாகும்
அகமறிந்து செய்திட்டால் அன்பே நிரந்தரமாம்-பெண்ணிடம்
அன்போடு இருப்போம் அன்னையாய்ப் போற்றுவோம்
இன்றைய வேலையென்ன என்றெழுந்து
இருப்பவரைத் தெய்வமாக வணங்கி-தினமும்
இதயம் மகிழத் தொடங்குவாள் சமையலை
என்பிள்ளை என்குடும்பம் என்வீடென
எந்திரமாய் இல்லாமல் அறிவார்ந்து
நல்லாள் செய்வாள் நல்லுணவு சமைப்பாள்-எல்லோரும்
நலம்வாழ இறைவனையும் வணங்கிடுவாள்
கணவனின் துயர் நீக்கும் காசுக்காக
கண்ணியமான வேலைக்கும் சேர்ந்திடுவாள்
கருத்தாகங்கே களப்பணியும் செய்திட்டு-எப்போதும்
கருணையே வடிவான பெண்மையும் போற்றிடுவாள்
விரைவாக வந்திடுவாள் விழுதுகளைக் கண்டவுடன்
வீட்டிற்குள் ஆனந்தமாய் நுழைந்திடுவாள்
விரும்பியதை ஊட்டி மகிழ்வாள்- பிள்ளைக்கு
வீட்டுப்பாடம் சொல்லியும் துணைபுரிவாள்.
அன்பையே போதிக்கும் அன்னைய வளுக்கு
ஆத்திரமே வந்திட்டால் அத்தனையும் நாசமாகும்
அகமறிந்து செய்திட்டால் அன்பே நிரந்தரமாம்-பெண்ணிடம்
அன்போடு இருப்போம் அன்னையாய்ப் போற்றுவோம்
எல்லா உயிர்களிடத்தும் அன்பு இருக்கட்டும். அன்னை போற்றுதலுக்கு நன்றி!
ReplyDeleteஉங்களையும் எல்லா வயதான ,இளமையான பெண்களையும் அன்னையாய் போற்றினால் தொல்லையே இருக்காதே
Deleteஅன்னையாய் போற்றியதற்கு நன்றி. ஆனால் அந்த இனிய தோழியின்
ReplyDeleteசுமையை ஆண்கள் பகிர்ந்து கொண்டால் மகிழ்வாள் அவள்.
நிச்சயம்,சந்தோசம் மட்டுமல்ல சுமைகளும் சோகங்களும் கூட பகிர்ந்து நட்புப் பாராட்டவேண்டும்
Deleteஅன்னையர் தினத்திற்கு அட்வான்ஸாக ஒரு கவிதை ! நாளைய கவிதையை எதிர்பார்க்கிறேன்...
ReplyDeleteயானை வரும் பின்னே
Deleteமணியோசை வரும் முன்னே அதுபோலத்தான் இன்றே அவர்களை வாழ்த்திட்டு நாளை கொண்டாடலாமே
ம்.ம்...... பழமொழி...கவியாழி அய்யா புது காரு புது சட்டை புதுகவிதை கலக்கறேள்.....
Deleteசிறப்பான வரிகள் ஐயா...வாழ்த்துக்கள்...
ReplyDeleteநன்றி நண்பரே ,எல்லோரும் நன்னாளில் வாழ்த்துவோம்
Deleteபெண்மை போற்றுதும் ;
ReplyDeleteஅன்னை போற்றுதும் ;
அழகு !
நன்றிங்கம்மா,இதுவும் வாழ்வியல்
Deleteகடமைதானே
//பெண்ணிடம்
ReplyDeleteஅன்போடு இருப்போம் அன்னையாய்ப் போற்றுவோம்
//
இந்த காலத்திற்கு தேவையான கருத்து
ஆமாங்க நண்பரே மங்கையர் தினம் வரும்போதும் எல்லோரும் வாழ்த்த வேண்டும்
Deleteஅருமையான கவிதை கவிஞர் சார்.
ReplyDeleteபாவி யாருன்னு கடைசிலே சொல்றேன் கடைசீலே சொல்றேன்னு எங்களை தேவுடு காக்க வைத்தது தான் மிச்சம். எங்க சொன்னீங்க.... இப்படி ஏமாற்றிவிட்டீர்களே இது நியாயமா சார்.
என் முறைக்கு இப்போ சொல்றேன் கேளுங்க யார் பாவின்னு.... கவிதை எழுதத் தெரியாமல் இருக்கிற என் போன்றார் தான் சார் பாவி.... பாவிகள்.
நீங்க பாவி இல்ல ஆவி தான்
Deleteகவிஞர் சார்,
Deleteநல்ல நகைச்சுவை வருது உங்களுக்கு ரசித்தேன். ஜோக் பதிவு ஒன்றிரண்டு எழுதுங்களேன் ......ப்ளீஸ்
கவிதைகள் ரசிப்பவன் (பேரு வேண்டாமே! எனக்கு கூச்ச சுபாவம்...)
பெண்மையைப் பெருமையாய் அன்னையெனப் போற்றுகவென்னும்
ReplyDeleteஉண்மையை உலகிற்கு அழகான கவியியற்றி பெருமையாக உரைத்தீட்டீர்!
அருமை! வாழ்த்துக்கள் சகோதரரே!
நன்றிங்க.உண்மையைத்தானே எடுத்துரைத்தேன்.உங்களை வாழ்த்துவதும் எங்களது கடமையல்லவா.
Deleteபெண்மையைப் போற்றுவோம்! அருமையான கவிதை! பகிர்வுக்கு நன்றி!
ReplyDeleteசுரேஷ், உங்கள் பேய்கள் ஓய்வதில்லை தொடர் அருமை.. திகிலான கதை சுவராஸ்யத்திற்கு குறைவே இல்லை. எல்லாரும் படிக்க வேண்டியது.
Deleteஉங்கள் கவிதைகள் அழகுணர்ச்சியுடன் எழுதப்பட்டவைகள். கண்ணேதிர சித்திரம்போல் காட்சிகளை விரியவைக்கக் கூடியவை. நல்ல கவிதைகளை தமிழ் கூறும் நல்லுலகத்திற்கு வழங்கி வரும் உங்கள் பனி சிறக்கட்டும். ஒருவாரத்தில் எத்தனை எழுதிவிடுகிறீர்கள் வாழ்க!!
ReplyDeleteபீட்டர் அருமைநாயகம்
அன்பையே போதிக்கும் அன்னைய வளுக்கு
ReplyDeleteஆத்திரமே வந்திட்டால் அத்தனையும் நாசமாகும்
அகமறிந்து செய்திட்டால் அன்பே நிரந்தரமாம்-பெண்ணிடம்
அன்போடு இருப்போம் அன்னையாய்ப் போற்றுவோம்//
அருமை .
நன்றிங்க ,உங்களையெல்லாம் வாழ்த்த கிடைத்த சந்தர்பத்திற்கு உங்களுக்குத்தான் நன்றி சொல்லணும்.
Deleteஅன்னையைப் போற்றும் இன்பக் கவிதைக்கு வாழ்த்துக்கள் ஐயா .
ReplyDeleteமிக்க நன்றி பகிர்வுக்கு .
நன்றிங்கம்மா.அன்னையர் தின வாழ்த்துக்கள்
Deleteஅன்னையைப் போற்றுவோம்!
ReplyDeleteஆமாங்கையா நாமெல்லோரும் வாழ்த்துவோம்
Deleteஅருமையா இருக்கு வாழ்த்துக்கள்
ReplyDeleteவாழ்த்துக்கு நன்றிங்க
Deleteஅன்பையே போதிக்கும் அன்னைய வளுக்கு
ReplyDeleteஆத்திரமே வந்திட்டால் அத்தனையும் நாசமாகும்
அகமறிந்து செய்திட்டால் அன்பே நிரந்தரமாம்-பெண்ணிடம்
அன்போடு இருப்போம் அன்னையாய்ப் போற்றுவோம்
இனிய மகளிர்தினத்திற்கு
அருமையான கவிதை ..!பாராட்டுக்கள்..
நன்றிங்கம்மா.உங்களுக்குத்தான் மகளீர்தின வாழ்த்துக்கள்
Deleteபெண்கள் உலகின் கண்கள்
ReplyDeleteஆண்கள் நம்மைக் காக்கும் அருமையான நமது இருகண்கள்
DeleteUngakal Kavithal ellam mikavum arumai. ungalin matra kavithagalai paddikka aarvamaaka ullaen. kavithai thoguthi ethuvum veliyittu ulliergala , aam enil athu engae kidaikkum.
ReplyDeletePalani
arumai thOzharE
ReplyDeleteநன்றிங்க தொடர்ந்து என் தளத்துக்கு படிக்கவந்து கருத்தைச் சொல்லுங்க தோழியரே
Deleteஅழகான போற்றி..
ReplyDeleteநன்றிங்க ரிஷபன்.தொடர்ந்து வாங்க
Deleteஅருமை கண்ணதாசன்...எல்லோருமே பெண்ணை அன்பாய் நடத்தினால் இந்த உலகமே நல்லாகிவிடுமே...
ReplyDeleteஅதைத்தானே நானும் விரும்புறேன்.அதற்காகத்தானே இந்த கவிதையே .மீண்டும் வாங்க ஆதரவு தாங்க.
Deleteகவியாழி ஐயா...
ReplyDeleteகவிதை அருமையாக உள்ளது.
ஆனால்
ஆண்கள் எல்லோருக்கும்
அன்னை மட்டும் தான்
பெண்கள் தினத்தில்
கண்களின் தெரிகிறதா...?
அன்னைனைத் தவிர
பெண்களைப் போற்றி
ஒரு கவிதை எழுதுங்கள் ஐயா.
இது என் வேண்டுகோள்!!
நன்றி.
அம்மாவாக எண்ணிவிட்டால் ஆபத்து இருக்காதே. என்னை பொறுத்தவரை அன்பு செய்யும் அனைவரும் அன்னையே.
DeleteVazhakkampol arumai thodara vaazhththukkal
ReplyDeleteநன்றிங்க சார்.உங்க டேபிலேட் சரியானதும் தமிழுக்கு பஞ்சமிருக்காது
Deleteஅன்னையைப் போற்றும், யாவரும், அதுவே ஒரு பெண், மனைவியாக அமைந்தால், அவளைப் பற்றி பெருமையாக சொல்லுவதில்லை...அவளும் ஒரு அன்னைதானே, பெண்மையையும், அவளது நல்ல பண்புகளையும், யாருமே எழுதுவதில்லை, பெண், என்பவள் கணவனை ஆட்டி வைப்பவள், என்றே எழுதுகிறார்கள்...அந்த வித்தத்தில் உங்கள் எழுத்துக்கள் அருமை..
Deleteஎன் கண்களில் கண்ணீர், நல்ல படைப்பு. வாழ்த்துக்கள்.
ReplyDeleteஎன் கண்களில் கண்ணீர், நல்ல படைப்பு. வாழ்த்துக்கள்.
ReplyDelete