Showing posts with label கவிதை/சமூகம்/நட்பு. Show all posts
Showing posts with label கவிதை/சமூகம்/நட்பு. Show all posts

Tuesday, 20 August 2013

குடும்பம் சிறக்கச் செய்வீர்

மனமே மனிதனின் எதிரி
மாற்றமே அவனின் நண்பன்
தினமும் நல்லதை செய்தால்
திடமாய்  மாறும் மனிதமே

கெடுதல் செய்யா மனதே
கொடுக்கும் நன்மை நன்றே
அடுத்தவர் மனதை  வருத்தி
ஆறுதல் சொல்ல வேண்டாமே

துணையாய் நல்ல வார்த்தை
துயரம் போக்க இயலும்
துணிவு என்று நினைத்து
துச்சம் கொள்ள வேண்டாமே

பழிகள் செய்யா வாழ்வும்
பழுதாய் போனதும் இல்லை
பயந்தும் வாழ்வோர்  என்றும்
பெருமை பேசிய தில்லையே

கொடுத்தும் உதவி செய்து
கோழை யாகக  வேண்டாமே
கொள்கை நன்றே வகுத்து
குடும்பம் சிறக்கச் செய்வீரேTuesday, 18 June 2013

தமிழைப் போற்றியேப் பதிவிடுவோம்

நன்றி சொல்லா நட்பிணையே
நாங்கள் வளர்க்க விரும்புகிறோம்
நல்லவர் கெட்டவர் வெறுப்பின்றி
நண்பராய் நினைத்தே பழகுகிறோம்

வல்லவர் வறியவர் சொல்லாமல்
வாழ்த்துச் சொல்லி மகிழ்ந்திடுவோம்
இல்லையே என்பதைஉணர்த்தாமல்
இருப்பதைப் பகிர்ந்தே புசித்திடுவோம்

முதியவர் இளையவர் பகிர்வின்றி
முறையே நட்பாய் மதித்திடுவோம்
ஆடவர் பெண்டீர் அனைவருமே
அன்பாய் மதித்தே நடந்திடுவோம்

நல்லவவை கெட்டவை நடப்பதையே
நாலே வரிகளில் எழுதிடுவோம்
நன்மையும் தீமையும் நோக்காமல்
நலமே போற்றியே பதிவிடுவோம்

 இன்னல் துயரம் நடப்புகளை
இணைய வலையில் பகிர்ந்திடுவோம்
எல்லா ஊரிலும் எம்தமிழை
இணையம் கொண்டே வளர்த்திடுவோம்

சாதி மதங்களை மறந்திடுவோம்
சமத்துவம் நன்றே போற்றிடுவோம்
ஊரும் பேரும் தெரியாமல்
உணர்வால் தமிழனய் அறிந்திடுவோம்

இல்லம் இனமே பாராமல்
இணைய வழியே பேசிடுவோம்
வல்லமைத் தந்த தமிழுக்கு
வாழ்த்துச் சொல்லியே வணங்கிடுவோம்

Tuesday, 23 April 2013

குறையே பேசும் நண்பர்களே


குறையே பேசும் நண்பர்களே
குறைத்தே மனதில் காயங்களை
மறைந்துப் போகா வார்த்தைகளை
மறுபடி மடிந்து பேசுவதேன்

நிறைகளை நீங்கள் பேசினால்
நியாயமாக முதுகில் தட்டினால்
பறந்தே போகும் வலியெல்லாம்
பார்ப்பவர் மனதில் மகிழ்ச்சியாய்

தவறே அவரும் செய்தாலும்
தனையே மறந்து புரிந்தாலும்
உறவை வளர்க்க உறுதுணையாய்
உள்ளதைச் சொல்லி திருத்தலாமே

உலகில் பலபேர் இருந்தாலும்
உணர்த்த முடியா காரணத்தால்
பகையே அதனால் உண்டாகி
பலரும் வருந்தும் நிலைவேண்டா

ஒற்றுமை கொண்டு வாழ்வதினால்
உயர்வே நிறைய பெற்றிடலாம்
கற்றவர் இதனை கண்டுரைத்து
கண்டவர் திருந்த வாய்ப்பளிப்போமே


Saturday, 20 April 2013

மனிதம் போற்றி வாழுங்களேன்.....

இனமே தமிழன் என்றுரைத்து
எதிலும் சேர்ந்தே முடிவெடுத்து
பணமோ மதமோ பாராமல்-நட்பை
போற்றி தினமே வாழுங்களேன்

அண்ணன் தம்பி உறவுகளாய்
அனைவரும் கூடி வாழ்வதனால்
தின்னைதோறும் நட்புறவாய்-அன்பை
தினமும் போற்றி மகிழ்ந்திடலாம்

உறவை மறுத்து வாழ்வதனால்
உயர்வும் மகிழ்வும் தடையாகும்
பிரிவைப் போற்றி வாழாமல்-ஒன்றிப்
பிணைந்தே  மகிழ்ந்தே வாழுங்கள்

மகிழ்ச்சியின் தத்துவம் புரியுமே
மனித நேயம் தெரியுமே
மக்கள் மனதை அறியுமே-உறவை
மானிடம் போற்றி மகிழுமே

சாதியும் மதமும் சொல்கிறது
சரிசமம் உயிரென உயர்வாக
நீதிக் கதைகளும் இதிகாசம்-எங்கும்
நித்தம் சொல்வதும் இதைத்தானே

மனித நேயம் வேண்டாமென
மதமும் எங்கும்  சொன்னதில்லை
மனிதனாக வாழ்வதற்கு  -நீங்களும்
மனிதம் போற்றி வாழுங்களேன்

Monday, 1 April 2013

நேசமுள்ள நட்பு

சொந்தமாய் உறவாய்
சொல்லமுடியா உணர்வாய்
நெஞ்சமே மகிழ்வாய்
நேசமுடன் இருப்பார்

காசுபணம் தேவையில்லை
கற்பனையாய் வருவதில்லை
நேசமுள்ள நட்புக்கு-எப்போதும்
நேரம் காலம் போதவில்லை

ஆணோ பெண்ணோ
அன்புக்கு விலையேது
அடுத்தவரை நம்பிவிட்டால்
அவதிக்கு உணர்வேது

ஏசுவோர் இவரைப்பற்றி
என்னென்ன சொன்னாலும்
பேசுவோர் தவறாக-பிரிக்க
பெருங்குறையைச் சொன்னாலும்

ஈசனே எதிரில் வந்து
இல்லாததைச் சொல்லி
இருவரையும் பிரித்தாலும்
இயலாமல் போய்விடுமாம்

உறவென்றே இருப்பார்கள்
உருகியுருகியே சிரிப்பார்கள்
பெருமையாக நட்புகொண்டு
பேரின்பம டைவார்கள்

துன்பமே வந்தாலும்
தோள்கொடுத் திருப்பார்கள்
துடிப்போடு  எப்போதும்-அன்பு
துணையாக இருப்பார்கள்

Sunday, 31 March 2013

நண்பனே திரும்பி வா


நண்பனே நண்பனே நலமா
நம்மூரில் எல்லோரும் நலம்
நாடுகடந்த நம் நட்பு
நாதியத்து போனதாலே

வீதியெங்கும் பேசுகிறார்
வேதனையாய் சொல்லுகிறார்
சோதனையான நட்புக்கு-ஆறுதல்
சொல்லும்படி இல்லையே

காடுக் கம்மாய் சுத்தியது
கிணத்துக்குள்ளே மூழ்கியது
திருட்டு மாங்காயும் புளியும்
திரும்பவும் உண்ணத்தோணுது

நம்மூரு உணவுக்கு
நானிங்கே அடிமை
நண்பன் நீ சென்றதாலே
நாக்கும்கூட தனிமை

ஏக்கமாய் உள்ளது
எப்போது நீ வருவாய்
இருவருமே இங்கே-உழைக்க
இணைந்தே செல்லலாமே


சுற்றமும் நட்பும்
சூழ்ந்து வாழ நீ வா
உற்றதுணை எல்லோரும்
உடனிருக்க திரும்பி வா

+++++++கவியாழி+++++++