மனிதம் போற்றி வாழுங்களேன்.....
இனமே தமிழன் என்றுரைத்து
எதிலும் சேர்ந்தே முடிவெடுத்து
பணமோ மதமோ பாராமல்-நட்பை
போற்றி தினமே வாழுங்களேன்
அண்ணன் தம்பி உறவுகளாய்
அனைவரும் கூடி வாழ்வதனால்
தின்னைதோறும் நட்புறவாய்-அன்பை
தினமும் போற்றி மகிழ்ந்திடலாம்
உறவை மறுத்து வாழ்வதனால்
உயர்வும் மகிழ்வும் தடையாகும்
பிரிவைப் போற்றி வாழாமல்-ஒன்றிப்
பிணைந்தே மகிழ்ந்தே வாழுங்கள்
மகிழ்ச்சியின் தத்துவம் புரியுமே
மனித நேயம் தெரியுமே
மக்கள் மனதை அறியுமே-உறவை
மானிடம் போற்றி மகிழுமே
சாதியும் மதமும் சொல்கிறது
சரிசமம் உயிரென உயர்வாக
நீதிக் கதைகளும் இதிகாசம்-எங்கும்
நித்தம் சொல்வதும் இதைத்தானே
மனித நேயம் வேண்டாமென
மதமும் எங்கும் சொன்னதில்லை
மனிதனாக வாழ்வதற்கு -நீங்களும்
மனிதம் போற்றி வாழுங்களேன்
எதிலும் சேர்ந்தே முடிவெடுத்து
பணமோ மதமோ பாராமல்-நட்பை
போற்றி தினமே வாழுங்களேன்
அண்ணன் தம்பி உறவுகளாய்
அனைவரும் கூடி வாழ்வதனால்
தின்னைதோறும் நட்புறவாய்-அன்பை
தினமும் போற்றி மகிழ்ந்திடலாம்
உறவை மறுத்து வாழ்வதனால்
உயர்வும் மகிழ்வும் தடையாகும்
பிரிவைப் போற்றி வாழாமல்-ஒன்றிப்
பிணைந்தே மகிழ்ந்தே வாழுங்கள்
மகிழ்ச்சியின் தத்துவம் புரியுமே
மனித நேயம் தெரியுமே
மக்கள் மனதை அறியுமே-உறவை
மானிடம் போற்றி மகிழுமே
சாதியும் மதமும் சொல்கிறது
சரிசமம் உயிரென உயர்வாக
நீதிக் கதைகளும் இதிகாசம்-எங்கும்
நித்தம் சொல்வதும் இதைத்தானே
மதமும் எங்கும் சொன்னதில்லை
மனிதனாக வாழ்வதற்கு -நீங்களும்
மனிதம் போற்றி வாழுங்களேன்
Ramani S said :
ReplyDeletemika mika arumai
vaazhththukkaludan...
· Reply கவியாழி கண்ணதாசன்
வாழ்த்துக்கு நன்றிங்க சார்
Ramani S Said :
tha.ma 4
· Reply கவியாழி கண்ணதாசன்
நன்றிங்க சார்
Shakkana M. NIJAM
மனித நேயம் - சகோதரத்துவம் அனைவரிடத்திலும் அவசியம்
நல்லதொரு ஆக்கம் !
தொடர வாழ்த்துகள்...
· Reply கவியாழி கண்ணதாசன்
வாழ்த்துக்கு நன்றி
கி. பாரதிதாசன் கவிஞா்
தமிழ்மணம் 5
தமிழ்மனம் கண்டு தமிழ்மணம் தந்தேன்!
அமிழ்தெனும் ஆக்கம் அறிந்து!
· Reply கவியாழி கண்ணதாசன்
மணத்துக்கும் மனதுக்கும் மகிழ்ச்சி நன்றிகள் அய்யா.
கி. பாரதிதாசன் கவிஞா்
வணக்கம்!
மனிதம் மலா்ந்தால் மதந்தரும் துன்பம்
இனியும் வருமோ இயம்பு!
கவிஞா் கி. பாரதிதாசன்
தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு
· Reply கவியாழி கண்ணதாசன்
உண்மைதான் .மனிதம் இருந்தால் மதம் தேவையில்லை.
வேடந்தாங்கல் - கருண்
மனிதம் போற்றி வாழுங்களேன்
· Reply கவியாழி கண்ணதாசன்
இதனால் எல்லோருக்குமே நன்மைதான்.நீங்க வந்ததுக்கும் கருத்து பகிர்ந்தமைக்குக் நன்றி கருண்
malar balan3
மனித நேயம் வேண்டாமென
மதமும் எங்கும் சொன்னதில்லை//அற்புதம் சொன்னீங்க
· Reply கவியாழி கண்ணதாசன்
உண்மைதானே .எந்தமதம் மனிதனை அவமானப் படுத்தவும் கொலை செய்யவும் சொல்கிறது
Ambal adiyal
மனிதநேயம் போற்றி வாழ்வதே எல்லோருக்கும் சிறப்பு .
வாழ்த்துக்கள் ஐயா இனிய கவிதைக்கு.
· Reply கவியாழி கண்ணதாசன்
உண்மைதான்.வாழ்த்துக்கு நன்றி
Muruganandan M.K.
அருமை "மனிதனாக வாழ்வதற்கு நீங்கள்- என்றும்
மனிதம் போற்றி வாழுங்களேன்"
Rajeswari Jaghamani
மனித நேயம் வேண்டாமென
மதமும் எங்கும் சொன்னதில்லை
மனிதனாக வாழ்வதற்கு நீங்கள்- என்றும்
மனிதம் போற்றி வாழுங்களேன்
மானுடம் போற்றும் கவிதைக்குப் பாராட்டுக்கள்..
· Reply கவியாழி கண்ணதாசன்
பாராட்டுக்கு நன்றிங்கம்மா,மானுடம் போற்றப்படவேண்டும் உண்மைதான்
s suresh
மனிதம் மறந்து போனதால்தான் மரமாய் இருக்கிறோம்! இனியாவது மனிதம் போற்றுவோம்! நல்ல கவிதை! வாழ்த்துக்கள்!
· Reply கவியாழி கண்ணதாசன்வாழ்த்துக்கு நன்றிங்க சுரேஷ்.
SR H
அழகிய சொல்வளமிக்க கவிதை ....!
· Reply கவியாழி கண்ணதாசன்
நன்றிங்க ,தொடர்ந்து வாங்க கருத்தை தாங்க
Dindigul Dhanabalan
அருமை... வாழ்த்துக்கள்...
இந்த கருத்துரைப் பெட்டியை எடுத்து விடுங்கள்...
தி தமிழ் இளங்கோ
மனிதம் போற்றும் கவிதை! வாழ்த்துக்கள்!
கவிஞருக்கு! நான் எனது கருத்துரைகளை MICROSOFT WORD - இல் பதிந்து கொள்வேன். பின்னர் நகலெடுத்து கருத்துரைப் பெட்டியில் இடுவேன். முன்பு உங்கள் பதிவு GOOGLE BLOGGER - இல் இருந்தபோது இவ்வாறு செய்ய முடிந்தது. விரிவாகவும் கருத்துரை தர முடிந்தது. ஆனால் இப்போது நீங்கள் GOOGLE PLUS - இற்கு மாறிய பிறகு அவ்வாறு நகலெடுத்து ஒட்ட இயலவில்லை. கருத்துரையையும் சுருக்கமாக எழுத வேண்டியுள்ளது. மின்வெட்டு எப்போது வரும் என்று தெரியாத காரணத்தால் இன்னும் சிரமம். மேலும் GOOGLE PLUS இல் பதிவர்களுக்கு பல அசௌகரியங்கள் உள்ளன. ம்ற்றவர்களையும் யோசனையை கேட பின்னர் பழையடியே blogger இற்கு மாறவும். இரண்டையுமே நீங்கள் தொடரலாம்.
· Reply கவியாழி கண்ணதாசன்
உண்மைதான் சரிசெய்துவிடுகிறேன்.வாழ்த்துக்கு நன்றி
பழைய கருத்துரை பெட்டிற்கு மாற்றினால் இதுவரை இட்ட கருத்துரைகள் எதுவும் வரவில்லை...
ReplyDeleteஅதனால் அவர்களின் கருத்துரையை அப்படியே எழுதி விட்டேன்...
இனிமேல் பழைய கருத்துரை பெட்டி தொடர வாழ்த்துக்கள்...
சகோதரர் திண்டுக்கல் தனபாலன் அவர்களுக்கு நன்றி! இனிமேல்தான் உங்கள் வலைப் பக்கம் வர வேண்டும்.
Deleteஉண்மைதான் தனபாலன் சார் உதவியமைக்கு நன்றி.அவர்தான் எனக்கும் உதவியாக இருக்கிறார்.
Deleteசகோதரரே! மனிதநேயம் பற்றி அழகான கவி சொன்னீர்கள். சிறந்த கருத்து.
ReplyDeleteமனிதன் கடைப்பிடிக்கவேண்டிய முக்கியமான பண்பு மனிதநேயமே.
வாழ்த்துக்கள்!
காலையிலிருந்து கூகில் +ல் கருத்தூட்டம் இருந்தமையால் என்னால் கருத்துப்பதிய முடியவில்லை. இப்போ சரியாகியது மகிழ்ச்சியே...
நான் ஏதோ தவறாக செய்ததை திருவாளர்.தனபாலன் சார் தான் சரிப் படுத்திக் கொடுத்தார் அவருக்குத்தான் நன்றி சொல்லணும்..தொடர்ந்து வந்ததுக்கு உங்களுக்கும் எனது நன்றிகள்
Delete//உறவை மறுத்து வாழ்வதனால்
ReplyDeleteஉயர்வும் மகிழ்வும் தடையாகும்//
நல்ல வரிகள்! ரசித்தேன்...
நன்றிங்க அய்யா. நீங்கள் வந்தமைக்கும் ரசித்தமைக்கும் நன்றி
Deleteஅன்பை
ReplyDeleteதினமும் போற்றி மகிழ்ந்திடலாம்//////
அன்புதானே இந்த உலகை இன்றும் இயக்கிக் கொண்டு இருக்கிறது...
அய்யா, நலமா? நீண்ட நாட்களுக்குப் பிறகு சந்திக்கிறோம். இடையில் அனைவரையும் சந்திக்க வாய்ப்பு கிடைக்கல... இனி தொடர்ந்து இணையம் வருவேன் என நம்புகிறேன்...
நலமே நீங்கள் நலமா?/நிச்சயம் தொடர்ந்து வாங்க
Delete// மனித நேயம் வேண்டாமென
ReplyDeleteமதமும் எங்கும் சொன்னதில்லை//
உண்மைதான். அருமையான கவிதை! வாழ்த்துக்கள்!
வாழ்த்துக்கு நன்றிங்க அய்யா
Deleteஅருமையான கவிதை! வாழ்த்துக்கள்!
ReplyDeletesubbu thatha.
www.subbuthatha.blogspot.in
சிந்திக்க வைக்கும் அருமையான கவிதை.வாழ்த்துக்கள்
ReplyDeleteதாமதமாக வந்தாலும் தவறாமல் படித்து விட்டு கருத்து சொல்லி வாழ்த்தியமைக்கு நன்றிங்க டினேஷ்
Deleteநன்றி,தொடர்ந்து வாங்க
ReplyDeleteநல்ல கருத்துக்களைக் கொண்ட கவிதை கண்ணதாசன் அவர்களே! வாழ்த்துக்கள்.
ReplyDeleteஉங்கள் வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றி
ReplyDeleteமனித நேயம் வேண்டாமென எதுவும் இதுவ்ர சொன்னதில்லை.
ReplyDeleteமனிதனாக இருக்க வேண்டுமெனத்தான் சொல்லுகிறேன்.தங்களின் வருகைக்கு நன்றி
Delete