தமிழைப் போற்றியேப் பதிவிடுவோம்
நன்றி சொல்லா நட்பிணையே
நாங்கள் வளர்க்க விரும்புகிறோம்
நல்லவர் கெட்டவர் வெறுப்பின்றி
நண்பராய் நினைத்தே பழகுகிறோம்
வல்லவர் வறியவர் சொல்லாமல்
வாழ்த்துச் சொல்லி மகிழ்ந்திடுவோம்
இல்லையே என்பதைஉணர்த்தாமல்
இருப்பதைப் பகிர்ந்தே புசித்திடுவோம்
முதியவர் இளையவர் பகிர்வின்றி
முறையே நட்பாய் மதித்திடுவோம்
ஆடவர் பெண்டீர் அனைவருமே
அன்பாய் மதித்தே நடந்திடுவோம்
நல்லவவை கெட்டவை நடப்பதையே
நாலே வரிகளில் எழுதிடுவோம்
நன்மையும் தீமையும் நோக்காமல்
நலமே போற்றியே பதிவிடுவோம்
இன்னல் துயரம் நடப்புகளை
இணைய வலையில் பகிர்ந்திடுவோம்
எல்லா ஊரிலும் எம்தமிழை
இணையம் கொண்டே வளர்த்திடுவோம்
சாதி மதங்களை மறந்திடுவோம்
சமத்துவம் நன்றே போற்றிடுவோம்
ஊரும் பேரும் தெரியாமல்
உணர்வால் தமிழனய் அறிந்திடுவோம்
இல்லம் இனமே பாராமல்
இணைய வழியே பேசிடுவோம்
வல்லமைத் தந்த தமிழுக்கு
வாழ்த்துச் சொல்லியே வணங்கிடுவோம்
ஒவ்வொன்றையும் அருமையாகச் சொன்னீர்கள்... வாழ்த்துக்கள் ஐயா...
ReplyDeleteஉண்மையைச் சொன்னேன் உள்ளதை உணர்ந்தேன் .வருகைக்கு நன்றிங்க தனபாலன்
Deleteநன்று... நல்ல கவிதை ஐயா...
ReplyDeleteநன்றிங்க தம்பி.தொடர்ந்து வாங்க இன்பமும் தாங்க
Deleteஒவ்வொன்றும் அருமை, தமிழை தமிழ் எழுதி நாளும் வளர்த்திடுவோம்.
ReplyDeleteஎல்லோருக்கும் விருப்பமான ஆராய்ச்சியும் கூட நாமும் தமிழில் செய்வோம்.
Deleteதமிழுக்கு வாழ்த்துச் சொல்லுதல்
ReplyDeleteதாய்க்குச் சொல்லுதல் போலத்தானே
நம் வாழ்வும் வளமும் தமிழைச் சார்ந்து தானே
மனம் கவர்ந்த பதிவு
வாழ்த்துக்கள்
தமிழும் தாயும் ஒன்றுதான் சார்.சரியாச் சொன்னீங்க.தமிழை தாயை மறந்த உறவுண்டோ.வருகைக்கு மிக்க நன்றி
Deleteசிறப்பான கவிதை!
ReplyDeleteநன்றிங்க உங்களின் நானும் நண்பனாக திருச்சி வருவேன்
Deleteசிந்தனைக்கு விருந்தாய் சிறந்த கவிதந்தீரே
ReplyDeleteவந்தனை செய்தும்மை வாழ்த்துகிறேன் நன்றியுடன்!...
த ம.5
வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றிங்க
Delete''..வல்லமைத் தந்த தமிழுக்கு
ReplyDeleteவாழ்த்துச் சொல்லியே வணங்கிடுவோம்...''
ஆம் தமிழைப் போற்றி வளர்ப்போம்.
இனிய வாழ்த்து.
வேதா. இலங்காதிலகம்.
வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றிங்க
Deleteமிழனென்றெமக்கு அடையாளம் தந்தவளாம்
ReplyDeleteதமிழன்னையின் தாள் பணிந்தே வாழ்த்திடுவோம்
வருகைக்கு நன்றி டினேஷ் சுந்தர்
Deleteமன்னிக்கவும் மிழன் அன்று தமிழன்
ReplyDeleteநன்றிங்க
Deleteதமிழின் பெருமை சொல்லி செல்கிறது கவிதை
ReplyDeleteமுதியவர் இளையவர் பகிர்வின்றி
Deleteமுறையே நட்பாய் மதித்திடுவோம்//
நட்பையும் சேர்த்துதானே சொல்லியுள்ளேன்
வருகைக்கு நன்றி
மிக மிக அருமை, சொல்லியக் கருவும் சொல்லிய விதமும் அருமை. :)
ReplyDeleteஉங்களின் வருகையும் எனக்குப் பெருமை.தொடர்ந்து வாங்க
Delete
ReplyDeleteதிக்கெட்டும் பரவட்டும் தமிழின் பெருமை!!
இனி மேலும் தொடரட்டும் உங்களின் கருத்து.தொடர்ந்து வாங்க
Deleteஅழகான சிந்தனைக் கவிதை... எங்கும் தமிழ் பரவட்டும்...
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் நன்றி.தொடர்ந்து வாங்க
Deleteஉணர்வால் தமிழனை அறிந்திடுவோம்
ReplyDeleteஅருமையாகச் சொன்னீர் அய்யா நன்றி
ஆம் நாம் எல்லோருமே உணர்ந்து வாழ்ந்தால் நன்மைதானே.
Deleteஅருமையான கவிதை,,,
ReplyDeleteவந்தமைக்கும் தந்தமைக்கும் நன்றிங்க கருண்
Deleteஅருமையான கருத்துக்களைக் கொண்ட அழகான கவிதை சார்...
ReplyDeleteஊரும் பேரும் தெரியாமல்
ReplyDeleteஉணர்வால் தமிழனாய் இணைய
வல்லமைத் தந்த தமிழுக்கு வாழ்த்து!