நண்பனே திரும்பி வா
நண்பனே நண்பனே நலமா
நம்மூரில் எல்லோரும் நலம்
நாடுகடந்த நம் நட்பு
நாதியத்து போனதாலே
வீதியெங்கும் பேசுகிறார்
வேதனையாய் சொல்லுகிறார்
சோதனையான நட்புக்கு-ஆறுதல்
சொல்லும்படி இல்லையே
காடுக் கம்மாய் சுத்தியது
கிணத்துக்குள்ளே மூழ்கியது
திருட்டு மாங்காயும் புளியும்
திரும்பவும் உண்ணத்தோணுது
நம்மூரு உணவுக்கு
நானிங்கே அடிமை
நண்பன் நீ சென்றதாலே
நாக்கும்கூட தனிமை
ஏக்கமாய் உள்ளது
எப்போது நீ வருவாய்
இருவருமே இங்கே-உழைக்க
இணைந்தே செல்லலாமே
சுற்றமும் நட்பும்
சூழ்ந்து வாழ நீ வா
உற்றதுணை எல்லோரும்
உடனிருக்க திரும்பி வா
+++++++கவியாழி+++++++
மனதில் இருக்கும் ஏக்கம்...
ReplyDeleteஅழகிய கவிதையில்...
நன்றிங்க நண்பரே வந்தமைக்கும் கருத்துப் பகிர்ந்தமைக்கும்
Deleteஇனிய நினைவுகள்
ReplyDeleteநினைந்து சுகிக்க வைக்கும் வரிகள்
"காடுக் கம்மாய் சுத்தியது
கிணத்துக்குள்ளே மூழ்கியது
திருட்டு மாங்காயும் புளியும்
திரும்பவும் உண்ணத்தோணுது.."
பழைய ஞாபகம் எப்போதும் இனிமையானவை
Deleteமலரும் நினைவுகள் என்றும் மங்காத நினைவுகள்.
ReplyDeleteஉண்மைதான் சகோ .நன்றி
Deleteஇனிய நினைவுகள் எனக்கும் மீட்டியதென்பதோ உண்மை... வாழ்த்துக்கள்...
ReplyDeleteநன்றிங்க .எல்லோருக்கும் வரும் இன்பத்தருணமே
Deleteகவிதை வழி கடிதமா !
ReplyDeleteஉண்மைதான் அய்யா
DeleteKAVITHAI ARUMAI :-)
ReplyDeleteநீங்க வந்து கருத்துச் சொன்னதுக்கு நன்றி ஜெய் .
ReplyDeleteசீக்கிரம் நண்பர் வரட்டும்! ஏக்கம் தீரட்டும்! நல்ல கவிதை! வாழ்த்துக்கள்!
ReplyDeleteநம்ம ஊருக்கு வந்தாலே நாளெல்லாம் சந்தோசமே
Deleteகவிதை நண்பனை திரும்ப அழைத்து வரட்டும் ..
ReplyDeleteஆமாம்மா திருந்தி வரட்டும்
Deleteஅந்த நாள் நினைவுகளைக் கவிதை கடிதமாகி விட்டீர்கள்.
ReplyDeleteஉங்கள் நண்பன் சீக்கிரமே வரட்டும்.
இந்த நாளிலும் மறக்க முடியாத தருணமல்லவா
Deleteசுற்றமும் நட்பும்
ReplyDeleteசூழ்ந்து வாழ நீ வா
உற்ற துணையெல்லாம்
உடனிருக்க திரும்பி வா// அருமை
எல்லா நண்பர்கள் யோசிக்க வேண்டியது
ReplyDeleteசுற்றமும் நட்பும்
ReplyDeleteசூழ்ந்து வாழ நீ வா
உற்றதுணை எல்லோரும்
உடனிருக்க திரும்பி வா//
சிறுவயது தோழனை பிரிந்த ஏக்கமும் அவரை திரும்பி வரச்சொல்லும் அன்பு அழைப்பும் கவிதையில் மிளிர்கிறது.
நண்பர் திரும்பி வந்து பழங்கதை பேசி மகிழ வாழ்த்துக்கள்.
தோழரின் தோழமை மறக்குமா அதனால்தான் மீண்டும் அழைக்கிறேன்
Deleteநட்புக்கு ஒரு கவிதை அழகோ அழகு. நண்பேண்டா.
ReplyDeleteஆம் ,நட்புக்காக.
Deleteஎன்ன இருந்தாலும் நம்ம ஊரைப்போல வருமா? நண்பர் வந்து விடுவார்.
ReplyDeleteஎல்லோருக்கும் சொல்லுங்க நம்ம ஊரு நடப்புப் பற்றி
Delete