Posts

தெய்வங்கள்

தெய்வங்கள்

அன்புச் செல்லக் குழந்தைகளே

அன்புச் செல்லக் குழந்தைகளே அறிவில் சிறந்த முல்லைகளே பண்பேக் குறையா செல்வங்களே பாசம் மிகுந்த மொட்டுகளே நல்லப் பிள்ளை அனைவருமே நன்குப் பேசி மகிழுங்களே அன்பு பாசம் அறிவையுமே அறிந்து பகிர்ந்து சொல்லுங்களே மாலைப் பொழுதில் விளையாடி மகிழ்ந்து நட்பாய் ஆடுங்களே மனதில் உள்ள எண்ணங்களை மதித்து உணர்ந்து செய்யுங்களே நல்ல நல்லக் கதைகளையும் நல்லோர் சொன்ன கருத்துகளும் நாளும் படித்து வாருங்களே நாட்டில் சிறந்து வாழுங்களே அன்னைத் தந்தை சொல்வதிலே அர்த்தம் உணர்ந்து கொள்ளுங்களே அறிவைச் சொல்லும் ஆசிரியர்கள் ஆழ்ந்து  மகிந்து   படியுங்களேன் (கவியாழி)

கான்க்ரீட் காற்றும் காடுகளும் மரங்களும்

         தென்றல் காற்று ,மழைக் காற்று ,சோலைக் காற்று ,வாடைக் காற்று என பலவாறு  அழைத்தேப் பழக்கப்பட்ட நமக்கு கான்க்ரீட் காற்றுப் பற்றியும் தெரிந்திருக்கும்.அவ்வாறு தெரியாத நண்பர்களுக்காக இந்தப் பதிவைப் பகிர்வதற்கு விரும்புகிறேன்.          தமிழகம் மட்டுமல்ல இந்தியா முழுதும் காட்டிலும் குடிசையிலும் கொட்டடியிலும் சாலை ஓரத்திலும் குறுகியக் குடிலையே வசிப்படமாகக் கொண்ட அடித்தட்டு மக்களின் கல்வி மற்றும் பொருளாதார மேம்பாட்டினால் சிறிதேனும் சேமிப்பை வைத்துக் கொண்டு கடன் வாங்கியாவது ஒரு சிறிய தார்சுக் கட்டிடத்தை  கட்டி  வசிக்கும் நிலையில் எல்லோருமே ஆசைப் படுகிறார்கள்.         கட்டுமான நிறுவனங்களும் போட்டிப் போட்டுக்கொண்டு அழகிய சிறந்த பாதுகாப்பான காற்றோட்டமான ,வெளிச்சமான வீடுகளை தொகுப்பு வீடுகளாய்,அடுக்குமாடிக் குடியிருப்புகளாய் தனி பங்களாக்களாய்  கட்டி  அவரவர் விரும்பும் வண்ணம் கண்ணைக்கவரும் வகையில் விலையைக் கூட்டியும் கட்டிக் கொடுக்கிறார்கள்.         மேலும் கூட்டுக் குடும்பமுறை நடைமுறையில் தவிர்க்கப் படுவதாலும் ,வேலைக்காக சொந்த ஊரை விட்டு தனிக்குடித்தனமாய் வாழ வேண்டிய அவசியம் ஏற்படுவதனால

தத்து நடை நடந்துவந்து....

தத்து நடை நடந்து வந்து தாவித்தாவி தூக்கச் சொல்லும் திக்கித் திக்கி பேசுகின்ற தின்ன அடம் செய்யுகின்ற முத்து முத்துப் பல்லைக் காட்டி முத்தம் தந்து மடியில் அமர்ந்து முப்பொழுதும் அருகில் வந்தும் முத்தமழை விரும்பித் தந்தும் பட்டுப் போன்ற மேனியுடன் பாட்டுப்பாடிக் கதைகள் கேட்கும் பாட்டன் பாட்டி எப்பொழுதும் பக்கத்திலே இருக்கச் சொல்லும் பஞ்சுபோன்ற மெத்தை யாக்கி படுத்துறங்கி நெஞ்சின் மேலே பகலும் இரவும் எப்பொழுதும் பக்கத்திலே நெருங்கி வந்து தொட்டுத் தொட்டுப் பேசிதினம் தொந்தரவு செய்கின்ற மொட்டு போன்ற மழலைகளுக்கு நித்தம் கதை சொல்லுங்களேன்  (கவியாழி)

மழையே நீயும் மீண்டும் வா!வா!!

மழையே நீயும் வா வா மகிழ்ச்சி எமக்குத் தா தா மரங்கள் வளர  செடிகள் வளர மீண்டும் மீண்டும் தொடர்ந்து வா பிழையே செய்யா உயிரினமும் பிழைக்க வைக்கத் தொடர்ந்து  வா பிழையாய் வெட்டிய  மரத்தை பிழைக்க வைக்க நீயும் வா புயலாய் சூழ்ந்தும் ஓடிவா புதிதாய் உணர்வைக்  கொடுக்க வா பூச்சியும் பறவையும் பறக்கவும் புல்லும் பூண்டும் முளைக்கவும்  வா நாட்டு மக்கள் மனங்குளிர வா நல்ல காற்றுமே கிடைக்க நாகரீகம் என்ற பெயரில் நாசமாக்கும் குளிர்விப்பான் தவிர்க்க வா கடனே கேட்கா  காற்றை கண்குளிர கொடுக்க  வா காய்ந்த நிலத்தைப் பசுமையாக்க கழனிப் பயிர்கள் செழிக்க வா நாட்டு உழவன் மகிழ வா நாளும் உணவு கிடைக்க வா நீயும் உடனே விரைந்து வா நித்தமும் மக்கள்  மகிழ வா (கவியாழி)

இறைவனைக் காணவில்லையா?

இறைவனை இன்ப மாக்க இன்னிசைச் சத்தம் ஒலிக்கப் பறையடி மேளம் முழங்கப் பாட்டுப்பாடி ஆட்டமாடி வேட்டுச் சத்தம் கேட்டுமே வெளிச்சமாய் ஒளி வீச உடுக்கை அடித்துப் பாடி ஊரே ஒன்றாய் கூடி எல்லோரும் ஒன்று சேர்ந்து இறைவனுக்கு பொங்கல் வைத்து நல் விருந்துப் படைத்து நலமாக வாழ வேண்டி உள்ளவரும் இல்லாத ஏழையும் ஒன்றாக தேர் இழுத்து பல்லா ண்டாய் மகிழ்ந்தும் பரவசமாய் வேண்டி வந்தும் எல்லோரும் அன்பாய் அழைத்தும் யாருமே பார்க்க முடியாத பொல்லாத சக்தி அவன் பொய்யாக வாழ்கின் றானோ (கவியாழி)

மகிழ்ச்சியான மணவாழ்வுக்கு....

துணையாய் தொடர்ந்து வந்து தோழனாய் நட்பு கொண்டு மனதில் குடிகொள்ளும் மனைவியாய்இருக்க வேண்டும் பெற்றவரை பிள்ளைகளைப் போல் பேதமும் பார்க்காது விருப்பமாய் உற்றாரும் வாழ்த்திச் செல்லும் உற்றவளின் குணமே வேண்டும் பிறி தொன்றும் கேட்காத பிறரைப் பற்றிக் கூறாத அன்புடனேஆசை கொள்ளும் அன்னையாய் இருக்க வேண்டும் ஆசை அன்புக் கென்று அகம் மகிழ பிள்ளையுமே அளவான செல்வமும் சேர்த்து அன்பான குடும்பம் வேண்டும் பணி முடிந்து வரும்போது பணம் மட்டும் கேட்காத குணமுள்ள மனைவி வேண்டும் குடும்பம் மகிழத் துணைவேண்டும் (கவியாழி)

தேனெடுக்கும் அவசரத்தால்.....

நீரி ருக்கும் நிலத்தினிலே நிச்சயமாய் வாழ்ந்து வரும் நிம்மதியாய் வளர்ந்து வந்து நிறம் மாறி பூவாகும் பூப்பூக்கும் முன்னே தேனீ புகுந்து உள்ளே தேனெடுக்க தேன் குடிக்கும்அவசரத்தால் தெரியாமல் பூத்து விடும் குருவிகளும் கொத்தித் தின்ன கொள்கையுடன் படை யெடுக்க கொஞ்ச நேர இடைவெளியில் வண்டுகளே தேன் குடிக்கும் வண்ட துவும்  கொண்டாடி வேலையினை செய்த பின்பு கண்டதுமே பறிக்கத் தூண்டும் கண்ணி மைகள் ஊஞ்சலாடும் வண்ணங்களோ பலநிறத்தில் வயது வந்த பெண்களையும் எண்ணமதை கவ்விச் சென்று எடுத்துடனே சூடச் சொல்லும் பெண்மணியின் பூ வாசம் பொறுமை யின்றி ஆண்களையே போரின்றி உடன்படிக்கை பெண் மனதில் குடியேறும் கண்ணி ரண்டும் ஒப்பந்தம் கண்ணடித்து செய்து கொண்டு எண்ணியதை இணை யிரண்டும் இனிமையாக உறவு கொள்ளும் (கவியாழி) காதலர் தின வாழ்த்துக்கள்...

ரசித்தவர்கள்