தெய்வங்கள்

தெய்வங்கள்

அன்புச் செல்லக் குழந்தைகளே

அன்புச் செல்லக் குழந்தைகளே
அறிவில் சிறந்த முல்லைகளே
பண்பேக் குறையா செல்வங்களே
பாசம் மிகுந்த மொட்டுகளே

நல்லப் பிள்ளை அனைவருமே
நன்குப் பேசி மகிழுங்களே
அன்பு பாசம் அறிவையுமே
அறிந்து பகிர்ந்து சொல்லுங்களே

மாலைப் பொழுதில் விளையாடி
மகிழ்ந்து நட்பாய் ஆடுங்களே
மனதில் உள்ள எண்ணங்களை
மதித்து உணர்ந்து செய்யுங்களே

நல்ல நல்லக் கதைகளையும்
நல்லோர் சொன்ன கருத்துகளும்
நாளும் படித்து வாருங்களே
நாட்டில் சிறந்து வாழுங்களே

அன்னைத் தந்தை சொல்வதிலே
அர்த்தம் உணர்ந்து கொள்ளுங்களே
அறிவைச் சொல்லும் ஆசிரியர்கள்
ஆழ்ந்து  மகிந்து   படியுங்களேன்


(கவியாழி)

Comments

  1. கருத்துள்ள வரிகள் ஐயா... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. குழந்தைகளுக்காக கவி வரிகள் மிக அருமையாக அமைத்துள்ளீர்கள் ஐயா.

    ReplyDelete
  3. கருத்துள்ள கவிதை. பாராட்டுகள்.

    ReplyDelete
  4. செல்லக் குழந்தைகள் அனைவருக்கும் மிகச் சிறந்த அறிவுரைகள்
    பகிர்வுக்குப் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் .த .ம.4

    ReplyDelete

  5. வணக்கம்!

    நல்ல கதைபோல் நவின்ற கவிகண்டேன்!
    சொல்ல இனிக்கும் சுரந்து!

    கவிஞா் கி. பாரதிதாசன்
    தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

    ReplyDelete

Post a Comment

தங்களின் கருத்துக்கள் பயனுள்ளதாய் இருக்கும்...

ரசித்தவர்கள்