தெய்வங்கள்

தெய்வங்கள்

தத்து நடை நடந்துவந்து....

தத்து நடை நடந்து வந்து
தாவித்தாவி தூக்கச் சொல்லும்
திக்கித் திக்கி பேசுகின்ற
தின்ன அடம் செய்யுகின்ற

முத்து முத்துப் பல்லைக் காட்டி
முத்தம் தந்து மடியில் அமர்ந்து
முப்பொழுதும் அருகில் வந்தும்
முத்தமழை விரும்பித் தந்தும்

பட்டுப் போன்ற மேனியுடன்
பாட்டுப்பாடிக் கதைகள் கேட்கும்
பாட்டன் பாட்டி எப்பொழுதும்
பக்கத்திலே இருக்கச் சொல்லும்

பஞ்சுபோன்ற மெத்தை யாக்கி
படுத்துறங்கி நெஞ்சின் மேலே
பகலும் இரவும் எப்பொழுதும்
பக்கத்திலே நெருங்கி வந்து

தொட்டுத் தொட்டுப் பேசிதினம்
தொந்தரவு செய்கின்ற
மொட்டு போன்ற மழலைகளுக்கு
நித்தம் கதை சொல்லுங்களேன்



 (கவியாழி)

Comments

  1. குழல் இனிது யாழ் இனிது என்பர்
    மக்கள் தம் மழலை சொல் கேளாதவர்
    நீண்ட நாட்களுக்குப் பிறகு தங்களின் பதிவு கண்டு மகிழ்ந்தேன் ஐயா
    தொடர்ந்து எழுதுங்கள் ஐயா, காத்திருக்கிறோம்

    ReplyDelete
  2. ஆகா... அழகாக சொல்லி விட்டீர்கள்...

    தொடர்ந்து பகிர்ந்து கொள்ள வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  3. சகோதரருக்கு வணக்கம்
    மழலை மாறாத பிஞ்சு குழந்தையின் இயல்புகளைக் கொஞ்சு தமிழில் கவிதையாக்கி காட்சிப்படுத்திய விதம் அற்புதம். தொடர்க. பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  4. நம் குழந்தைகள் பெரியவர்களாகிவிட்ட நிலையில், இனி, பேரக் குழந்தைகளைக் கொஞ்சவேண்டிய நேரம் வந்துவிட்டது! ஆவன செய்யவும்.

    ReplyDelete
  5. செல்வத்துள் எல்லாச் செல்வம் மழலைச் செல்வம்!

    அருமையான கவிதை!

    த.ம.

    ReplyDelete
  6. பேரனா பேத்தியா! ஆவன செய்யுங்கள்!

    ReplyDelete
  7. மழலைக் கவிதை இனிமை! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  8. அருமையான கவி....

    ReplyDelete
  9. மழலைக்கு கதை சொல்லும் போது நாமும் மழலை ஆகி விடுவோம்.
    அருமையான கவிதை.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  10. "தொட்டுத் தொட்டுப் பேசிதினம்
    தொந்தரவு செய்கின்ற
    மொட்டு போன்ற மழலைகளுக்கு
    நித்தம் கதை சொல்லுங்களேன்" என்ற
    அடிகளை விரும்புகிறேன்.

    ReplyDelete
  11. அற்புதமான கவிதை
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete

Post a Comment

தங்களின் கருத்துக்கள் பயனுள்ளதாய் இருக்கும்...

ரசித்தவர்கள்