Posts

தெய்வங்கள்

தெய்வங்கள்

மனிதம் போற்றி வாழ்வோம்...

மழையுமில்லை பனியு மில்லை மக்கள் மனதில் மகிழ்ச்சி யில்லை உழைப்புக் கேற்ற ஊதிய மில்லை உழவன் மனமோ ரொம்பத் தொல்லை நகர வாழ்க்கை விரும்ப வில்லை நடந்து செல்ல பாதையும் மில்லை அடுத்த வீட்டு நட்பு மில்லை  அன்புகொண்டு பேசவு மில்லை வணிகன் கடைகள் திறப்ப தில்லை வயித்துக் கேற்ற உணவு மில்லை பிழைப்புக்கேற்ற ஊதிய மில்லை பிழைக்க வழியும் தெரிய வில்லை பிள்ளைப் படிப்பை முடிக்கவில்லை பீசு கட்ட கையில் பணமுமில்லை படித்து முடித்தும் வேலையு மில்லை பசங்க வாழ்வும் நிம்மதி யில்லை பிறந்த வாழ்வை முடிக்க வேண்டி பிழைகள் கண்டு மனமும் வெம்பி உலக நடப்பை மனதில் எண்ணி உணர்ந்து வாழ்வோம் மனிதம் போற்றி (கவியாழி)

இன்று இதமாய் இருக்கிறது

இதமான காலை இன்று இன்பமாய் இருக்கத் தோணுது நலமாக மனமும் வளமாய் நல்லதே சொல்ல எண்ணுது காலை வேளையில் காற்றும் கதைகள் பலதைச் சொன்னது கண்கள் இரண்டும் எதையோக் காணவேண்டி மேலே பார்க்குது செடியும் பூச்சியும் செல்லமாய் சேட்டை சிலதைப் பண்ணுது சேவலும் நாய்களும் இன்பமாய் சாலையில் திரிந்து ஓடுது மரங்கள் எல்லாம் இன்றும் மகிழ்வாய் சிரித்து மகிழுது மாலையில் இருப்பது போலவே மனதில் எதையோ தேடுது மழையும் இதையே கண்டு மறுபடி மறுபடி சிரிக்குது மக்களும் மழையைப் பார்த்து மகிழ்ச்சியாய் ஆடத் தூண்டுது (கவியாழி)

புகழோடு மீண்டும் வருவேன்......

எதாச்சும் சொல்ல நினைச்சா எல்லாமே மறந்து போச்சு யாராச்சும் கேட்க நினைச்சா என்னான்னு சொல்லித் தாங்க பேரெல்லாம் ஊரெல்லாம் எனக்குப் புரியாமல் தெரியாமல் ஆச்சு பெரும்பாலும் எல்லோர்க்கும் இதனால் வருத்தமே பெருகிப் போச்சு ஏதோதோ எழுத விரும்பி எந்நாளும் ஆர்வம் இருந்தும் போதாத நேரத்தாலே தொடர்ந்து பொழுதும் எழுத முடியல தீராத தலைவலியே  நிதமும் தீர்க்காமல் தொடர்ந்து நின்று ஆறாத மனக் குறையாய் அன்றாடம் முன்னாள் வருது தீராத மனக் குறையைத் தீர்க்கவே தொடர்ந்து சென்று போராடிச் ஜெயிப்பேன் மீண்டும் புகழோடு மீண்டும் வருவேன் (கவியாழி)

கல்லறை வரையில் துணையே.......

இதயம் அடிக்கடித் துடிக்கும் இமையும் இணைந்தே அடிக்கும் கருவைச் சுகமாய்ச் சுமக்கும் கருவறை சிறையாய் இருக்கும் பிறந்ததன் கதைகளைச் சொல்லி பெரியவர் வரையில் தொடர்ந்து உழைக்கும் மனித வாழ்க்கை உறவுகள் இணைந்தால் சிறக்கும் இளமைக் கனவுகள் பலிக்கும் இணைந்ததும் சுகமாய் இருக்கும் பிறவிப் பலனை அடைந்தே பெரியவராக்கி உண்மையைச் சொல்லும் உறவுகள் தொடந்தே வாழும் உரிமைகள் மகிழ்ந்தே தொடரும் பிரிவைத் வெறுத்தே ஒதுக்கும் பிள்ளைகள் இணைந்தால் மகிழும் கடனே இல்லா வாழ்க்கை கடந்தும் இருந்தால் நன்று கல்லறை வரையில் துணையே கிடைத்தால் வாழ்கை மகிழ்ச்சி (கவியாழி)

மனிதனாக வாழ்க்கை முடியுமே

விலைவாசித் தாறுமாறா ஏறுது விடிந்தாலே கடனெல்லாம் அழைக்குது தரவேண்டிய வட்டியும் சேர்த்ததும்  தலைமேல முடியெல்லாம் கொட்டுது பணக்காரன் வசதியும் பெருகுது பணத்தாலே எல்லாமே முடியுது மருந்தாலே வாழ்கையை ஒட்டியும் மளமளன்னு பணமோ சேருது விலைவாசி உயர்வை எண்ணியே விவசாயி மனசும் எரியுது நிலமெல்லாம் தண்ணீர் குறைச்சலால் நெடுந்துயர்ந்த வீடாய் மாறுது பிழையாக படிக்க மறந்த பிள்ளையின் மனசும் தவிக்குது நெடுநாட்கள் படிப்பை முடித்தும் நிம்மதியாக வேலை மறுக்குது அரசாங்கம் கடமை தவறியே அநியாயம் வளர  தொடங்குது அதனாலே பலபேரின் வாழ்க்கை அடங்காத செயலைத் தூண்டுது பலபேர்கள் மடிந்து சாவதற்கு பணம் ஏனோ தகுதியாகுது மனம்மாறி பகிர்ந்து வாழ்ந்தாலே மனிதனாக வாழ்க்கை முடியுமே (கவியாழி)

இனிப்பான மனிதர்கள்

வெள்ளைச் சோறு மட்டுமே விரும்பி உண்டு வந்தோர் வேதனையாய் இன்று ஏனோ வேண்டாமெனத் தள்ளி வைத்து பச்சைக் காய்கறிகள் தின்று பகல் வருமுன்னே விழித்து பாதம் வலிக்க நடந்தும் பயிற்சிகள் பலவகை செய்தும் உணவைக் கொஞ்சமாய்  குறைத்து உலர் பழங்கள் அதிகம் சேர்த்து உண்டதை எல்லாமே மறந்து உடலை வருத்தியே தினமும் காலை மாலையென பகிர்ந்தே கணக்காய் உணவைத் தின்று வேளை வரும்போது மாத்திரையை வேதனையுடன் தின்று வாழும் இனிப்பை மறந்தும் இனிமையாய் இன்னும் மன உறுதியுடன் சிறப்பாய்  வாழ்ந்து வரும் சொந்தங்களே நட்புகளே வாழ்க (கவியாழி)

அடங்காத முத்தங்கள் ஆயிரம்

ஆயிரம் முத்தம் தந்தும்  அடங்காத ஆசை கொள்வாள்  அடுத்தவர் முன்னே மகிழ்ந்து  அணைத்து மீண்டும் தருவாள்  தீராத அன்புடனே இருப்பாள்  தினமும் ஆவல் கொண்டே  திரும்பத் திரும்ப உணர்வாய்  கரும்புபோலக் கடிப்பாள்  தேக்கிவைத்த ஆசையெல்லாம்  தீர்க்கவே தினமும் கட்டியனைத்தே  திகட்டத் திகட்டத் தருவாள்  தீரும்வரை இணைந்தே மகிழ்வாள்  வெளியில் தெரியாத வெட்கத்துடன்  வீட்டில் புகுந்ததும் கொடுப்பாள்  வெளியூர் சென்றால் ஏங்கியே  வேதனையைத் தீர்ப்பாள் வந்ததும்  கட்டியணைத்து முத்தம் தந்து  கன்னத்தைக் கடித்தும் விடுவாள்  காலையும் மாலையும் தொடர்ந்து  கதைகள் கேட்டும் தருவாள்  நெஞ்சின் மீதேறி நெடுநேரம்  நிம்மதியாய் தூங்கி விடுவாள்  நேரத்தைக் குத்தகை கேட்டு  நீண்ட நேரம் முத்தமிடுவாள்  சத்தமில்லா முத்தங்கள் எத்தனை  தித்திக்குமே என்றென்றும் அதனை  வாடிக்கையாய் கிடைத்தால் தினமும்  வாராது துயரம் அதனால்  அன்பான முத்தங்கள் இழந்த...

ரசித்தவர்கள்