தெய்வங்கள்

தெய்வங்கள்

இனிப்பான மனிதர்கள்

வெள்ளைச் சோறு மட்டுமே
விரும்பி உண்டு வந்தோர்
வேதனையாய் இன்று ஏனோ
வேண்டாமெனத் தள்ளி வைத்து

பச்சைக் காய்கறிகள் தின்று
பகல் வருமுன்னே விழித்து
பாதம் வலிக்க நடந்தும்
பயிற்சிகள் பலவகை செய்தும்

உணவைக் கொஞ்சமாய்  குறைத்து
உலர் பழங்கள் அதிகம் சேர்த்து
உண்டதை எல்லாமே மறந்து
உடலை வருத்தியே தினமும்

காலை மாலையென பகிர்ந்தே
கணக்காய் உணவைத் தின்று
வேளை வரும்போது மாத்திரையை
வேதனையுடன் தின்று வாழும்

இனிப்பை மறந்தும் இனிமையாய்
இன்னும் மன உறுதியுடன்
சிறப்பாய்  வாழ்ந்து வரும்
சொந்தங்களே நட்புகளே வாழ்க


(கவியாழி)

Comments

  1. மருத்துவம் இன்றியமையாததாய் ஆகிப்போனது/அப்படியே பழகியும் போனது/

    ReplyDelete
  2. ரசித்தேன் வாழ்த்துக்கள் சகோதரா !

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க

      Delete
  3. அருமையான கவிதை! நண்பரே!

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க

      Delete
  4. காலை மாலையென பகிர்ந்தே
    கணக்காய் உணவைத் தின்று
    வேளை வரும்போது மாத்திரையை
    வேதனையுடன் தின்று வாழும் // ரசித்தேன் !

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க

      Delete

  5. வணக்கம்!

    இனிய வழிகளுள் இனியது உணவில்
    இனிப்பைக் குறைத்தே இடு!

    கவிஞர் கி. பாரதிதாசன்
    தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க

      Delete
  6. இனிப்பாய்த் தெரிந்ததெல்லாம் இன்று ஆட்கொல்லியாய் தெரிந்ததால் பதறியே ஓடும் மனிதர்கள்!
    த.ம.5.

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க

      Delete
  7. இயற்கை உணவு! சிறந்த உணவு ! அருமையான கவிதைக்கு நன்றி!

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க

      Delete
  8. மருத்துவத்தால் மகத்துவம் சாய்ந்தது.
    ஐயா கவிதைப்போட்டிக்கு அனுப்பிய எனது கவிதையை காண்க.... நன்றி.

    ReplyDelete
  9. எனக்கு அறிவுரையா!

    ReplyDelete
    Replies
    1. அறுபத்து மூன்று சதவிதம்பேர் இந்தியாவில் இருக்கிறார்களே அய்யா

      Delete
  10. அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் விஷமாகி விடுமல்லவா? நாற்பது கடந்தால் நாவடக்கம் வேண்டும் என்பதும் உண்மை அல்லவா

    ReplyDelete

Post a Comment

தங்களின் கருத்துக்கள் பயனுள்ளதாய் இருக்கும்...

ரசித்தவர்கள்