தெய்வங்கள்

தெய்வங்கள்

இன்று இதமாய் இருக்கிறது

இதமான காலை இன்று
இன்பமாய் இருக்கத் தோணுது
நலமாக மனமும் வளமாய்
நல்லதே சொல்ல எண்ணுது

காலை வேளையில் காற்றும்
கதைகள் பலதைச் சொன்னது
கண்கள் இரண்டும் எதையோக்
காணவேண்டி மேலே பார்க்குது

செடியும் பூச்சியும் செல்லமாய்
சேட்டை சிலதைப் பண்ணுது
சேவலும் நாய்களும் இன்பமாய்
சாலையில் திரிந்து ஓடுது

மரங்கள் எல்லாம் இன்றும்
மகிழ்வாய் சிரித்து மகிழுது
மாலையில் இருப்பது போலவே
மனதில் எதையோ தேடுது

மழையும் இதையே கண்டு
மறுபடி மறுபடி சிரிக்குது
மக்களும் மழையைப் பார்த்து
மகிழ்ச்சியாய் ஆடத் தூண்டுது


(கவியாழி)

Comments

  1. மழையும் இதையே கண்டு
    மறுபடி மறுபடி சிரிக்குது
    மகிழ்ச்சிச் சிரிப்பு ..!

    ReplyDelete
    Replies
    1. நீங்க மீண்டும் வந்ததும் நன்றிங்க .தொடர்ந்து வாங்க

      Delete
  2. கவிதை நன்று.

    கவிஞரே இன்று தங்கள் வலைப்பதிவை நன்றியுடன் வலைச்சரத்தில் அறிமுகம் செய்துள்ளேன்.

    http://blogintamil.blogspot.in/2014/09/blog-post_12.html
    நன்றி.

    ReplyDelete
    Replies
    1. நன்றிங்க முனைவரே படித்தேன் மகிழ்ந்தேன்

      Delete
  3. மழைக்கவி அருமை ஐயா, இன்றைய 12.09.2014 வலைச்சர அறிமுகத்திற்க்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. நன்றிங்க .தொடர்ந்து வாங்க

      Delete
  4. இதமாய் இருக்க மனம் பதமாய் இருக்க வேண்டும்!

    ReplyDelete
    Replies
    1. பதமாக்க உங்களால்தான் முடியும்

      Delete
  5. ஆஹா... அருமை ஐயா...
    இதமாய் இருக்கிறது...

    ReplyDelete
    Replies
    1. நன்றிங்க .தொடர்ந்து வாங்க

      Delete
  6. கவிதை அருமை....நண்பரே!

    ReplyDelete
    Replies
    1. நன்றிங்க .தொடர்ந்து வாங்க

      Delete
  7. தலைப்பைப் போல கவிதையும் இதமாகத்தான் இருக்கிறது...

    ReplyDelete
    Replies
    1. நன்றிங்க .தொடர்ந்து வாங்க

      Delete
  8. அன்பு நண்பரே தங்களுக்கு ஒரு விருது வழங்கப்பட்டுள்ளது
    http://www.malartharu.org/2014/09/versatile-blogger-award.html#more

    ReplyDelete
  9. மரங்கள் எல்லாம் இன்றும்
    மகிழ்வாய் சிரித்து மகிழுது...Nanru.....
    Eniya vaalththu.
    Vetha.Langathilakam

    ReplyDelete

Post a Comment

தங்களின் கருத்துக்கள் பயனுள்ளதாய் இருக்கும்...

ரசித்தவர்கள்