அடங்காத முத்தங்கள் ஆயிரம்
ஆயிரம் முத்தம் தந்தும்
அடங்காத ஆசை கொள்வாள்
அடுத்தவர் முன்னே மகிழ்ந்து
அணைத்து மீண்டும் தருவாள்
தீராத அன்புடனே இருப்பாள்
தினமும் ஆவல் கொண்டே
திரும்பத் திரும்ப உணர்வாய்
கரும்புபோலக் கடிப்பாள்
தேக்கிவைத்த ஆசையெல்லாம்
தீர்க்கவே தினமும் கட்டியனைத்தே
திகட்டத் திகட்டத் தருவாள்
தீரும்வரை இணைந்தே மகிழ்வாள்
வெளியில் தெரியாத வெட்கத்துடன்
வீட்டில் புகுந்ததும் கொடுப்பாள்
வெளியூர் சென்றால் ஏங்கியே
வேதனையைத் தீர்ப்பாள் வந்ததும்
கட்டியணைத்து முத்தம் தந்து
கன்னத்தைக் கடித்தும் விடுவாள்
காலையும் மாலையும் தொடர்ந்து
கதைகள் கேட்டும் தருவாள்
நெஞ்சின் மீதேறி நெடுநேரம்
நிம்மதியாய் தூங்கி விடுவாள்
நேரத்தைக் குத்தகை கேட்டு
நீண்ட நேரம் முத்தமிடுவாள்
சத்தமில்லா முத்தங்கள் எத்தனை
தித்திக்குமே என்றென்றும் அதனை
வாடிக்கையாய் கிடைத்தால் தினமும்
வாராது துயரம் அதனால்
அன்பான முத்தங்கள் இழந்தே
அருகில் யாரும் உள்ளாரோ
இனிமை மறந்த முத்தம்
இடுவோர் யாரும் உளரா
(கவியாழி)
வணக்கம்
ReplyDeleteஐயா.
நீண்ட நாட்களுக்கு பின் அழகிய கவிதை தாங்கள் சொல்வது உண்மைதான் சின்ன குழந்தைகளுடன் விளையாடினால் மனதில் உள்ள துன்பங்கள் பறந்து விடும் மிக அருமையாக சொன்னீர்கள் வாழ்த்துக்கள் த.ம 2வது வாக்கு
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வருகைக்கு நன்றிங்க
Deleteஇதுபோல் இனிய...
ReplyDeleteதித்திக்கும் முத்தங்கள்
தினமும் கிடைக்கட்டும்,
முத்தமழை பொழிந்தே
தினம் நனையட்டும்.
வருகைக்கு நன்றிங்க
Deleteஒரு கவிதையில் இத்தனை முத்தங்களா! உலகம் தாங்குமா நண்பரே?
ReplyDeleteபொறாமை வேண்டாம் நண்பரே
Deleteவருகைக்கு நன்றிங்க
ReplyDeleteகவிதை சொக்குதுங்க! பின்ன இப்படி அழகா எழுதினா?!!!1
ReplyDeleteநன்றிங்க அய்யா .தொடர்ந்து எழுத முயற்சிக்கிறேன்
Deleteஅடுத்து கமலஹாச முத்தம் பற்றியும் கவிதைப் போடலாமே ?
ReplyDeleteத ம 5
போட்டாப்போச்சு
Deleteஅருமை ஐயா அருமை
ReplyDeleteநன்றி
தம 6
ReplyDeleteநன்றிங்க
Deleteஇனிப்பான அழுத்தமான முத்தக் கவிதை அருமை
ReplyDeleteபகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்