மனிதம் போற்றி வாழ்வோம்...
மழையுமில்லை பனியு மில்லை
மக்கள் மனதில் மகிழ்ச்சி யில்லை
உழைப்புக் கேற்ற ஊதிய மில்லை
உழவன் மனமோ ரொம்பத் தொல்லை
நகர வாழ்க்கை விரும்ப வில்லை
நடந்து செல்ல பாதையும் மில்லை
அடுத்த வீட்டு நட்பு மில்லை
அன்புகொண்டு பேசவு மில்லை
வணிகன் கடைகள் திறப்ப தில்லை
வயித்துக் கேற்ற உணவு மில்லை
பிழைப்புக்கேற்ற ஊதிய மில்லை
பிழைக்க வழியும் தெரிய வில்லை
பிள்ளைப் படிப்பை முடிக்கவில்லை
பீசு கட்ட கையில் பணமுமில்லை
படித்து முடித்தும் வேலையு மில்லை
பசங்க வாழ்வும் நிம்மதி யில்லை
பிறந்த வாழ்வை முடிக்க வேண்டி
பிழைகள் கண்டு மனமும் வெம்பி
உலக நடப்பை மனதில் எண்ணி
உணர்ந்து வாழ்வோம் மனிதம் போற்றி
(கவியாழி)
உலக நடப்பை மனதில் எண்ணி
ReplyDeleteஉணர்ந்து வாழ்வோம் மனிதம் போற்றி
சிந்தனை செறிவு மிக்க கவிதை..
வணக்கம்
ReplyDeleteஐயா.
அனைவரையும் சிந்திக்கவைக்கும் கவிதை நன்றாக உள்ளது வாழ்த்துக்கள்.
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
சமூகத்தை கண்முன் நிறுத்தும் கவிதை சார், நல்ல நடப்பை எதிர்பார்ப்போம்... கவிதைக்கு வாழ்த்துகள்..
ReplyDeleteஉலக நடப்பை மனதில் எண்ணி
ReplyDeleteஉணர்ந்து வாழ்வோம் மனிதம் போற்றி//
மனிதம் போற்றி வாழ்வோம்.
நடப்பை சொல்லி விட்டீர்கள் கவிதையில் அருமை.
வாழ்த்துக்கள்.
இயற்கையும் பொய்க்க! இயலாமை ஓங்க!
ReplyDeleteசெயற்கையாய் வாழ்வும் சிதைந்து!
மனம் நொந்து வடித்த கவிதை!..
யாவும் உண்மை! அருமை!
வாழ்த்துக்கள் சகோதரரே!
உலக நடப்பை மனதில் எண்ணி
ReplyDeleteஉணர்ந்து வாழ்வோம் மனிதம் போற்றி
மனிதம் போற்றி வாழ்வோம்! இதுதான் இகவும் அவசியம்! அருமை!
இல்லை இல்லை என்றால் எதுவுமில்லைதானே! இருப்பதைக் கொண்டு சுகப்பட வாழ்ந்தால் வாழ்வும் உயரும்தானே! அருமை! வாழ்த்துக்கள்!
ReplyDeleteஉண்மை நிலையை எடுத்து உரைத்த அருமையான கவிதை !
ReplyDeleteவாழ்த்துக்கள் சகோதரா .
மனிதம் போற்றுவோம்....
ReplyDeleteநல்ல சிந்தனை. பாராட்டுகள்.
இயல்போடு நிகழினை அறிந்து மனிதத்தோடு வாழ்தல் நலமென உரைக்கும் நல்ல கவிதை...
ReplyDeleteஉலக நடப்பு எப்படி இருப்பினும்
ReplyDeleteநாமிருப்போம் மனிதம் போற்றி
வழ்த்துக்களுடன்...
அய்யா,
ReplyDeleteஅரிதாரப் பூச்சில்லை!
அடையில்லை!! அணியில்லை!!
வெறுங்காதல் பேச்சில்லை!
விடைகாட்டாப் புதிரில்லை!
இருந்தாலும் ஏதோதோ
செய்கின்ற கவிதைகளை
தருகின்றீர் தொடர்கின்றேன்!
கவியாழி யார்வாழி!!
நன்றி அய்யா!
எல்லார்க்கும் புரிகின்ற இனிமையான வரிகள்!
பாட்டில் அடங்குகின்ற பழகு நடைச் சந்தம்!
முதல் முறையாகத் தங்கள் தளத்திற்கு வருகிறேன்.
தங்களது முந்தைய பதிவுகளையும் பார்ப்பேன்!
இனித் தொடர்வேன்.
நன்றி.
இன்றைய வாழ்வின் அவலம்
ReplyDeleteஅற்புதமாக விழுந்திருக்கிறது
உங்கள் கவிதையில்
"பிள்ளைப் படிப்பை முடிக்கவில்லை
ReplyDeleteபீசு கட்ட கையில் பணமுமில்லை
படித்து முடித்தும் வேலையு மில்லை
பசங்க வாழ்வும் நிம்மதி யில்லை" என
தங்கள் பாவண்ண நடையிலே
நாட்டவர் உண்மை நிலையை
நறுக்காகத் தங்கள் நடையிலே
வெளிப்படுத்தியமைக்கு நன்றி!
அருமை
ReplyDeleteஉண்மை
மனிதம் போற்றி வாழ்வோம்
அரிதாரம் பூசாமல் இயற்கையான நிலையை எடுத்துரைத்தமைக்கு நன்றி.அண்மைக்காலமாக விக்கிபீடியாவில் எழுத ஆரம்பித்துள்ளதால் மறுமொழி இடுவதில் அதிக தாமதம். பொறுத்துக்கொள்க.
ReplyDeleteஅன்புள்ள அய்யா திரு.கவியாழி கண்ணதாசனுக்கு,
ReplyDeleteவணக்கம்.
மனிதம் போற்றி வாழ... இல்லாத மனிதத்தை இருக்க வேண்டிய அருமையான கவிதை படைத்தீர்கள். வாழ்த்துகள்.
எனது ‘வலைப்பூ’ பக்கம் வருகை புரிந்து தாங்கள் கருத்திட அன்புடன் அழைக்கின்றேன்.
நன்றி.
-மாறாத அன்புடன்,
மணவை ஜேம்ஸ்.
manavaijamestamilpandit.blogspot.in
''..உலக நடப்பை மனதில் எண்ணி
ReplyDeleteஉணர்ந்து வாழ்வோம் மனிதம் போற்றி..'''
nanru.. sinthanai.....nanru
Vetha.Langthilakam