Posts

தெய்வங்கள்

தெய்வங்கள்

தாய்மை

Image
தாலி கட்டியதும் தவம் ஆரம்பம் தனியறையில் நாளும்   ஏற்படும் பூகம்பம் தாகமென கடக்கும் முப்பதுநாளும்_ ஆசை தாகமது மட்டும் தணியும் முடியும்! கருவுற்றதும் கனவுகள் ஆரம்பம் அதை கருத்தாய் கவனித்து சினம் கொள்ளாமல் சிறிதளவும் அசைக்காமல் உருவேற்ற- உள்ளத்தில் சீரான முகமாக்கி ரணத்தையே உணவாக்குவாள்! அன்பையும் நற்பன்பையும் நாளும் சொல்லி அன்னையின் தவிப்பை அன்றே சொல்லிடுவாள் வயிட்றை தடவி வழியெல்லாம் பார்த்த- அறிவை பயிற்றுடுவாள் மகிழ்வாள் மனமெல்லாம் பூரிப்பாள்! பிறக்குமுன்னே பிள்ளை   செய்யும் சேட்டையை பிறரிடம் சொல்வாள் நாளும் சிரிப்பாள் பித்தாய் இருப்பாள் பிறப்பை கேட்பாள்- பூவே இத்தனை நாளாய் இதற்குத்தானே என்பாள்!

நேசம் வேண்டும்

Image
நேசம் வேண்டும் நேர்மையாக வேண்டும் நெஞ்சுருகி  நாடவேண்டும்  நீ நியாயமாக இருக்க வேண்டும் கொஞ்சவும் வேண்டும் குறைகளை  அறிய வேண்டும் குற்றமெனில் கூற வேண்டும் கூடவே நீ  துணையாக வேண்டும் சுகமாக  வேண்டும் சுற்றத்தில் நீ வேண்டும் கற்றுதர நல்லவை வேண்டும் கடும் சொல்லால் திட்ட வேண்டும் நற்றமிழ் வேண்டும் நாளும் துணை வேண்டும் நல்லோர்கள் ஆசி வேண்டும் நாள்தோறும்  அது கிடைக்க வேண்டும் எப்போதும் வேண்டும் என்னுடனே நட்பு வேண்டும் எல்லாமுமாய் இருக்க வேண்டும் எனக்கு,உன்னுயிரில் இணைய வேண்டும்!

படிக்காத பாவி

Image
விழியே ரணமானது விடியலுக்காக! விதைத்தவன் அழிவானா ? வினையன் மடிவானா? துணையின்றி  தவிக்கிறேன்! தூக்கமின்றி  அழுகிறேன்!! துன்ப துரோகி துயில்வானா? மரிப்பானா? தவமிருந்த  பிள்ளை தாங்கிடும் துயரம் கணக்கில்லாத கவலைகள்,  கண்ணுரங்க முடியலையே! என்னை பினையாக்கி என்னுயிரை பிணமாக்கி விண்ணுயர எடுத்துக்கொள் என்னவளை விட்டுவிடு பணம் வேணுமா? பழிகாரனே பாவியே! சினத்துடந்தான் சொல்கிறேன்! சீக்கிரம்விடைகொடு! நீ செய்யும் பாவம் நின் சந்ததி அழியும் நிம்மதி கெடும்! அழிவாய்!! நேர்மையற்ற வயோதிகனே !!!

நலம் கண்ட நட்பு !

Image
இன்று தொடங்கிய இந்த நட்பு என்றுமே சிறக்க இருப்பேன் . தொன்று தமிழ் முழங்க தொண்டனாக நானும் வருவேன் உன்னோடு... கண்டுவிட்டேன் கவித்தென்றலை உண்டு விட்டேன் உன் கவி ரசத்தை... மீண்டும் வருவேன் மீதமும் பெறுவேன் ! ஓங்கு தமிழ் வளர்க்க ஒவ்வொரு நாளும் தொடர்வேன் ! உன்னோடு...

ரசித்தவர்கள்