படிக்காத பாவி

விழியே ரணமானது
விடியலுக்காக!
விதைத்தவன் அழிவானா ?
வினையன் மடிவானா?
துணையின்றி தவிக்கிறேன்!
தூக்கமின்றி அழுகிறேன்!!
துன்ப துரோகி
துயில்வானா? மரிப்பானா?
தவமிருந்த பிள்ளை
தாங்கிடும் துயரம்
கணக்கில்லாத கவலைகள்,
கண்ணுரங்க முடியலையே!
என்னை பினையாக்கி
என்னுயிரை பிணமாக்கி
விண்ணுயர எடுத்துக்கொள்
என்னவளை விட்டுவிடு
பணம் வேணுமா?
பழிகாரனே பாவியே!
சினத்துடந்தான் சொல்கிறேன்!
சீக்கிரம்விடைகொடு!
நீ செய்யும் பாவம்
நின் சந்ததி அழியும்
நிம்மதி கெடும்! அழிவாய்!!
நேர்மையற்ற வயோதிகனே !!!
Comments
Post a Comment
தங்களின் கருத்துக்கள் பயனுள்ளதாய் இருக்கும்...