நேசம் வேண்டும்

நேசம் வேண்டும்
நேர்மையாக வேண்டும்
நெஞ்சுருகி நாடவேண்டும்
நீ நியாயமாக இருக்க வேண்டும்
கொஞ்சவும் வேண்டும்
குறைகளை அறிய வேண்டும்
குற்றமெனில் கூற வேண்டும்
கூடவே நீ துணையாக வேண்டும்
சுகமாக வேண்டும்
சுற்றத்தில் நீ வேண்டும்
கற்றுதர நல்லவை வேண்டும்
கடும் சொல்லால் திட்ட வேண்டும்
நற்றமிழ் வேண்டும்
நாளும் துணை வேண்டும்
நல்லோர்கள் ஆசி வேண்டும்
நாள்தோறும் அது கிடைக்க வேண்டும்
எப்போதும் வேண்டும்
என்னுடனே நட்பு வேண்டும்
எல்லாமுமாய் இருக்க வேண்டும்
எனக்கு,உன்னுயிரில் இணைய வேண்டும்!
அருமை.
ReplyDeleteநன்றி.