Friday, 26 October 2012

இளமை இருப்பது சிலகாலம்


 

இளமை இருப்பது சிலகாலம்
எளிதில் வசப்படும் வரும்காலம்
கனவு கண்டிடு நிகழ்காலம்- கனிந்திடும்
வெற்றி  உன்கையில் எதிர்காலம்

வெற்றியின்  நிழலை தீண்டி விளையாடு
வேகமாய் வந்திடும் உன் பின்னாடி
ஒற்றுமை உள்ளுள் நினைத்து போற்றி-உண்மையாய்
ஒருநாளும் மறவாமல் உழைத்திடு உயர்ந்திடு

சொல்லுவர் பலர் சொன்னதை மறந்து
வெல்லுவ தேன்றே வேதமாய் எண்ணி
துள்ளி விளையாடு துவளாமல் ஓடிடு-முயன்று
அள்ளி கரை சேர்ப்பாய் அறிவோடு

பட்டங்கள் தேவை யில்லை படித்த
சட்டங்கள்  துணைகொண்டு வெல்ல
கட்டங்கள்  கடந்து  கவலையும் மறந்து-உயரத்தை
எட்டிவிடு எளிதில் வெற்றியை தொட்டுவிடுநினைவிழந்து நிம்மதி கெடும்


ஆரோக்கியம் அவசிய மில்லையென
அவர்களுக்கு தெரியவில்லை  பின்
அமைதி கெட்டு அழிவுப் பாதை ஆவது- ஆசையால்
ஆத்திரம்  கொண்டு  ஆளையும் கொல்வது

சாத்திரம் தேடார் சரித்திரம் அறியார்

போக்கிட மின்றி  பெரும்பினி சேர்ந்து
மக்களை கொல்லும் மடைமை யாகி  -பணம்
பெரும் ஆசை தரும்பின் தவறு செய்யும்

குடும்பம் கூடி பேச மறந்து குறுகி

நெடும்பகை தேடி நேசமற்று  மாறும்
நினைவிழந்து  நிம்மதி கெடும்-வாழ்க்கை
நிச்சயமற்ற தன்மையாகும் நிலைமை மாறும்

தரித்திரம் சேரும்  தயவு கெடும்

தன்னுள் சிந்திக்கா தன்மை யாகும்
பிரித்திட மனதில்  தினம் பேசும்-குழப்பமாய்
பிள்ளை உற்றார் நேசம் மறையும்

பெரியவர் பெண்டிர் பிள்ளை மறந்து

உரியதை நாடி உள்ளம் போகும்
பேராசையால் பெரும்பிணியும் சேரும்-மனித
பிழைப்பென எண்ணி பித்தாய் மாறும்

உழைக்க மறந்து உண்ண தோன்றும்

உயிரை பிடுங்கி சொத்தும் சேர்க்கும்
மலைக்க வைத்து மனதை உருக்கி-இறுதியில்
மாமிசமாக்கி உள்மனமே பிணமாகும்

Thursday, 25 October 2012

மழைக்காலம்

மழைப்பூச்சி

மழை  வரும்  
திசையை
மகிழ்வுடனே  
சொல்லும்
மடியும்முன்னே!
மறுபடியும் காண
மழைக்காலம்  தான்
காண வேண்டும்!!
துணைக்காலமும்
குறைந்து ஓடி
இளைத்துளிரில்
மறைந்துகொள்ளும்
உன்னைப்போல்
என்னுள் தங்கி விடும்!!!
 தட்டான் பூச்சி
ஓடி  ஓடி 
களைத்தாலும் 
உடனடியே  சிக்காது
 ஒளிந்திருந்து 
பார்த்தாலும்
உவப்புடனே  
பறந்துவிடும்
தேடிப்பிடிததும்
துவண்டுவிடும்
உன்னைப்போல!!! 
 நீர்த்தேரை

குதித்து  வரும்
கொண்டாடி  மகிழும்
பிடிக்கப்போனால்
பாய்ந்து  ஓடும்
கடிக்காது
கண்ணால்  பயம்
காட்டும் 
உன் ,
 கண்ணைப்போல!!!

Wednesday, 24 October 2012

திருவிழா தொடங்கியாச்சு


 


திருவிழா தொடங்கியாச்சு
தெருவெங்கும் கூட்டமாச்சு
உருமாறி  மனசெல்லாம்-அன்பான
 உண்மையாக  மாறியாச்சு

நவராத்திரி தொடங்கியதும்
நண்பர் இல்லம் பார்த்தாச்சி

நலம் கேட்டு சிரித்து-நட்பாக
நாளெல்லாம் மகிழ்ச்சியாச்சி

ஆயிரம் கஷ்டமானாலும்
அடுத்த மாசம் தீபாவளி
அடுக்கடுக்காய்  செலவுகள்-கடனும்
அருகில்வர முடிவாச்சி

சின்னவங்க பெரியவங்க
செலவு செய்ய உள்ளவங்க
சேர்ந்து பேசி முடிவாச்சி-சிக்கனமாய்
சொந்த பட்டியல் தேர்வாச்சி

வீட்டு  தலைவருக்கு
விலைவாசி கவலையாச்சி
வேண்டிய செலவு  விபரம்-மனதில்
வேகமாய் நாடி துடிச்சாச்சிவாழ்வது ஒருமுறை வாழ்ந்துவிடுவாழ்வது ஒருமுறை வாழ்ந்துவிடு
வார்த்தைகள் பலவிதம் மறந்துவிடு
தோல்விக்கு பயமில்லை துணிந்து விடு-மீண்டும்
துயரத்தை மறந்து அவனுடன் இணைந்துவிடு

நாட்களை கடத்தி நமக்கென்ன பயன்
நாமிங்கு இணைவதால் என்ன பிழை
பூக்களை போல்  நீ வாடுவதை- புரிந்தும்
ஏக்கமாய் உள்ளதே எழுச்சியும் கொள்ளுதே

தூங்கி எழுந்ததும் துணை தேடிடும்
ஏங்கி  இழந்ததை நாடிடும் இன்பம்
தாங்கித்தான் இருப்பேனே  துணையாக-என்றும்
பாங்கி உன்னை பார்த்திடுவேன்  நலமாக

நிலவுக்குள்  நாம் நடந்தால் நிம்மதி
நேரம் செல்லும் முன்னே சொல்லடி
ஈரம் இருக்கும் வரை உன்மடி -இளமை
தூரம் அதிகமில்லை  துணிந்து நில்லடி

நிலவு தேய்ந்தாலும் மீண்டும் எழுந்திடும்
உறவு மறந்தாலும் உரிமை கிடைத்திடும்
கனவு  மீண்டும் உன்னை துரத்தி- இறுதி
காலம் முடியுமுன் ஆசையை  நிறுத்தி

உள்ளதை சொன்னால் உணந்திட மாட்டார்
சொல்லென சொல்லி  சிதைத்துடுவார்
நல்லதை சொல்லி அழைக்கின்றேன் -நட்பின்றி
இல்லறமாக கிடைக்க  நான் ஏங்குகிறேன்