நினைவிழந்து நிம்மதி கெடும்
ஆரோக்கியம் அவசிய மில்லையென
அவர்களுக்கு தெரியவில்லை பின்
அமைதி கெட்டு அழிவுப் பாதை ஆவது- ஆசையால்
ஆத்திரம் கொண்டு ஆளையும் கொல்வது
சாத்திரம் தேடார் சரித்திரம் அறியார்
போக்கிட மின்றி பெரும்பினி சேர்ந்து
மக்களை கொல்லும் மடைமை யாகி -பணம்
பெரும் ஆசை தரும்பின் தவறு செய்யும்
குடும்பம் கூடி பேச மறந்து குறுகி
நெடும்பகை தேடி நேசமற்று மாறும்
நினைவிழந்து நிம்மதி கெடும்-வாழ்க்கை
நிச்சயமற்ற தன்மையாகும் நிலைமை மாறும்
தரித்திரம் சேரும் தயவு கெடும்
தன்னுள் சிந்திக்கா தன்மை யாகும்
பிரித்திட மனதில் தினம் பேசும்-குழப்பமாய்பிள்ளை உற்றார் நேசம் மறையும்
பெரியவர் பெண்டிர் பிள்ளை மறந்து
உரியதை நாடி உள்ளம் போகும்
பேராசையால் பெரும்பிணியும் சேரும்-மனித
பிழைப்பென எண்ணி பித்தாய் மாறும்
உழைக்க மறந்து உண்ண தோன்றும்
உயிரை பிடுங்கி சொத்தும் சேர்க்கும்
மலைக்க வைத்து மனதை உருக்கி-இறுதியில்
மாமிசமாக்கி உள்மனமே பிணமாகும்
anaiththuk kavidhagalum arumai. ezhuthup pani thodara vazhthukal .
ReplyDeleteநன்றி ,தொடர்ந்து படியுங்கள்
ReplyDeleteமனிதம்மின்றி இருக்க வேண்டாம்
ReplyDelete