வாழ்வது ஒருமுறை வாழ்ந்துவிடு
வாழ்வது ஒருமுறை வாழ்ந்துவிடு
வார்த்தைகள் பலவிதம் மறந்துவிடு
தோல்விக்கு பயமில்லை துணிந்து விடு-மீண்டும்
துயரத்தை மறந்து அவனுடன் இணைந்துவிடு
நாட்களை கடத்தி நமக்கென்ன பயன்
நாமிங்கு இணைவதால் என்ன பிழை
பூக்களை போல் நீ வாடுவதை- புரிந்தும்
ஏக்கமாய் உள்ளதே எழுச்சியும் கொள்ளுதே
தூங்கி எழுந்ததும் துணை தேடிடும்
ஏங்கி இழந்ததை நாடிடும் இன்பம்
தாங்கித்தான் இருப்பேனே துணையாக-என்றும்
பாங்கி உன்னை பார்த்திடுவேன் நலமாக
நிலவுக்குள் நாம் நடந்தால் நிம்மதி
நேரம் செல்லும் முன்னே சொல்லடி
ஈரம் இருக்கும் வரை உன்மடி -இளமை
தூரம் அதிகமில்லை துணிந்து நில்லடி
நிலவு தேய்ந்தாலும் மீண்டும் எழுந்திடும்
உறவு மறந்தாலும் உரிமை கிடைத்திடும்
கனவு மீண்டும் உன்னை துரத்தி- இறுதி
காலம் முடியுமுன் ஆசையை நிறுத்தி
உள்ளதை சொன்னால் உணந்திட மாட்டார்
சொல்லென சொல்லி சிதைத்துடுவார்
நல்லதை சொல்லி அழைக்கின்றேன் -நட்பின்றி
இல்லறமாக கிடைக்க நான் ஏங்குகிறேன்
தன்னம்பிக்கை வரிகளை இளைய சமுதாயத்திற்காகவும் எழுதுங்கள்.
ReplyDeleteநன்றி எழுதுகிறேன்
Deleteமனம் தொட்ட அருமையான
ReplyDeleteஅர்த்த புஷ்டியான கவிதை
தொடர வாழ்த்துக்கள்
தங்களின் வாழ்த்து எனக்கு ஊக்கத்தை கொடுக்கும் நன்றி
Deleteவாக்களித்தமைக்கு நன்றி நண்பரே
ReplyDeleteதங்களின் கருத்துக்கு நன்றி ஐயா
ReplyDeleteகவி அருமை
ReplyDeleteதொடருங்கள் !!
எளிமையும் இனிமையும் இணைந்த கவிதை.
ReplyDeleteஆம், நிகழ காலத்திர்கேற்றவாறு எளிமையாக எழுதுவது எனது பாணி.நன்றின் நண்பரே தங்களின் வருகைக்கும் கருத்துக்கும்.
Deleteசோர்ந்தவர் மனதில் நம்பிக்கையூட்டும் வரிகள்.இழப்பு வலிகளைத் தந்தாலும் இழக்காமல் நம்மை நாம் !
ReplyDeleteநன்றி ஹேமா,நம்பிக்கையே வாழ்க்கை நம்மை நாமே உணர வேண்டும் நீங்கள் படித்து கருத்து கூறியமைக்கு நன்றி,
ReplyDeleteபசுமையான முகப்பு கண்ணிற்குக் குளுர்ச்சியாக
ReplyDeleteகவிதைகள் மனதிற்குக் குளுமையாகக்
கவர்கிறது . வாழ்த்துக்கள் !
நன்றிங்க அடிக்கடி வாங்க அனைத்தையும் படித்து பதில் தாங்க
Deleteநன்,வந்ததுக்கும் கருத்து தந்ததுகும்