Posts

தெய்வங்கள்

தெய்வங்கள்

தீண்டத் தகாத மனிதன் யார்

பிணத்தை தின்பவனா இல்லை பெண்மையை அறியாத மனிதனா தினத்தை யறியாத பிறவியா தீண்டத் தகாத மனிதனா உழைப்பே இல்லாமல் ஒதுங்கியே உழைப்பவன் பணத்தை சுரண்டி பகட்டு வாழ்க்கை வாழ்பவனும் பாவத் தொழில் செய்யுபவனும் அடுத்தவன் பிழைப்பை கெடுத்து ஆயுளும் பணம் சேர்க்கும் அற்பப் புத்திக்காரன் அறிந்தே அன்றாடம் காய்ச்சியிடம் சுரண்டுபவன் பதுக்கலை பலவாறு செய்யும் தலுக்கு மேனியை வைத்து தகாத தொழில் செய்யும் இழுக்குப் பிழைப்பை செய்பவன் பிச்சைக் காரனிடமும் பிடுங்கும் எச்சில் பொறுக்கி கயவன் எந்த நிலையிலும் சாதி(தீ)யை எங்கும் சாதியை வளர்ப்பவன் பொய்யே பேசிப் பிறரையும் நம்ப வைக்கும் பூசாரி பாவம் தீர்க்க வருவோரிடம் பணம் கறக்கும் பொய்யாளன் வாழ்கையே வெற்றி டமாய் வாழ முடியாதோ ரிடமும் குழப்பிக் கூலி கேட்கும் கொடியோன் கொள்கை உடையோன் இவ்வாறான இழிநிலை கொண்டவனே அவ்வறுப்பேசி அடுத்தவனை பழிப்பான் அவனைக் கண்டு அஞ்சாமல் அவ்விடமே அடையாளம் காண்பீர்

கொஞ்சிக்கிறேன் நில்லு பொண்ணே

ரவிக்கைத் துணி யுடுத்தி ரத்தக் கலர்ப் பொட்டிட்டு உத்தரவு இல்லாமலே மனசில் உள் நுழைந்த பைங்கிளியே அஞ்சுமுழ மல்லிகைப் பூ ஆடுகிற காது சிமிக்கி பஞ்சுபோல உன்சிரிப்பால் பாடாய் என்னைப் படுத்துறியே திட்டம் போட்ட கெட்டிகாரி திரும்பிப் பார்க்க வைக்கிறியே பட்டம் போட்டு பரிசம்போட பக்குவமாய் நானும் வாறேன் இரட்டை சடை போட்டவளே ராத்திரிய கேடுத்தப் புள்ள கெட்டிக்காரி உன் குறும்பு கட்டி யள்ள தோணுதடி மஞ்சக் கயிறும் தாலியும் மாமன் உனக்கு வாங்கியாறேன் கொஞ்ச நேரம் நின்னுபேசேன் குறையிருந்தா சொல்லிப்போடேன் பஞ்சு மெத்தை தைச்சிருக்கேன் பட்டுத்துணியும் வாங்கிருக்கேன் மஞ்சகொடித் தாலிப் போட்டு கொஞ்சிக்கிறேன் நில்லு பொண்ணே பரிசம் போட நானுவந்தா பதிலைச் சொல்லி அனுப்பாம பாசக்கார மாமன் என்னை-விரட்டி பரிதவிக்க என்னை விட்டுடாதே தொடரும்.....

பொறாமை என்பதே வேண்டாமே

அவனா இப்படி மாறினான் அதையும் எப்படி நம்பினான் குணமே போற்றும் நல்லவன்-குறுகிக் குறைத்தப் பண்பே பொறாமையா ஆண்டுகள் பலநாள் பழகியதை அன்பாய் இருந்து மகிழ்ந்ததை தாண்டிய எல்லை நட்புறவை-எண்ணம் தவறாய் நினைப்பது இதுவன்றோ கொடுத்தப் பணத்தைக் கேட்டவரும் கொள்கை மாறிப் போனவரும் தடித்த வார்த்தைப் பேசியதால்-உடனே தானே வந்தது பொறாமையே அண்ணன் தம்பி உறவுகளும் அக்காள்த் தங்கைப் பிரிவதற்கும் எண்ணம் அதையே மாற்றியே-உறவில் ஏற்றத் தாழ்வை வளர்திடுமே தாத்தாப் பாட்டி உறவுகளை தள்ளி வைக்கும் நிலைமைக்கும் உள்ளக் காரணம் இதுவாகும்-அன்பை எள்ளி நகைக்கும் நிலையாகும் பணியில் சிறந்தோர் பரிதவிக்க பாடாய் படுத்தும் இச்செயலால் தெள்ளத்தெளிவாய் கெடுத்திடுவர்-பின்பு தூய்மை மனதையும் நசித்திடுவர் எளிதில் யாரையும் வசப்படுத்தும் எல்லா வயதினர் துணையாகும் பொல்லா நிலைக்குத் தள்ளிவிடும்-வியாதி பொறாமை என்பதே வேண்டாமே

அற்பனாய் தெரியும் அவரே சிவனார்

அழுக்குத் துணியும் பினுக்கு மணதர் அலையில்லா மனமும் ஆனந்த சிரிப்பர் இழுக்கு சொல்லை எதிர்க்க மாட்டர் எல்லா நாளும் மகிழ்ச்சி உள்ளர் பொற்சுவை அறியார்ப் புலனை மதியார் நற்சுவை நாவில் நாளுமே தெரியார் அற்பனாய் தெரியும் அவரே சிவனார் அந்நிலை நமக்கு அறிந்திட முடியார் பணம் பொருள் இடம் வேண்டார் பகட்டு யோக வாகனம் வேண்டார் குணம் தெரி குடிமை வேண்டார் உணவு தினம் உண்ண வேண்டார் சிரிப்பார் சினங்கொண்டு அடிபார் துடிப்பார் தொல்லையென நடிப்பார் அழமாட்டார் அமுதை தொடமாட்டார் ஆனாலும் நோயின்றி படுக்க மாட்டார் எக்கணம் தவமே செய்பவர் ஞானி என்பதை உணர்ந்த மனிதனே யோகி எங்கும் நிறைந்த எல்லோரின் தோணி என்பவன் சிவனே என்பதை யுணர்நீ சிந்தனை செய்வதை சொல்லத் தெரியா நிந்தனை எந்த நேரமும் மிருந்து பித்தனே என்றும் பைத்திய மென்றும் சித்தனை நீவிர் சொல்லல் முறையா

கத்திரி வெய்யிலை வெல்லுவோம்

ஆண்டில் சிலநாள் இதுபோல ஆருடம் பலநாள் சொல்லிவரும் தாண்டவ மாடும் வெய்யிலில்-சூரியன் தகதக வெனவே எரிந்திடுமாம் மரமும் செடியும் காய்வதற்கும் மாடுகள் ஆடுகள் மடிவதற்கும் தினமும் சிலபேர் மடிவதற்கும்-கதிரவன் தீக் கதிரை வீசுவதேன் மக்கள் துயரில் வாழ்வதற்கும் மலையை நோக்கிச் செல்வதற்கும் அக்கம் பக்கம் எல்லோரும்-சூடாய் அலைந்தே திரிய வைப்பதுமேன் சின்னஞ் சிறுவர் பெரியோரை சீண்டும் கொடுமைக் காரணத்தால் எண்ணம் யாவும் சுட்டெரிக்கும்-உடலில் எல்லா நோயும் சேர்ந்திடுமே வெய்யிலில் நாளும் அலைவதற்கு வேறுவழியை தெரிந்தெடுத்து நாம் வீணாய் சுற்றி வருவதையே-கொஞ்சம் வேதனையோடு நிறுத்தி வைப்போம் குளுர்சியான உணவுகளும் நன்றே குளிர்மைப் பானைத் தண்ணீரும் மகிழ்ச்சியான காய்கனிகள்-பச்சை மனதில் தருமே உற்சாகம் இந்த வேதனை எனக்குமே இன்றும் இங்கே உள்ளதால் நொந்த நிலையும் இதுவாகும்-உங்கள் நோயை நீவிர்த் தடுப்பீரே

ரசித்தவர்கள்