பொறாமை என்பதே வேண்டாமே
அவனா இப்படி மாறினான்
அதையும் எப்படி நம்பினான்
குணமே போற்றும் நல்லவன்-குறுகிக்
குறைத்தப் பண்பே பொறாமையா
ஆண்டுகள் பலநாள் பழகியதை
அன்பாய் இருந்து மகிழ்ந்ததை
தாண்டிய எல்லை நட்புறவை-எண்ணம்
தவறாய் நினைப்பது இதுவன்றோ
கொடுத்தப் பணத்தைக் கேட்டவரும்
கொள்கை மாறிப் போனவரும்
தடித்த வார்த்தைப் பேசியதால்-உடனே
தானே வந்தது பொறாமையே
அண்ணன் தம்பி உறவுகளும்
அக்காள்த் தங்கைப் பிரிவதற்கும்
எண்ணம் அதையே மாற்றியே-உறவில்
ஏற்றத் தாழ்வை வளர்திடுமே
தாத்தாப் பாட்டி உறவுகளை
தள்ளி வைக்கும் நிலைமைக்கும்
உள்ளக் காரணம் இதுவாகும்-அன்பை
எள்ளி நகைக்கும் நிலையாகும்
பணியில் சிறந்தோர் பரிதவிக்க
பாடாய் படுத்தும் இச்செயலால்
தெள்ளத்தெளிவாய் கெடுத்திடுவர்-பின்பு
தூய்மை மனதையும் நசித்திடுவர்
எளிதில் யாரையும் வசப்படுத்தும்
எல்லா வயதினர் துணையாகும்
பொல்லா நிலைக்குத் தள்ளிவிடும்-வியாதி
பொறாமை என்பதே வேண்டாமே
அதையும் எப்படி நம்பினான்
குணமே போற்றும் நல்லவன்-குறுகிக்
குறைத்தப் பண்பே பொறாமையா
ஆண்டுகள் பலநாள் பழகியதை
அன்பாய் இருந்து மகிழ்ந்ததை
தாண்டிய எல்லை நட்புறவை-எண்ணம்
தவறாய் நினைப்பது இதுவன்றோ
கொடுத்தப் பணத்தைக் கேட்டவரும்
கொள்கை மாறிப் போனவரும்
தடித்த வார்த்தைப் பேசியதால்-உடனே
தானே வந்தது பொறாமையே
அண்ணன் தம்பி உறவுகளும்
அக்காள்த் தங்கைப் பிரிவதற்கும்
எண்ணம் அதையே மாற்றியே-உறவில்
ஏற்றத் தாழ்வை வளர்திடுமே
தாத்தாப் பாட்டி உறவுகளை
தள்ளி வைக்கும் நிலைமைக்கும்
உள்ளக் காரணம் இதுவாகும்-அன்பை
எள்ளி நகைக்கும் நிலையாகும்
பணியில் சிறந்தோர் பரிதவிக்க
பாடாய் படுத்தும் இச்செயலால்
தெள்ளத்தெளிவாய் கெடுத்திடுவர்-பின்பு
தூய்மை மனதையும் நசித்திடுவர்
எளிதில் யாரையும் வசப்படுத்தும்
எல்லா வயதினர் துணையாகும்
பொல்லா நிலைக்குத் தள்ளிவிடும்-வியாதி
பொறாமை என்பதே வேண்டாமே
பொல்லா நிலைக்குத் தள்ளிவிடும்-வியாதி
ReplyDeleteபொறாமை என்பதே வேண்டாமே
பொறுமையே வேண்டும் ..!
பொறுமையும் நிதானமும் இருந்தால் பொறாமையே வராது.
Deleteஅருமை... வாழ்த்துக்கள்...
ReplyDeleteமிக மிக அருமை இப்படி எனக்கு எழுத வராதது பொறாமையாகத்தான் இருக்கிறது என்ன செய்ய் வாழ்த்துக்கள்
ReplyDeleteஉங்களைப் பார்த்துதான் நானும் எழுத கற்றுகொண்டேன் உங்களுக்கேவா?
Deleteதஂமஂ3
ReplyDeleteபொறாமை கூடாது சரி. ஆனால் தத்தா பாட்டியை தள்ளி வைப்பதெல்லாம் பொறாமையிலா? அவர்கள் சுமை என்பதால் இருக்கக் கூடும்.
ReplyDeleteதாத்தாப் பாட்டியிடம் தான் அன்பும் செல்லமும் இருக்கும் அதனால் பெறப் பிள்ளைகள் அதிகமாக ஓட்டி உறவாடுவார்கள் இதனால் பெற்றோருக்குமே ஏன் மட்டற்ற பிள்ளைகளுக்கும் பொறாமை ஏற்படுவது இயல்புதானே
DeleteThanks for sharing such a wonderful thing.
ReplyDeleteThanks for your response about my articles
Deleteபொறாமை அந்த 'றா' வை 'று' ஆக்கினால் பெறலாமே மேன்மை...
ReplyDeleteதினம்தினம் விதவிதமான சிந்தனைகளுடன் வருகிறீர்கள் சகோ!
அருமை! வாழ்த்துக்கள்!
த ம 5
பொறுமை இருந்தாலும் பொறாமை இல்லாத மனிதர் உண்டோ?
Deleteபொறாமை வேண்டாம்! பொறுமை வேண்டும்!
ReplyDeleteநீங்க சொன்னா சரியாத்தான் இருக்கும் அய்யா
Deleteபொறாமை...ஒரு நோய்!!
ReplyDeleteஅழகாகச் சொல்லி இருக்கிறீர்கள் கவியாழி ஐயா.
உண்மைதான் அருணா .இது ஒரு மன நோய் என்பதே சரி
Deleteபொறாமை வந்து விட்டால் பகையும் கூட வருகிறது...
ReplyDeleteஆரம்பமே இந்த பொறாமையால்தான் என்பது உண்மையே
Deleteபொல்லா நிலைக்கு தள்ளிவிடும் பொறாமை நோய் வேண்டாமே. .
ReplyDeleteவேண்டவே வேண்டாம் இந்த பொறாமை நோய்
Deleteபொறாமை என்பதே வேண்டாமே//
ReplyDeleteபொறாமை பல கெட்ட குணங்களை துணைக்கு அழைத்து வரும் அதனால் நீங்கள் சொல்வது போல் பொறமை வேண்டாம்.
சரியா சொன்னீங்க மட்டற்ற கேட்ட குணங்களையும் துணைக்கழைக்கும் பொறாமை வேண்டாவே வேண்டாம்
Deleteபோட்டியிருக்கலாம் பொறாமை கூடாது என்பார்கள்! அழகாய் கவிதையில் பகிர்ந்தமைக்கு நன்றி!
ReplyDeleteவந்தமைக்கும் கருத்து சொன்னமைக்கும் நன்றி
Deleteஎன்ன ஒரு கருத்துமிக்க கவிதை..அருமை!
ReplyDeleteநன்றிங்க கிரேஸ்.தொடர்ந்து வாங்க
Deleteமனதில் தூய்மையான அன்பு இருந்தால் பொறாமைக்கு இடம் ஏது இல்லையா?
ReplyDeleteஅன்பு மட்டுமே எல்லா தீய செயல்களையும் கடந்துபோகும்.
Deleteபொறாமையின் விளைவுகளை அழகாய் எடுத்துக் கூறியுள்ளீர்கள் ஐயா.
ReplyDeleteஉண்மைதான்.நீங்கள் வந்தமைக்கு நன்றி.தொடர்ந்து வாங்க
Deleteமிகவும் அருமையாக உள்ளதையா கவிதையில் சொல்லப்பட்ட கருத்துக்கள்
ReplyDeleteவாழ்த்துக்கள் மென்மேலும் சிறப்பாகத் தொடரட்டும் .
நீங்க வந்தமைக்கும் தந்தமைக்கும் நன்றிங்கம்மா
Delete