கத்திரி வெய்யிலை வெல்லுவோம்
ஆண்டில் சிலநாள் இதுபோல
ஆருடம் பலநாள் சொல்லிவரும்
தாண்டவ மாடும் வெய்யிலில்-சூரியன்
தகதக வெனவே எரிந்திடுமாம்
மரமும் செடியும் காய்வதற்கும்
மாடுகள் ஆடுகள் மடிவதற்கும்
தினமும் சிலபேர் மடிவதற்கும்-கதிரவன்
தீக் கதிரை வீசுவதேன்
மக்கள் துயரில் வாழ்வதற்கும்
மலையை நோக்கிச் செல்வதற்கும்
அக்கம் பக்கம் எல்லோரும்-சூடாய்
அலைந்தே திரிய வைப்பதுமேன்
சின்னஞ் சிறுவர் பெரியோரை
சீண்டும் கொடுமைக் காரணத்தால்
எண்ணம் யாவும் சுட்டெரிக்கும்-உடலில்
எல்லா நோயும் சேர்ந்திடுமே
வெய்யிலில் நாளும் அலைவதற்கு
வேறுவழியை தெரிந்தெடுத்து நாம்
வீணாய் சுற்றி வருவதையே-கொஞ்சம்
வேதனையோடு நிறுத்தி வைப்போம்
குளுர்சியான உணவுகளும் நன்றே
குளிர்மைப் பானைத் தண்ணீரும்
மகிழ்ச்சியான காய்கனிகள்-பச்சை
மனதில் தருமே உற்சாகம்
இந்த வேதனை எனக்குமே
இன்றும் இங்கே உள்ளதால்
நொந்த நிலையும் இதுவாகும்-உங்கள்
நோயை நீவிர்த் தடுப்பீரே
ஆருடம் பலநாள் சொல்லிவரும்
தாண்டவ மாடும் வெய்யிலில்-சூரியன்
தகதக வெனவே எரிந்திடுமாம்
மரமும் செடியும் காய்வதற்கும்
மாடுகள் ஆடுகள் மடிவதற்கும்
தினமும் சிலபேர் மடிவதற்கும்-கதிரவன்
தீக் கதிரை வீசுவதேன்
மக்கள் துயரில் வாழ்வதற்கும்
மலையை நோக்கிச் செல்வதற்கும்
அக்கம் பக்கம் எல்லோரும்-சூடாய்
அலைந்தே திரிய வைப்பதுமேன்
சின்னஞ் சிறுவர் பெரியோரை
சீண்டும் கொடுமைக் காரணத்தால்
எண்ணம் யாவும் சுட்டெரிக்கும்-உடலில்
எல்லா நோயும் சேர்ந்திடுமே
வெய்யிலில் நாளும் அலைவதற்கு
வேறுவழியை தெரிந்தெடுத்து நாம்
வீணாய் சுற்றி வருவதையே-கொஞ்சம்
வேதனையோடு நிறுத்தி வைப்போம்
குளுர்சியான உணவுகளும் நன்றே
குளிர்மைப் பானைத் தண்ணீரும்
மகிழ்ச்சியான காய்கனிகள்-பச்சை
மனதில் தருமே உற்சாகம்
இந்த வேதனை எனக்குமே
இன்றும் இங்கே உள்ளதால்
நொந்த நிலையும் இதுவாகும்-உங்கள்
நோயை நீவிர்த் தடுப்பீரே
arumai tha.ma 2
ReplyDeleteஉங்கள் வருகைக்கு நன்றிங்க சார்
Deleteஅருமை...
ReplyDeleteவெ(ளி)யில் தலை காட்ட முடியவில்லை...
/// சின்னஞ் சிறுவர் பெரியோரை
சீண்டும் கொடுமைக் காரணத்தால்
எண்ணம் யாவும் சுட்டெரிக்கும் ///
இது முன் கத்திரி.கத்திரி இன்னும் இருக்குதே நண்பரே
Deleteவெயிலை நொந்துகொள்ள எதுவுமில்லை
ReplyDeleteஎல்லாம் மனிதர்கள் செய்யும் செயல்களின் பிரதிபலன் தான்
நல்லதொரு கவிதை
உண்மைதான் இருந்தாலும் காலத்தின் சுழற்சி என்றும் எண்ணலாம்
Deleteகுளுர்சியான உணவுகளும் நன்றே
ReplyDeleteகுளிர்மைப் பானைத் தண்ணீரும்
மகிழ்ச்சியான காய்கனிகள்-பச்சை
மனதில் தருமே உற்சாகம்
உற்சாகம் தரும் கவிதை..!
உங்களின் உற்சாகத்துக்கு நன்றிங்கம்மா
Delete2011 இல் சென்னைக்கு வந்த போது தான் கத்திரி வெய்யிலைக் கண்டு களித்தேன். காலநிலைக்கேற்ப நம்மை நாம் பேணுவோம்.
ReplyDeleteஅப்போதைவிட இப்போது அதிக வெயில் உள்ளது.காரணம் தற்போது மெட்ரோ ரயில் சேவைக்காக எல்லா பக்கமும் வேலை நண்டந்து வருவதால் தூசு அதிகமாய் உள்ளது. மீண்டும் சென்னை வந்தால் நீங்கள் மெட்ரோ ரயிலில் பயணம் செய்யலாம்
Deleteவெயிலுக்கேற்ற இதமான கவிதை அய்யா
ReplyDeleteஉண்மைதான் இன்று தமிழகமே தகதகவென உள்ளது
Deleteகாலநிலை மாற்றம் நம்மை
ReplyDeleteஒவ்வொரு வகையில் பாதிக்கிறது..
அதற்கேற்ற உணவுகளும் பானங்களும்
அருந்தி காலநிலை ஒவ்வாமையை
மாற்றிக்கொள்ளலாம்... என உரைத்திடும்
அழகிய பதிவு ஐயா ..
நாமும் அதற்கேற்ப மாறத்தான் வேண்டியுள்ளது.வருகைக்கு நன்றி நண்பரே
Deleteகுளுர்சியான உணவுகளும் நன்றே
ReplyDeleteகுளிர்மைப் பானைத் தண்ணீரும்
மகிழ்ச்சியான காய்கனிகள்-பச்சை
மனதில் தருமே உற்சாகம்//
கோடைக்கு ஏற்ற குளிர்ச்சியான கவிதை.
உங்கள் வருகைக்கு நன்றிங்கம்மா
Deleteazhagiya kavidhai:)
ReplyDeleteகோடையிலும் இதமாக தங்கள் வரிகள்.
ReplyDeleteஉங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க
Deleteகத்திரி வெயிலை குளிர்விக்கும் கவிதை.
ReplyDeleteநம்மால முடிஞ்சது இதுமட்டும்தான்
Deleteகாலத்துக்கேற்ற கவிதை ... கூடவே அறிவுரை.....
ReplyDeleteஉங்களின் ரசனைக்கு நன்றி.தொடர்ந்து வாங்க
Deleteகவிதை குளுமையாக இருந்தது, கத்திரி வெய்யிலையும் மறக்க வைத்துவிட்டது.!
ReplyDeleteநீங்க வந்தமைக்கு நன்றி தொடர்ந்து வாங்க.உங்க மேலான கருத்தை தாங்க
Deleteவெய்யில் கெடுமைதான்!
ReplyDeleteநீங்களாவது வெளிநாடு சென்றதால் இளைப்பாறி இருப்பீர்கள் நாங்கள் மிகவும் கஷ்டப்படுகிறோம்.நீங்க வந்தமைக்கு நன்றிங்க அய்யா
ReplyDelete