தெய்வங்கள்

தெய்வங்கள்

தீண்டத் தகாத மனிதன் யார்

பிணத்தை தின்பவனா இல்லை
பெண்மையை அறியாத மனிதனா
தினத்தை யறியாத பிறவியா
தீண்டத் தகாத மனிதனா

உழைப்பே இல்லாமல் ஒதுங்கியே
உழைப்பவன் பணத்தை சுரண்டி
பகட்டு வாழ்க்கை வாழ்பவனும்
பாவத் தொழில் செய்யுபவனும்

அடுத்தவன் பிழைப்பை கெடுத்து
ஆயுளும் பணம் சேர்க்கும்
அற்பப் புத்திக்காரன் அறிந்தே
அன்றாடம் காய்ச்சியிடம் சுரண்டுபவன்

பதுக்கலை பலவாறு செய்யும்
தலுக்கு மேனியை வைத்து
தகாத தொழில் செய்யும்
இழுக்குப் பிழைப்பை செய்பவன்

பிச்சைக் காரனிடமும் பிடுங்கும்
எச்சில் பொறுக்கி கயவன்
எந்த நிலையிலும் சாதி(தீ)யை
எங்கும் சாதியை வளர்ப்பவன்

பொய்யே பேசிப் பிறரையும்
நம்ப வைக்கும் பூசாரி
பாவம் தீர்க்க வருவோரிடம்
பணம் கறக்கும் பொய்யாளன்

வாழ்கையே வெற்றி டமாய்
வாழ முடியாதோ ரிடமும்
குழப்பிக் கூலி கேட்கும்
கொடியோன் கொள்கை உடையோன்

இவ்வாறான இழிநிலை கொண்டவனே
அவ்வறுப்பேசி அடுத்தவனை பழிப்பான்
அவனைக் கண்டு அஞ்சாமல்
அவ்விடமே அடையாளம் காண்பீர்


Comments

  1. நன்றாக அடையாளம் காண்பித்தீர்கள்...

    தொடர வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. வந்தமைக்கும் வாழ்த்தியமைக்கும் நன்றிங்க நண்பரே

      Delete
  2. மிகச் சரியாக தீண்டத் தகாதவர்களை
    அறிமுகம் செய்தமைக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றிங்க சார்

      Delete
  3. தீண்டத் தகாதவர்களை மிக சரியாக கவிதை வரிகளில் சுட்டி காட்டினீர்கள். நல்ல கவிதை .

    ReplyDelete
    Replies
    1. நன்றிங்கம்மா .தொடர்ந்து வாங்க

      Delete
  4. அடுத்தவனை பழித்து அவதூறு செய்பவன் தீண்டத்தகாதவரே..!

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான் அதையும் சொல்ல வேண்டும் .நன்றிங்கம்மா

      Delete
  5. Replies
    1. நன்றிங்க சீனி.தொடந்து வாங்க ஆதருவு தாங்க

      Delete
  6. அரசியல்வாதிகள் நாறடிக்கப்பட்டனர் இதில் இல்லையா ? ரசித்தேன் ரசித்தேன்...!

    ReplyDelete
    Replies
    1. அதை பட்டியல் போட்டால் இன்னும் தொடர வேண்டும்.வருகைக்கும் தருகைக்கும் நன்றிங்க

      Delete
  7. அருமை!

    சீறிய நாகமாய் கூறினீர் மிகநன்றாய்
    கூரிய சொற்களால் குத்தி!.. ஏறிடவே
    பாரிலே இதுவெல்லாம் பாவியர் மூளைக்கு
    வேரிலே உள்ளதைக் கீறி!

    த ம 4

    ReplyDelete
    Replies
    1. தினமும் கவிதையில்
      திழைக்கும் இளமதியே
      கனமே தோன்றிடும்
      கவிதை மழையால்
      தமிழ் இனமே போற்றிட
      வாழ்த்துக்கு நன்றியாம்

      Delete
  8. உண்மைதான் தோழரே!

    ReplyDelete
    Replies
    1. நன்றிங்கயா .நீங்க சொன்னா சரியா இருக்கும்

      Delete
  9. அப்பப்பா..
    எத்தனை எத்தனை குணங்கள் மனிதனுக்குள்
    என ஆச்சர்யப்பட வைக்கிறது...
    இங்கனம் உள்ளோரை தீண்டினால் குற்றமே..
    ==
    அருமையான ஆக்கம் ஐயா..

    ReplyDelete
    Replies
    1. நன்றிங்க மகேந்திரேன் இன்னும் சொல்ல எவ்வளவோ இருந்தாலும் ஒன்றிரண்டை உள்ளபடி சொல்லியுள்ளேன்.தொடர்ந்து வாங்க

      Delete
  10. ஆம், நீங்கள் சொல்வது உண்மை. நற்பண்புகள் இல்லாதவர்களே தீண்டதகாதவர்.

    ReplyDelete
    Replies
    1. சரியா சொன்னீங்கம்மா .பண்பாடு இல்லாதவரை சொல்லலாம்.உங்கள் வரவு நல்வரவாகுக

      Delete
  11. தீண்டாமையின் புது இலக்கணம் அருமை! சிறப்பான கவிதை! நன்றி!

    ReplyDelete
    Replies
    1. நீங்க வந்தமைக்கு நன்றி சுரேஷ். தொடர்ந்து வாங்க

      Delete
  12. நல்ல கவியில் நன்றாக அடையாளம் காட்டினீர்கள்!

    ReplyDelete
    Replies
    1. நல்ல வார்த்தை நல்கிய தங்களுக்கு நன்றி

      Delete
  13. துஷ்டனைக் கண்டால் தூர விலகு என்பதை அழகாக சொன்னீர்கள்.

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான் இறுதியில் வந்தாலும் உறுதியாய் சொன்னீர்கள்

      Delete
  14. சொல்லியவை அனைத்தும் உண்மை ...அருமை

    ReplyDelete
    Replies
    1. நீங்க.வந்ததே எனக்குப் பெருமை ப்ரியா

      Delete
  15. உண்மை தான்,உயர்வும் இழிவும் அவரவர் குணத்தால் வருபவையே அன்றி பிறப்பால் வருபவை இல்லை என அனைவரும் உணர்ந்தால் நன்று

    ReplyDelete
    Replies
    1. நீங்க வந்தமைக்கு நன்றி டினேஷ்

      Delete

Post a Comment

தங்களின் கருத்துக்கள் பயனுள்ளதாய் இருக்கும்...

ரசித்தவர்கள்

பதிவுகள் இதுவரை

Show more