Posts

தெய்வங்கள்

தெய்வங்கள்

கவிஞர்களை நானும் போற்றுவேன்

அடுத்தப் புத்தகம் வெளியிட ஆர்வமாய் நானும் உள்ளேன் படித்துப் பார்த்து எனக்கு-சான்றாய் பதிலளித்த வலை நண்பர்களே கொடுத்த ஆதரவுக்குப் பதிலாக கோடி என்னிடம் பணமில்லை பிடித்துப் போன காரணத்தால்-தமிழ் பிறந்த மொழி தெரிந்ததனால் சிறகடித்துப் பறக்கக் கருத்தை சீக்கிரமே தாருங்கள் அடுத்ததாய் சிலந்தி போலப் பிண்ணி-சிறிதே சிற்றெறும்பு போலச் சேர்த்தே பதிவுலகில் நானும் பதிவராக பத்திரிக்கைப் பேசும் மனிதராக பைந்தமிழ் மக்களில் ஒருவராக பணிவுடன் படைக்க விரும்புகிறேன் கற்றறிந்த கவிதை நண்பர்களே கவிதையில் கண்ட சொற்பபிழையை சொல்லுங்கள் மீண்டும் மாற்றுவேன் சொல்வோரை நானும் போற்றுவேன்

நட்பில் நானும் மிதந்தேன்...

நட்பில் நானும் மிதந்தேன் நாளும் அன்பில் நெகிழ்ந்தேன் பேச வேண்டித் துடித்தேன் பேசிய பின்பு தவித்தேன் சொற்களைக் கண்டு மலைத்தேன் சொல்ல முடியாது திகைத்தேன் இன்னும் சொல்ல நினைத்தேன் இன்முகம் தேடி அலைந்தேன் அகத்துள் நினைவில் வைத்தே(ன்) அன்றே காண விழைந்தேன் வரவைக் கண்டு மகிழ்ந்தேன் வாய்ப்புத் தேடித் துடித்தேன் சொல்லிப் புகழ விழைந்தேன் சொல்லில் தடுமாறி நின்றேன் மெல்ல முறுவல் முகிழ்த்தேன் மீண்டும் மனத்தில் நினைத்தேன் வீரம் கண்டு சிலிர்த்தேன் தூரம் கேட்டுத் தொடர்ந்தேன் நேரில் காண இருந்தேன் நேரம் இன்றித் தவித்தேன் தொலைவில் இருப்பை அறிந்தேன் தூய நட்பால் நெகிழ்ந்தேன் தமிழைத் தாயாய் துதித்தேன் தாகம் தணியப் படித்தேன்

நெடுநெடுவென வளர்த்தவள்............

நெடுநெடுவென வளர்த்தவள் நேர்ப் பார்வை இல்லாதவள் சிடுசிடுவென இன்று எரிகிறாள் சினத்துடன் ஏனோத் தவிக்கிறாள் கடுகடுவெனும் காரணம் காணாது கண்ணைக் கசக்கி அழுகிறாள் விடுவிடுவென எதேயோ தேடி வழியை நோக்கியேப் பார்க்கிறாள் தடதடவென வண்டியில் அவன் தலையைக் கண்டதும் மகிழ்கிறாள் குடுகுடுவெனப் பாய்ந்து ஓடி கொஞ்சி அவனை அணைக்கிறாள் கிடுகிடுவென இடியின் சத்தம் கண்டு பயந்ததுபோல் நடிக்கிறாள் சலசலவென மழையைப் பார்த்ததும் சத்தமின்றி முத்தமும் கொடுக்கிறாள் சிடுசிடுவும் எங்கோ மறைந்தது சீக்கிரம் உண்மையும் தெரிந்தது படபடவென இதயம் துடித்ததும் பயமும் அவளுக்குத் தெளிந்தது

தேனாய் சுவையாய் இனிக்குமாம்

முள்ளு முள்ளாய் இருக்குமாம் முக்கனியுள் பெருத்து வளருமாம் வேலிபோட்ட காவல் தாண்டி வேண்டியது இனிப்பாய் மணக்குமாம் வண்ணம் ஒன்றே மஞ்சளாம் வாசனை எப்போதும் கெஞ்சலாம் வண்ணப் போர்வைப் போர்த்தியே வாழும் நாளோ சேர்த்தியாம் எல்லா நாளும் கிடைக்குமாம் எல்லோர் மனதும் விரும்புமாம் இல்லா மக்கள் மனதுமே இதனை சுவைக்க விரும்புமாம் தின்னத் தின்ன திகட்டுமாம் தேனாய் சுவையாய் இனிக்குமாம் திரும்பத் திரும்பக் கேட்குமாம் தேனில் ஊறியே சாப்பிட்டால் தேனமுதாய் மனதும் மகிழுமாம் எல்லை யில்லா மகிழ்ச்சியே எல்லோர் மனதில் இருக்குமாம் பிள்ளைமுதல் கிழவர்வரை கொள்ளைப் பிரியம் விரும்புமாம் ---பெயரென்ன???

சிரித்து மகிழ்ந்தே ஆடுமாம்

வானத்துக்கும் மேகத்துக்கும் சண்டையாம் மின்னலும் மழையும் இருக்குமாம் சூரியனுக்கும் பூமிக்கும் ஏக்கமாம் சந்தோசம் தினமும் வேண்டுமாம் எருவுக்கும் நிலத்துக்கும் கல்யாணமாம் எல்லா பயிருக்கும் உற்சாகமாம் மலருக்கும் தேனிக்கும் இன்பமாம் மகரந்தம் பூக்களின் கொண்டாட்டமாம் பயிருக்கும் பூச்சிக்கும் சண்டையாம் புழுவுக்கும் குருவிக்கும் கும்மாளமாம் பசுமைக் குளிர்ச்சியாய் இருக்குமாம் பார்க்கும் எல்லாமே மகிழ்ச்சியாம் ஆட்டுக்கும் மாட்டுக்கும் உற்சாகமாம் ஆனந்த பாட்டோடு ஊர்கோலமாம் செடிகளுக்கும் கொடிகளும் கூடுமாம் சிரித்து மகிழ்ந்தே ஆடுமாம் இதெல்லாம் காணும் உழவனுக்கு எப்போதும் கிடைக்கும் மகிழ்ச்சியாம் தப்பாக எண்ணாத அன்னாருக்கு இப்போது காணாத வறட்சியாம்

ரசித்தவர்கள்