சிரித்து மகிழ்ந்தே ஆடுமாம்
வானத்துக்கும் மேகத்துக்கும் சண்டையாம்
மின்னலும் மழையும் இருக்குமாம்
சூரியனுக்கும் பூமிக்கும் ஏக்கமாம்
சந்தோசம் தினமும் வேண்டுமாம்
எருவுக்கும் நிலத்துக்கும் கல்யாணமாம்
எல்லா பயிருக்கும் உற்சாகமாம்
மலருக்கும் தேனிக்கும் இன்பமாம்
மகரந்தம் பூக்களின் கொண்டாட்டமாம்
பயிருக்கும் பூச்சிக்கும் சண்டையாம்
புழுவுக்கும் குருவிக்கும் கும்மாளமாம்
பசுமைக் குளிர்ச்சியாய் இருக்குமாம்
பார்க்கும் எல்லாமே மகிழ்ச்சியாம்
ஆட்டுக்கும் மாட்டுக்கும் உற்சாகமாம்
ஆனந்த பாட்டோடு ஊர்கோலமாம்
செடிகளுக்கும் கொடிகளும் கூடுமாம்
சிரித்து மகிழ்ந்தே ஆடுமாம்
இதெல்லாம் காணும் உழவனுக்கு
எப்போதும் கிடைக்கும் மகிழ்ச்சியாம்
தப்பாக எண்ணாத அன்னாருக்கு
இப்போது காணாத வறட்சியாம்
மின்னலும் மழையும் இருக்குமாம்
சூரியனுக்கும் பூமிக்கும் ஏக்கமாம்
சந்தோசம் தினமும் வேண்டுமாம்
எருவுக்கும் நிலத்துக்கும் கல்யாணமாம்
எல்லா பயிருக்கும் உற்சாகமாம்
மலருக்கும் தேனிக்கும் இன்பமாம்
மகரந்தம் பூக்களின் கொண்டாட்டமாம்
பயிருக்கும் பூச்சிக்கும் சண்டையாம்
புழுவுக்கும் குருவிக்கும் கும்மாளமாம்
பசுமைக் குளிர்ச்சியாய் இருக்குமாம்
பார்க்கும் எல்லாமே மகிழ்ச்சியாம்
ஆட்டுக்கும் மாட்டுக்கும் உற்சாகமாம்
ஆனந்த பாட்டோடு ஊர்கோலமாம்
செடிகளுக்கும் கொடிகளும் கூடுமாம்
சிரித்து மகிழ்ந்தே ஆடுமாம்
இதெல்லாம் காணும் உழவனுக்கு
எப்போதும் கிடைக்கும் மகிழ்ச்சியாம்
தப்பாக எண்ணாத அன்னாருக்கு
இப்போது காணாத வறட்சியாம்
//இதெல்லாம் காணும் உழவனுக்கு
ReplyDeleteஎப்போதும் கிடைக்கும் மகிழ்ச்சியாம்//
இதுவரை மகிழ்ச்சி பொங்கும் பாடல்.
பாராட்டுக்கள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.
//தப்பாக எண்ணாத அன்னாருக்கு
இப்போது காணாத வறட்சியாம்//
வறட்சி நீங்கி மீண்டும் சுபிட்சம் கிடைக்க அனைவரும் சேர்ந்து பிரார்த்திப்போமாக!
எல்லோருமே வேண்டுவோம் நன்றாக மழைப் பொழிய.உங்களின் வருகைக்கு நன்றிங்க அய்யா
Deleteநல்ல கவிதை.. :)
ReplyDeleteநன்றிங்க ப்ரியா.தொடர்ந்து வாங்க
Deleteகாலம் செய்யும் கோலம்!
ReplyDeleteஇன்னும் இருக்கே நண்பரே.தொடர்ந்து வாங்க ஆதரவு தாங்க
Deleteஇதெல்லாம் காணும் உழவனுக்கு
ReplyDeleteஎப்போதும் கிடைக்கும் மகிழ்ச்சியாம்
தப்பாக எண்ணாத அன்னாருக்கு
இப்போது காணாத வறட்சியாம்//
வறட்சி நீங்கி பசுமை வந்தால் உழவனுக்கு மகிழ்ச்சி.
உழவன் மகிழ்ந்தால் அனைத்து மக்களும் மகிழலாம்.
நல்ல கவிதை வாழ்த்துக்கள்.
சரியாச் சொன்னீங்க உழவன் மகிழ்ந்தால்தான் நாமும் மகிழ்ச்சியாக இருக்க முடியும்
Deleteவறட்சி நீங்கி உழவு உயர்ந்து நாமும் உயர்வோமாக...
ReplyDeleteவாழ்த்துக்கள்...
வாழ்த்துக்கு நன்றிங்க தனபாலன் சார்
Deleteபசுமைக் குளிர்ச்சியாய் இருக்குமாம்
ReplyDeleteபார்க்கும் எல்லாமே மகிழ்ச்சியாம்
பசுமை விரைவில் தழைத்து
சுமைகள் தீரட்டும் ..!
நிச்சயம் மழைவரும் சீக்கிரம் உழவனின் துயர் தீரும்
Deleteஇந்த மகிழ்ச்சி நிரந்தரமாக இருக்க வேண்டும்...
ReplyDeleteஅழகிய கவிதை
நன்றிங்க சௌந்தர்.எனது விருப்பமும் அதுவே.வந்தமைக்கு நன்றி
Deleteஇயற்கை தந்த இன்பமதை
ReplyDeleteஇனிதாய் தந்தீர் கவியாக
படைக்குதே மகிழ்வை பாக்களுமே
பாவலனே வாழி நலமாக!!!
த ம 5
உங்களின் வாழ்த்துக்கும் கவிதை பாட்டுக்கும் நன்றிங்க இளமதி.தொடர்ந்து வாங்க ஆதரவு தாங்க.
Deleteஅடை மழை பொழிந்து ஆறு குளம் நிறைந்து உழவர் மனம் குளிர அனைத்து உயிர்களும் மகிழ எங்கும் பசுமை பொங்க இறைவனை பிரார்த்திப்போம்.
ReplyDeleteஉங்களின் பிராத்தனை நடக்கட்டும் எல்லோருக்கும்
Deleteவறட்சி நீங்க வேண்டும் கடவுளே
ReplyDeleteநாமும் குளிர்மையா வாழ!
உங்கள் வருகைக்கும் .பகிர்வுக்கும் நன்றிங்க காசிராஜலிங்கம் அவர்களே
Deleteஉலகத்துத் தோற்றங்கள் அனைத்தும் எதோ ஒரு பிரதிபலிப்பைக் காட்டிக் கொண்டே இருக்கும். மனிதனுடன் மற்றவை அனைத்தையும் ஒப்பிட்டமை அழகு
ReplyDeleteவேறுபட்டு இருந்தாலும் உயிரில் கலந்த உணர்வுதானே.நீங்கள் வந்தமைக்கும் கருத்து தந்தமைக்கும் நன்றிங்க சந்திரகௌரி
Deleteமழையைப் பற்றி கவிமழை பொழிந்திருக்கிறீர்கள்.மழை என்றவுடனேயே நிலம் குளிர்வதுடன் மனமும் குளிர்கிறது
ReplyDeleteஉங்கள் மனம் குளிர மழையும் வந்தால் சரிதான் டினேஷ் சுந்தர்
Deleteவறட்சி நீங்கட்டும்
ReplyDeleteஉழவு உயரட்டும்
வாழ்வு மலரட்டும்
மகிழ்ச்சியும் பெருகட்டும் திருவாளர்.ஜெயகுமார் அவர்களே
Deleteகடைசி வரிகள் உண்மையை சொல்லின! அழகான கவிதை! நன்றி!
ReplyDeleteஉங்களின் பாராட்டுக்கும் மிக்க நன்றி சுரேஷ்
Deleteமகிழ்ச்சி...
ReplyDeleteநீங்கள் மகிழ்ச்சி அடைந்தமைக்கு நன்றிங்க கருண்
Deleteமிக மிக அருமை தொடர வாழ்த்துக்கள்
ReplyDeleteஉங்கள் வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றிங்க சார்
Deletetha.ma 9
ReplyDeleteதாலாட்டு!
ReplyDeleteஅய்யா சொன்னா சரியா இருக்கும் .நன்றிங்க அய்யா
Deleteகவிமழை.
ReplyDeleteமரங்கள் சிரித்துமகிழ மழைத்துளியே நீவருவாயே...
உண்மைதான் நம்மைப் போல மரங்களும் செடிகளும் மகிழ்ச்சியடையும்..உங்கள் வருகைக்கு நன்றிங்க மாதேவி
Deleteநல்லதொரு கவி!
ReplyDeleteநன்றிங்க ஜனா அவர்களே .தொடர்ந்து தளத்துக்கு வாங்க
Delete//எருவுக்கும் நிலத்துக்கும் கல்யாணமாம்
ReplyDeleteஎல்லா பயிருக்கும் உற்சாகமாம்//
எரு நிலத்திற்கு உரமூட்டுவதை சொல்லும் அருமையான வரி!
//பசுமைக் குளிர்ச்சியாய் இருக்குமாம்
பார்க்கும் எல்லாமே மகிழ்ச்சியாம்//- ஆமாம், குளிர்ச்சியான பசுமை மகிழ்ச்சிதானே
//இதெல்லாம் காணும் உழவனுக்கு
எப்போதும் கிடைக்கும் மகிழ்ச்சியாம்
தப்பாக எண்ணாத அன்னாருக்கு
இப்போது காணாத வறட்சியாம்// வறட்சி நீங்கி பசுமையும் உழவரின் மகிழ்ச்சியும் பெருக வேண்டும் என்று வேண்டுவோம்.
அழகான கவிதை.
கிரேஸ் உங்கள் வருகை எனக்கு மகிழ்சியளிக்கிறது தொடர்ந்து வாங்க
Delete//ஆனந்த பாட்டோடு ஊர்கோலமாம்
ReplyDeleteசெடிகளுக்கும் கொடிகளும் கூடுமாம்
சிரித்து மகிழ்ந்தே ஆடுமாம்// நிலம் குளிர்ந்து பசுமையின் சிரிப்பை காண்போம்!
ஆமாம் சீக்கிரம் மழையும் வரட்டும் சிந்தனை இன்னும் தரட்டும்.நீங்க வந்தமைக்கு நன்றிங்க
Deleteநாட்டுல நல்ல மனுஷனுங்க குறைஞ்சி போயிட்டாங்க போல அதான் மழையும் வேடிக்கை காட்டுது, நல்ல கவிதை...!
ReplyDeleteநல்லவங்க கெட்டவங்க எல்லோருமேதான் காரணம்.தங்கள் வருகைக்கு நன்றி
Deleteவறட்சியில் வாடும் விவசாயியாய் அவதாரம் எடுத்தாலும் உங்கள் கவிதையில் ,கற்பனையில் இல்லை வறட்சி !
ReplyDeleteநன்றிங்க பகவான்ஜி.தொடர்ந்து வாங்க ஆதரவு தாங்க
Delete''..இதெல்லாம் காணும் உழவனுக்கு
ReplyDeleteஎப்போதும் கிடைக்கும் மகிழ்ச்சியாம்
தப்பாக எண்ணாத அன்னாருக்கு
இப்போது காணாத வறட்சியாம்...''
இறுதியில் சோகம் தானே!.
இனிய வரிகள் நல்வாழ்த்து.
வேதா. இலங்காதிலகம்.
உங்கள் வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றிங்கம்மா
Deleteவறட்சியில் பழைய மகிழ்ச்சி எழுச்சி தரும்.
ReplyDeleteஅருமைக் கவிதைக்கு வாழ்த்துகள். தொடர்க..
வாழ்த்துக்கள் வழக்கரிங்கரே.திடர்ந்து வாங்க
Delete