நட்பில் நானும் மிதந்தேன்...
நட்பில் நானும் மிதந்தேன்
நாளும் அன்பில் நெகிழ்ந்தேன்
பேச வேண்டித் துடித்தேன்
பேசிய பின்பு தவித்தேன்
சொற்களைக் கண்டு மலைத்தேன்
சொல்ல முடியாது திகைத்தேன்
இன்னும் சொல்ல நினைத்தேன்
இன்முகம் தேடி அலைந்தேன்
அகத்துள் நினைவில் வைத்தே(ன்)
அன்றே காண விழைந்தேன்
வரவைக் கண்டு மகிழ்ந்தேன்
வாய்ப்புத் தேடித் துடித்தேன்
சொல்லிப் புகழ விழைந்தேன்
சொல்லில் தடுமாறி நின்றேன்
மெல்ல முறுவல் முகிழ்த்தேன்
மீண்டும் மனத்தில் நினைத்தேன்
வீரம் கண்டு சிலிர்த்தேன்
தூரம் கேட்டுத் தொடர்ந்தேன்
நேரில் காண இருந்தேன்
நேரம் இன்றித் தவித்தேன்
தொலைவில் இருப்பை அறிந்தேன்
தூய நட்பால் நெகிழ்ந்தேன்
தமிழைத் தாயாய் துதித்தேன்
தாகம் தணியப் படித்தேன்
நாளும் அன்பில் நெகிழ்ந்தேன்
பேச வேண்டித் துடித்தேன்
பேசிய பின்பு தவித்தேன்
சொற்களைக் கண்டு மலைத்தேன்
சொல்ல முடியாது திகைத்தேன்
இன்னும் சொல்ல நினைத்தேன்
இன்முகம் தேடி அலைந்தேன்
அகத்துள் நினைவில் வைத்தே(ன்)
அன்றே காண விழைந்தேன்
வரவைக் கண்டு மகிழ்ந்தேன்
வாய்ப்புத் தேடித் துடித்தேன்
சொல்லிப் புகழ விழைந்தேன்
சொல்லில் தடுமாறி நின்றேன்
மெல்ல முறுவல் முகிழ்த்தேன்
மீண்டும் மனத்தில் நினைத்தேன்
வீரம் கண்டு சிலிர்த்தேன்
தூரம் கேட்டுத் தொடர்ந்தேன்
நேரில் காண இருந்தேன்
நேரம் இன்றித் தவித்தேன்
தொலைவில் இருப்பை அறிந்தேன்
தூய நட்பால் நெகிழ்ந்தேன்
தமிழைத் தாயாய் துதித்தேன்
தாகம் தணியப் படித்தேன்
நட்பில் நானும் மிதந்தேன்
ReplyDeleteநாளும் அன்பில் நெகிழ்ந்தேன்
பேச வேண்டித் துடித்தேன்
பேசிய பின்பு தவித்தேன்
அருமை!
நன்றிங்கயா,நீங்க சொன்னதில் எனக்கு மகிழ்ச்சியே
Deleteதங்களின் தினசரி கவிதைகளை படித்தேன் !ரசித்தேன் !மலைத்தேன் !
ReplyDeleteஉங்கள் வருகை தினமும் கண்டு மகிழ்ந்தேன்
Deleteநட்பைக் கண்டு சிலிர்க்கிறேன்
ReplyDeleteஅனைவரும் பெறவே விழைகிறேன்;
நட்பா? கவிதையா? எதைப் பாராட்ட
இரண்டுமே மனங்களை ஈர்க்க;
நன்றி!
நன்றியால் அகமும் குளிர்ந்தேன் மகிழ்ந்தேன்
Deleteநட்பின் சிறப்பு அருமை... வாழ்த்துக்கள் பல... நன்றி...
ReplyDeleteஆம் நண்பரே உங்களைபோன்ற நண்பர்களின் வருகையை தினமும் வேண்டி நின்றேன்.கண்டேன்.மகிழ்ந்தேன்
Deleteநல்ல நட்பை நாள்தோறும் தேடியதை
ReplyDeleteசொல்ல வந்தீரோ சிந்தை சில்லெனவே
வல்ல கவிதனை வகையாய்த் தினம்பாடி
வெல்லுகிறீரே நட்புகளை அன்பினால்...
த ம. 5
அன்பானேன் அடியானேன் நண்பனானேன் நன்றியோடு உள்ளம் மகிழ்ந்தேன்
ReplyDeleteகவித்தேன் குடித்தேன்.
ReplyDeleteவருகைக் கண்டு மகிழ்ந்தேன்
Deleteதேனில் ஊறிக் களித்தேன்
ReplyDeleteதித்திக்கும் அருமையான கவிதை
தொடர வாழ்த்துக்கள்
உங்கள் மகிழ்ச்சிக்கு வாழ்த்துக்கள் .என்னை வாழ்த்தியமைக்கு நன்றிகள்
Deleteநடபின் பெருந்தக்க யாவுள
ReplyDeleteஅருமை அய்யா
ரசித்தேன் சுவைத்தேன்
நன்றிங்கய்யா.நீங்க வந்தமைக்கும் ரசித்தமைக்கும்
DeleteHave you ever considered creating an ebook or guest authoring on other
ReplyDeleteblogs? I have a blog based upon on the same subjects you discuss and would really like to have you share
some stories/information. I know my readers would enjoy your work.
If you are even remotely interested, feel free to send me an
e-mail.
my webpage ... article-spider
yes i am interested for further talk you may contact me 9600166699
Deleteதூய நட்பால் நெகிழ்ந்தேன்
ReplyDeleteநட்பின் பெருமையை சிறப்பாக பகிர்ந்தமைக்குப் பாராட்டுக்கள்..
நெகிழ்ச்சிக்கும் மகிழ்ச்சிக்கும் நன்றிங்கம்மா
Deleteதேன் ஊறும் கவிதையை ரசித்"தேன்" நன்றி!
ReplyDeleteநினைத்தேன் நீங்களும் ரசிப்பீர்கள் என்று .மகிழ்ந்தேன் உங்கள் வரவைக்கண்டு
Deleteநட்பால் நாளும் நமக்கு மகிழ்வுதான் கவியாழி ஐயா.
ReplyDeleteஅருமையான கவிதை. வாழ்த்துக்கள்.
உண்மைதாங்க பெத்தவங்களைப் போல எல்லோருக்கும் அவசியமானது நட்புதான். உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிங்க
Deleteஇரசித்தேன் மகிழ்ந்தேன் வியந்தேன்
ReplyDeleteநன்றிங்க அழ.பகீரதன் அவர்களே
Deleteநட்பில் நானும் மிதந்தேன்
ReplyDeleteநாளும் அன்பில் நெகிழ்ந்தேன்
தூய நட்பால் நெகிழ்ந்தேன் //
நட்பின் பெருமை கவிதை அருமை.
உங்கள் வருகைக்கும் பெருமைக்கும் நன்றிங்கம்மா
Deleteநன்றிங்க சார்
ReplyDeleteநட்பின் அருமையுணர்ந்த மனமொன்று நட்பைத் தேடியடையும் வழிகளை அழகாய் உணர்த்திய கவிதை அருமை. பாராட்டுகள் ஐயா.
ReplyDeleteநன்றிங்க நீங்க வந்தமைக்கும் கருத்துப் பகிர்ந்தமைக்கும்
Deleteஅன்பின் ஆழம் புரிகிறது
ReplyDeleteஅழகாய் வடித்த கவிதைலே
முன் பின் தெரியா உறவென்றாலும்
முள்ளாய் தைக்கும் விலகிய நட்பின் தூரம்
இணைந்தே இருப்போம் இணையத்தில்
இதயம் மகிழ எந்நாளும் வரும்
துயரே மறப்பாய் ஐயா நீ
தூய தமிழின் துணைகொண்டு .......
நட்பாய் இருக்க நானும்
Deleteநலமே வாழ்த்த நீங்களும்
அன்பாய் இருப்போம்
அன்னைத் தமிழில்
அழகாய் படைப்போம்
ஆனந்தம் பெற்று மகிழ்வோம்
என்றும் நட்புகள் தொடரட்டும். வாழ்த்துகள்.
ReplyDeleteதொடரும் தொடருங்கள் ...
Deleteவீரம் கண்டு சிலிர்த்தேன்
ReplyDeleteதூரம் கேட்டுத் தொடர்ந்தேன்
நேரில் காண இருந்தேன்
நேரம் இன்றித் தவித்தேன் //தொடருங்கள் ...
வெளிநாட்டில் பணமின்றி கஷ்டப்படும் சகோதரி கடந்த பதினோரு வருடங்களாக கஷ்டப்படுகிறார் அதை எண்ணியே தனியாளாய் தவிக்கும் அதுவும் தனியாக இருக்கும் சகோதரிக்காக இந்த வரிகளைக் குறிப்பிட்டேன்
Deleteநேரம் இன்றித்தவித்தேன்!///ம்ம் அருமையான வரிகள் ஐயா!
ReplyDeleteநேரம் கிடைக்கும்போது தவறாம வாங்க அல்லது இமெயிலில் எல்லாப் பதிவுகளையும் பெறவும்.வருகைக்கு நன்றி
Delete