தேனாய் சுவையாய் இனிக்குமாம்
முள்ளு முள்ளாய் இருக்குமாம்
முக்கனியுள் பெருத்து வளருமாம்
வேலிபோட்ட காவல் தாண்டி
வேண்டியது இனிப்பாய் மணக்குமாம்
வண்ணம் ஒன்றே மஞ்சளாம்
வாசனை எப்போதும் கெஞ்சலாம்
வண்ணப் போர்வைப் போர்த்தியே
வாழும் நாளோ சேர்த்தியாம்
எல்லா நாளும் கிடைக்குமாம்
எல்லோர் மனதும் விரும்புமாம்
இல்லா மக்கள் மனதுமே
இதனை சுவைக்க விரும்புமாம்
தின்னத் தின்ன திகட்டுமாம்
தேனாய் சுவையாய் இனிக்குமாம்
திரும்பத் திரும்பக் கேட்குமாம்
தேனில் ஊறியே சாப்பிட்டால்
தேனமுதாய் மனதும் மகிழுமாம்
எல்லை யில்லா மகிழ்ச்சியே
எல்லோர் மனதில் இருக்குமாம்
பிள்ளைமுதல் கிழவர்வரை
கொள்ளைப் பிரியம் விரும்புமாம்
---பெயரென்ன???
முக்கனியுள் பெருத்து வளருமாம்
வேலிபோட்ட காவல் தாண்டி
வேண்டியது இனிப்பாய் மணக்குமாம்
வண்ணம் ஒன்றே மஞ்சளாம்
வாசனை எப்போதும் கெஞ்சலாம்
வண்ணப் போர்வைப் போர்த்தியே
வாழும் நாளோ சேர்த்தியாம்
எல்லா நாளும் கிடைக்குமாம்
எல்லோர் மனதும் விரும்புமாம்
இல்லா மக்கள் மனதுமே
இதனை சுவைக்க விரும்புமாம்
தின்னத் தின்ன திகட்டுமாம்
தேனாய் சுவையாய் இனிக்குமாம்
திரும்பத் திரும்பக் கேட்குமாம்
தேனில் ஊறியே சாப்பிட்டால்
தேனமுதாய் மனதும் மகிழுமாம்
எல்லை யில்லா மகிழ்ச்சியே
எல்லோர் மனதில் இருக்குமாம்
பிள்ளைமுதல் கிழவர்வரை
கொள்ளைப் பிரியம் விரும்புமாம்
---பெயரென்ன???
சுவையான பளப்பள பலப்பல பலா... எங்க ஊர் சிறுமலைக்கு வாங்க... மனது திருப்தி அடைந்து விடும்...
ReplyDeleteவராவிட்டால் என்ன எனக்கு அனுப்பிவையுங்கள் நண்பரே
Deleteஉங்களின் கவிதைக் கேள்விக்கு பதில் சொல்லவேண்டியது நம்ம 'ஸ்கூல் பையன் 'ன்னு நினைக்கிறேன் !
ReplyDeleteநீங்களும் சொல்லலாம் நானும் கேட்டுக்குவேன் நண்பரே.வந்தமைக்கும் பதில் தந்தமைக்கும் நன்றிங்க
Deleteமுக்கனி எனும்போதே அதுல ஒரு கனியான பலாதான்! ஆமாம் விடை கண்டுபிடிச்சவங்களுக்கு என்ன பரிசு சார்? தினமும் அழகான கவிதை உலா வாழ்த்துக்கள்..!
ReplyDeleteத.ம-3
ஏலகிரி பலாபழம் கூட நல்லாவே இருக்கும்.வந்தமைக்கு நன்றிங்க
Deleteமுக்கனியில் இரண்டாம் கனி ..
ReplyDeleteமூவுலகும் விரும்பும் கனி
பற்று வைத்த கனிக்காக
பாதி சொத்தை எழுதிடலாம்
ருசி அவ்வாறு நன்றாய் இருக்கும் நேற்றுதான் ஒரு பலாப் பழம் வாங்கி நிறைய சாப்பிட்டேன்.வந்தமைக்கும் கருத்து சொன்னமைக்கும் நன்றிங்க
Deleteஎல்லை யில்லா மகிழ்ச்சியே
ReplyDeleteஎல்லோர் மனதில் இருக்குமாம்
பலாப்பழம் ...!
உங்க பதிவில மம்பலதோன் பற்றி சொன்னீர்கள் நான் பலாவைப் பற்றி சொன்னேன்.இரண்டுமே சுவைமிகு கனிகள்தான் என்னே ஒற்றுமை
Deleteபலாப்பழம் போன்ற இனிமையான சுவையுள்ள கவிதை. பாராட்டுக்கள்.
ReplyDeleteநீங்க வாழ்த்தியமை முழுப் பலாபலத்தையே சாப்பிட்ட திருப்தியாய் உள்ளது வருகைக்கு நன்றி
Deleteபல பல வார்த்தை தேடி
ReplyDeleteபக்குவமாய் விடையை சொன்ன பலா.
உண்மைதான் சசி கலா .நீங்களே கவிதை பாடிவிட்டீர்கள்
Deleteகுழந்தைப் பாடல் சந்தமுடன் பாடலாம்!
நன்றிங்கயா.குழந்தைப் பாட்டாய் சொல்லியமைக்கு நன்றிங்கயா
Deleteஇனிமையான கவிதந்தீர்கள் சகோ! வாழ்த்துக்கள்!...
ReplyDeleteதேனினிமை தருமே தெவிட்டா கனியினிமை
வானினிமை தருமே வளமான மழையினிமை
பாவினிமை தருமே பைந்தமிழ் பண்னினிமை
ஏதினிமை தருமிங்கே இல்லாது உன்கவியே...
த ம. 7
ஏதினிமை தருமிங்கே இல்லாது உன்கவியே...
Deleteஉங்கள் கவியே எனக்கு ஊக்கம்தரும் மருந்தை,விருந்தாய் உள்ளது.தினம் உங்கள் கவியை கேட்பதே சுகமாய் உள்ளது .வருகைக்கு நன்றிங்க இளமதி
பலாப்பழம்! என்றே சொல்லவும் வேண்டுமோ? குழந்தைக் கவிஞராக வந்தமைக்கு வாழ்த்துக்கள்!
ReplyDeleteநன்றிங்க அய்யா.அப்படி எனக்கு வாய்ப்பை கொடுத்தமைக்கு நன்றிங்கயா.தொடர்ந்து வாங்க ஆதரவு தாங்க
Deleteபலாப்பழம்...
ReplyDeleteபதிலைச் சொன்னா போதுமா பழத்தை எனக்கு தரணுமே கருண்?
Deleteகோரிக்கையற்றுக் கிடக்குதண்ணே இங்கு வேரிற் பழுத்த...................
ReplyDeleteஉண்மைதான் நண்பரே .வேரிலும் இருக்கும் வெளியிலும் தொங்கும் சுவையானது,வருகைக்கு நன்றிங்க நண்பரே
Deleteவிடுகதை போல் வித்தியாசமாக
ReplyDeleteகவிதை படைத்தது மனம் கவர்ந்தது
வாழ்த்துக்கள்
உங்கள் வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றிங்க சார்.
Deletetha.ma 11
ReplyDeleteநன்றிங்க சார்
Deleteசுவையான கவிதை
ReplyDeleteஒன்றாம் வகுப்பு பாட புத்தகத்திலே "மாம்பழமா மாம்பலம்" என்று படித்த ஞாபகம்
இப்போது பலா 'வையும் சுவைத்தாயிற்று உங்கள் கவிதை மூலம்.
நன்றிங்க வருகைக்கும் உங்கள் பகிர்வுக்கும் நன்றிங்க.தொடர்ந்து வாங்க ஆதரவு தாங்க
ReplyDeleteஇனிய பழக்கவி தந்தீர்கள்.
ReplyDeleteகணவரும் மகளும் பறந்தோடி வருகிறார்கள் பழத்தை அள்ள :))
நிறையவே சாப்பிடுங்கள் நித்தமும் சுவையை உணர்ந்து சாப்பிடுங்கள்.வருகைக்கு நன்றி
Deleteதேனாய் சுவையாய் இனிக்குமாம்//
ReplyDeleteதேனில் ஊறிய பலா மிகவும் சுவையாக இருக்கும்.
மீண்டும் மீண்டும் சுவைத்துச் சாப்பிட்டேன்.உங்கள் வருகையைபோல நன்று.
Deleteபலாப்பழ கவிதை ஜோர்!
ReplyDeletekbjana.blogspot.com
நன்றிங்க சார்.தொடர்ந்து வாங்க
Deleteபலாப்பழ கவிதை இனித்தது! நன்றி!
ReplyDeleteவந்தமைக்கு நன்றிங்க சுரேஷ்.தொடர்ந்து வாங்க ஆதரவு தாங்க
Deleteபலாப்பழ கவிதை அருமை
ReplyDeleteதாமதமா வந்தாலும் தப்பில்லாம சொன்னீங்க.உங்கள் வருகைக்கும் பதிலுக்கும் நன்றிங்கம்மா
Delete